ரூ. 2,250 கோடி முதலீடு, 37,450 பேருக்கு வேலை வாய்ப்பு; காலணி, தோல் பொருட்கள் கொள்கை வெளியீடு!
தமிழக அரசின் காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்ளை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தமிழக அரசின் காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்ளை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை சார்ந்த தொழில் முதலீடுகளை (Capital intensive high-tech அடைவதற்கு, பெருமளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் உயர் தொழில்நுட்பம் high-tech industries) ஈர்த்திடுவது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலை வாய்ப்புகளை அளித்திடும் துறைகள் சார்ந்த தொழில் முதலீடுகளையும் (Employment intensive) ஈர்க்க வேண்டும் என தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
இதற்கு ஏற்றார் போல், பெரும் முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய துறைகளான செமிகண்டக்டர் உற்பத்தி, மின் வாகனங்கள் உற்பத்தி, சோலார் செல்கள்,
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, தகவல் தரவு மையங்கள், பெட்ரோலியப் பொருட்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி மற்றும் ஆடைகள், காலணி மற்றும் தோல் பொருட்கள், நகைகள் மற்றும் ஆபரணங்கள்.
உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான மாநாடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியன நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று சென்னையில் தமிழக அரசின் காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்ளை வெளியீட்டு நிகழ்ச்சி பெற்றது.
காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை வெளியீடு:
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இன்று சென்னையில் காலணிகள் மற்றும் தோல்துறை மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டைத் தொடங்கிவைத்தார்.
இதில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தலைவர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, காலணி மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் ராஜ்குமார் குப்தா, தோல் ஏற்றுமதிக் கழகத்தின் செயல் இயக்குநர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் 2,250 கோடி ரூபாய் முதலீட்டில் 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 5 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022 வெளியிட்டார்.
5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, இதுவரை 192 ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் 2 இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு. சுமார் 3 இலட்சத்து 2 ஆயிரத்து 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுத் துறை வாரியான முதலீட்டு மாநாடுகளை மேற்கொண்டு. அத்துறைகளின் வாயிலாக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 2.250 கோடி ரூபாய் முதலீட்டில், 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1. கோத்தாரி ஃபீனிக்ஸ் காலணி உற்பத்தி அக்கார்ட் லிமிடெட் - காலணி உற்பத்தி
2. கோத்தாரி ஃபீனிக்ஸ் ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு அக்கார்ட் லிமிடெட்
உற்பத்திப் பொருள் - ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு
3. கோத்தாரி – SEMS குழுமம் -தோல் அல்லாத காலணி உற்பத்தி தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி
4. வேகன் குழுமம் - தோல் அணிகலன்கள் மற்றும் பரிசு அணிகலன்கள் உற்பத்தி
5. வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் - தோல் அல்லாத காலணி உற்பத்தி
என ஐந்து நிறுவனங்களுடனும் பெரம்பலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை:
கடந்த ஏப்ரல் மாதம், தொழில் துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், விரைவில் காலணித்துறை மற்றும் தோல் பொருட்கள் கொள்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, முதலமைச்சர் இன்று காலணித்துறை மற்றும் தோல் பொருட்கள் துறையில், தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை வெளியிட்டார்.
பனப்பாக்கத்தில் காலணி உற்பத்தி பூங்கா:
தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கையை வெளியிட்ட பின்னர் உரையாற்றிய முதல்வர்,
“தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும் குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால், தோல் அல்லாத உற்பத்திப் பொருட்கள்தான் சந்தையில் 70 விழுக்காட்டுக்கும் அதிக அளவில் விற்கப்படுகின்றன அதன் பொருட்டே, இன்று வெளியிடப்பட்டுள்ள கொள்ளகயில் தோல் அல்லாத காலணித் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
இராணிப்பேட்டை மாவட்டம். பனப்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
தற்போது இத்துறைக்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்திட வேண்டிய நிலை உள்ளது இப்பூங்கா அமைக்கப்படுவதன் உள்ளது. மூலம் காலணி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களையும் நாமே தயாரிக்க முடியும் எனக்கூறினார்.
2009-ஆம் ஆண்டு செய்யார் 5EZ நிறுவனத்தினுடைய தொழில் பிரிவுகளை நான் தொடக்கி வைத்தேன் இது இன்று மாபெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது 2000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்கள் 35 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதில் 70 விழுக்காடு பேர் பெண்கள் இந்த நிறுவனம் தனது தொழிலை மேலும் விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.
1000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 25 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் தைவான் நாட்டைச் சேர்ந்த Hang Fu நிறுவனம், தனது உற்பத்தித் திட்டத்தினை நிறுவிட தமிழ்நாட்டினைத் தேர்ந்தெடுத்துள்ளது.
காலணிகள் ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படையானவை முக்கியமானவை
அதைப் போலத்தான் காலணி மற்றும் தோல் தொழிலும், நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகமிக முக்கியமானது எனக்கூறி முதல்வர் தனது உரையை நிறைவு செய்தார்.