நொடிக்கு 1.6 மில்லியன் பயனர்கள் - முதல் நாளே களைக்கட்டிய Flipkart பிக் பில்லியன் டேஸ் சேல்!
இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart தனது Big Billion Days (BBD) பண்டிகைக் கால விற்பனையின் முதல் நாளில் வினாடிக்கு 1.6 மில்லியன் பயனர்கள் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் தனது ’பிக் பில்லியன் டேஸ்’ (BBD) பண்டிகைக் கால விற்பனையின் முதல் நாளில் வினாடிக்கு 1.6 மில்லியன் பயனர்கள் ஒரே நேரத்தில் தங்களது தளத்தை பார்வையிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் உள்நாட்டு இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட், பண்டிகைகள் மற்றும் முக்கிய தினங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரை விற்பனை செய்து வருகிறது. தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு, 'பிக் பில்லியன் டேஸ் சேல்' என்ற சிறப்பு விற்பனை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
களைக்கட்டிய Flipkart-ன் பிக் பில்லியன் டேஸ் சேல்
ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ஐபேடு, ஆடைகள், அணிகலன்கள், காலணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் என அனைத்தின் மீது அதிரடியான மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகள், தள்ளுபடியை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்திருந்திருந்து.
இந்நிலையில், ஃபிளிப்கார்ட் தனது ‘பிக் பில்லியன் டேஸ்’ (BBD) பண்டிகைக் கால விற்பனையின் முதல் நாளில் வினாடிக்கு 1.6 மில்லியன் பார்வையாளர்கள் ஒரே நாளில் தங்கள் ஆப்’பை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது. மொபைல்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன், மரச்சாமான்கள் மற்றும் எலெக்டானிக்ஸ் போன்றவற்றை வாங்கியவர்கள் மற்றும் அதனை வாங்குவதற்காக பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,
"பிக் பில்லியன் டேஸ்” விற்பனையின் போது ஆப்-பில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வாடிக்கையாளர்கள் பொருட்களை பார்வையிட்டுள்ளதை கண்டறிந்துள்ளோம். வினாடிக்கு 1.6 மில்லியன் பயனர்கள் தளத்தை பார்வையிட்டுள்ளனர். கடந்த இரண்டு முறை அறிவிக்கப்பட்ட சிறப்பு விற்பனையை விட கணிசமான அளவு பயனர்களின் வருகை அதிகரித்துள்ளது.”
ஃபிளிப்கார்ட்டின் எளிதான கட்டண விருப்பங்கள், Flipkart Pay Later EMI போன்றவை பார்வையாளர்களை 12 மடங்கு அதிகரித்துள்ளது. ஃபிளிப்கார்ட் கிஃப்ட் கார்டுகள் பிளாட்ஃபார்ம் விற்பனை மற்றும் மீட் பில் ஆகியவையும் நல்ல வளர்ச்சி கண்டுள்ளன.
-ன் இ-காமர்ஸ் தளமான Shopsy, புடவைகள், ஆண்களுக்கான டி-ஷர்ட்கள் மற்றும் ஹெட்ஃபோன்கள் ஆகியவற்றுடன் இரண்டாம் கட்ட நகரங்களில் உள்ள பெரும்பாலான வாடிக்கையாளர்களை ஈர்த்தது.
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பிரிவில், நிகழ்வின் முதல் 24 மணி நேரத்தில் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு சைக்கிள் விற்கப்படுவதாக ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
"இந்தியாவில் இரண்டாம் கட்டத்தில் உள்ள நகரங்கள் வசிக்கும் வாடிக்கையாளர்கள், ஃபிளிப்கார்ட் வழங்கும் தேர்வுகளில், பிரிவுகளை பார்வையிட்டுள்ளனர். புது டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் பெர்ஹாம்பூர், ஹவுரா, லக்னோ, கொல்கத்தா, சென்னை, ஜெய்ப்பூர், கர்னால், பாட்னா, புவனேஷ்வர், விசாகப்பட்டினம், சூரத், ஆக்ரா, காசியாபாத் உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து அதிக ஆர்டர்கள் வந்துள்ளன,” என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேக்அப் மற்றும் நறுமணப் பிரிவும் நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு நொடியும் ஒரு காஜல் (கண் மை) விற்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஷாப்சி உட்பட 11 லட்சம் வர்த்தகம் பிக் பில்லியன் டேஸ் மூலம் நடந்துள்ளது.
இதற்கிடையில், அமேசான் இந்தியா வெள்ளிக்கிழமை தனது ஒரே நாள் டெலிவரியை விரிவுபடுத்துவதாக அறிவித்தது. பிரைம் உறுப்பினர்களுக்கு ஒரு மணி நேரத்திற்குள் சலுகை, இந்தியாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களில் 4 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தது.
2017ம் ஆண்டு இந்தியாவில் முதன் முறையாக முதன்முதலில் இந்தியாவில் ஒரே நாளில் டெலிவரி செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: பிடிஐ