உடல் எடை குறைக்க உதவும் 5 யோகா ஆசனங்கள்!
பவர் யோகாவில் ஈடுபடுவதோ, 108 சூரிய நமஸ்காரங்கள் செய்வதோ உடல் எடையை குறைத்துவிடாது. எடை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் செய்து பழக வேண்டிய முக்கிய யோகாசனங்களை பார்க்கலாம்.
யோகாவால் உடல் எடை குறைக்க முடியுமா? இந்த கேள்விக்கான பதில் நுணுக்கங்களில் உள்ளது. பலரும், உடல் எடையை குறைக்க தினமும் 108 சூரிய நமஸ்காரங்கள் செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். இதே போல, ஆற்றல் மிக்க பிராணயமம் செயல்முறையையும் பின்பற்றுகின்றனர்.
ஆனால், இவை உண்மையில் தேவையா என்பது தான் கேள்வி. உடல் எடையில் முக்கியப் பிரச்சனை வயிற்றுப்பகுதி சதை தன. ஆனால் வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்கை தீவிர உடற்பயிற்சி மட்டும் வழியல்ல. பலருக்கு வயிற்றில் உள்ள கூடுதல் கொழுப்பு, கிடை கோரிஸ்டால் மற்றும் ஜீரணப்பகுதியில் வேறுபட்ட மைக்ரோப்கள் இல்லாதது தான்.
மிகை கோரிஸ்டால் (cortisol) புண்ணை அதிகமாக்கி, மோசமான சுரப்பி சமநிலையை உண்டாக்குகிறது. இது மன அழுதத்தை அதிகரித்து, ஜீரண சக்தி, எதிர்ப்பு சக்தி, சுரப்பிகள் ஆகியவற்றை பாதித்து, எடைக் குறைப்பு தன்மையையும் பாதிக்கிறது. பலரும் எடை குறையாமல் இருக்க இது முக்கிய காரணம்.
இந்நிலையில், தீவிர உடற்பயிற்சி செய்வதால் அதிக பலன் கிடைத்துவிடாது. மன அழுத்தத்தை குறைத்து, சுரப்பி சமநிலையை மற்றும் லிம்பேட்டிக் அமைப்பை சீராக்கும் வழிகள் தேவை.
இந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவக்கூடிய முக்கிய ஆசங்களை பார்க்கலாம்:
சர்வாங்காசனம்
உங்களுக்கு செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் அல்லது கழுத்துப்பகுதியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றால், இந்த ஆசனம் மிகவும் ஏற்றது. தோளில் நின்றபடி, முகம் மார்பகம் மீது இடிக்கும் நிலையில், தைராய்டு சுரப்பு தூண்டப்படுகிறது.
இதனால், ஜீரணம், இரத்த ஓட்டம், லிம்பேட்டிக், எண்டோகிரைன் மற்றும் நரம்பு மண்டலம் சீராகின்றன. இந்த அமைப்பு மன அமைதி மற்றும் பொறுமையையும் மேம்படுத்துகிறது. மன அழுத்தம் குறைந்து, எடை குறையவும் இது உதவுகிறது. முறையான வழிகாட்டுதலுடன் மேற்கொள்வது அவசியம்.
தனுராசனம்
வயிற்றை அழுத்திக்கொண்டு, முழங்காலை பற்றிக்கொண்டு, மேல் புறமாக உடலை வளைக்கவும். முதுகை விரித்து, திறந்த மார்புடன் இயன்றவரை அமைதியாக சுவாசிக்கவும்.
முதுகில் சின்னப் பிரச்சனை இருந்தாலும், இந்த ஆசனம் மிகவும் பாதுகாப்பானது.
சொல்லப்போனால் இது முதுகு பிரச்சனைகளை சீராக்கும். இந்த ஆசனம், அடிவயிறு தசைகளை விரிவடையச்செய்து, உணவுக்குழாய் முழுவதையும் தூண்டுகிறது. கல்லீரல், கணையம், அட்ரினல் கிளாண்ட் ஆகியவற்றை சீராக்கி ஜீரண ஆற்றலை மேம்படுத்துகிறது.
