'5 மாத கர்ப்பிணிப் பெண் 10 கிமி ஓட்டம்’ – ஆச்சர்யப்படுத்திய அங்கிதா!
TCS World 10K Bengaluru 2020 என்பது – பெங்களூரில் நடைபெறும் மாராத்தான் போட்டி. இந்த போட்டியில் கலந்துகொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் 62 நிமிடத்தில் 10 கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளார். இதன் மூலம் அவர் மற்றவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார்.
அங்கிதா கவுர், கடந்த 9 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறார். மூச்சு விடுவதைப்போல, தனக்கு ஓட்டம் என்பது இயல்பானது என்கிறார் அவர்.
"கடந்த 9 ஆண்டுகளாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நான் செய்து வரும் ஒரு விஷயம் இது. நீங்கள் எழுந்து வெளியே ஓடுவதற்கு செல்கிறீர்கள். நீங்கள் காயமடைந்து அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, ஓய்வு எடுக்க நேரிடும். ஆனால் நான் அப்படியில்லாது, தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக தவறாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன், எனவே இது எனக்கு மூச்சு விடுவது போன்றது. இது மிகவும் இயல்பாகவே எனக்கு வருகிறது.”
ரன்னிங் மிகவும் பாதுகாப்பான ஒரு விஷயம். கர்ப்ப காலத்திலலும் இது ஒரு நல்ல உடற்பயிற்சி, என்கிறார் அங்கிதா.
அடிப்படையில் அவர் ஒரு இன்ஜினியர். டி.சி.எஸ் வேர்ல்ட் 10 கே (running TCS World 10K) மராத்தானில் 2013ம் ஆண்டிலிருந்து பங்கேற்று ஓடிக்கொண்டிருக்கிறார். பெர்லின் (மூன்று முறை), பாஸ்டன் மற்றும் நியூயார்க் போன்ற ஐந்து, ஆறு சர்வதேச மராத்தான்களிலும் பங்கேறிருக்கிறார்.
”இந்த உடற்பயிற்சி செயலியை பயன்படுத்துவதை நான் மிகவும் விரும்பினேன். அது யூஸர் ஃபிரண்ட்லியாக இருந்தது. செயலியை ஸ்டார் செய்ததும், அது நாம் கடந்த நேரத்தை கணக்கிடும். உண்மையான ரேஸில் எப்படி நடக்கிறதோ அதைப்போல,” என்று கூறிய அவரிடம், “இந்த ஆண்டு மாராத்தானுக்கு எப்படி தயாரானீர்கள் என்று கேட்டபோது,
“நான் தினமும் 5-8 கி.மீட்டர் வரை மெதுவாக ஓடுவேன்,” என்றார்.
ஓடியும் இடைவெளி தேவைப்பட்ட நேரங்களில் நடந்தும் செல்வேன். நான் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். அதனால் என் உடல் முன் இருந்ததை விட வித்தியாசமாக இருக்கிறது,” என்றார்.
முன்னதாக நான் டி.சி.எஸ் 10 கே மரத்தானில் பதக்கங்களை வென்றுள்ளேன், ஆனால் இந்த முறை இடைவெளி எடுத்து நடக்க வேண்டியதிருந்ததால் என்னால் முடியவில்லை.
"டி.சி.எஸ் வேர்ல்ட் 10 கே-வில் பங்கேற்பதற்கான உங்கள் முடிவு குறித்து, உங்கள் மகப்பேறு மருத்துவர் என்ன சொன்னார்?”
"இது முற்றிலும் ஆரோக்கியமானது என்று என் மருத்துவர் கூறினார். உண்மையில் அவர் நான் முன்னேறிச் செல்லவும், ஓடவும் என்னை ஊக்குவித்தார். வேகமாக ஓட வேண்டாம் என்று அவர் எனக்கு அறிவுறுத்தினார்.”
"எனக்கு எந்த சிக்கலும் இல்லை, எனவே முன்னோக்கிச் சென்று என் ஓட்டத்தை தொடர எனக்கு ஒரு பச்சை சமிக்ஞை வழங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடன் இருந்த என் பிசியோதெரபிஸ்ட் கூட மெதுவாக ஓட என்னை ஊக்குவித்தார், ஏனெனில் இது மிகவும் ஆரோக்கியமானது எனக்கும், என் குழந்தைக்கும்," எனகிறார் அங்கிதா.
உங்கள் குடும்பத்தார் என்ன சொன்னார்கள்?
ஆரம்பத்தில், என் அம்மாவுக்கு இது பற்றி தெரியவில்லை. விளையாட்டைத் தொடர அவர் எப்போதும் என்னை ஊக்குவித்தார். எனவே, மருத்துவர் ஓகே சொல்லிவிட்டார் என்று நான் அம்மாவிடம் சொன்னபோது, அவரும் ஒப்புக்கொண்டார். என் அப்பா எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார்.
”நான் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதை நினைத்து அவர் பெருமைப்பட்டார். அவர் ஒரு விளையாட்டு வீரராக இருந்ததால், என்னை ஊக்கப்படுத்திக் கொண்டேயிருந்தார். என் கணவரும் முற்றிலும் ஆதரவளித்து வருகிறார், எல்லா நேரமும் என்னுடன் இருக்கிறார். எனவே, நான் அந்த வகையில் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறுவேன்,” நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் அங்கிதா