சுரப்பி சமநிலை, சுவாச சீராக்கம், இரத்த ஓட்டம் ஆகியவற்றிலும் உதவி எடை குறைக்க உதவுகிறது.
திரிலோக ஆசனம்
இது மிகவும் பாதுகாப்பான ஆசனம் மற்றும் அனைத்து வகையான பயிற்சியிலும் மேற்கொள்ளலாம். கால்களை அகல பரப்பி நின்றுக்கொண்டு முக்கோணம் உருவாக்கிக் கொள்ளவும். வலது பாதத்தை வெளிபுறம் நோக்கி திருப்பவும். வலது கையை வலது காலில் வைக்கவும். இடது கையை தலைக்கு மேல் தூக்கி, இடது கையை நீட்டியபடி வலப்பக்கம் வளையவும்.
மிகவும் கீழ்ப்பகுதிக்கு சென்று விடக்கூடாது. மார்பகம் விரிந்திருக்க வேண்டும். கையை மிகவும் கிழே இறக்கு மார்பகம் மூடச்செய்வது பலரும் செய்யும் தவறு. இந்த ஆசனம், ஜீரண ஆற்றலை மேம்படுத்தி, பசியைத் தூண்டி, நரம்பு மண்டலத்தை சமநிலையாக்குகிறது. தொடர்ந்து செய்து வந்தால், வயிறு, இடுப்பில் சதை குறையும்.
நவுகாசனம்
அதிக அழுத்தத்திற்கு உள்ளாகாமல் எடை குறைக்க இந்த ஆசனம் ஏற்றது. கால்களை அகல விரித்தபடி உட்காரவும். கைகள் தொடைப்பக்கம் இருக்க, மெல்ல கால்களை உயர்த்தவும். கால்களும், உடல் பகுதியும் ஒரே கோணத்தில் இருக்க வேண்டும். மார்பகம் திறந்திருக்க வேண்டும். முதுகு நேராக இருக்க வேண்டும். மெல்ல மூச்சை இழுத்து, இயன்றவரை மூச்சை பிடித்து விடவும். வயிறு கொழுப்பு குறைய உதவும்.
சக்ராசனம்
பாதங்களை அகலமாக வைத்திருக்கவும். கைகளை தோள் பட்டை அளவுக்கு நீட்டவும். ஆழமாக மூச்சை இழுத்து வெளியே விடும்போது, வலப்பக்கம் திரும்பி, இடது கையை வலப்பக்கம் கொண்டு வந்து, வலது கையை பின் பக்கம் கொண்டு வரவும். மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது சுவாசித்து, இடது பக்கம் இதே போல செய்யவும்.
பாதங்களை தரையில் இருந்து எடுக்காமல் பல முறை செய்யவும். இடுப்பு பகுதி, பின் பகுதி மற்றும் வயிற்றுப்பகுதியை சீராக்கி, நாள் முழுவதும் அமர்ந்திருக்கும் பாதிப்பை குறைக்கிறது.
சரியான வழியில் யோகா
சூரிய நமஸ்காரத்தையும் நீங்கள் பின்பற்றலாம். அதிகமாக அல்லது வேகமாக செய்யும் போது எரிச்சல் அடையாமல் இருப்பதை கவனிக்கவும். உங்கள் மீது கோபம் கொண்டால் அல்லது பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை எனில் யோகா முறையில் மாற்றம் தேவை.
சில நேரங்களில் செயல்முறை மென்மையாக இருந்தால் பலன் அதிகமாக இருக்கும். நிலையான போஸ்களை நீண்ட நேரம் செய்வது அல்லது சூரிய நமஸ்காரங்களை மெதுவாக செய்வது நல்ல பலன் தரும்.
ஆங்கில கட்டுரையாளார்: தீபா கண்ணன்