முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு; 74,898 பேருக்கு வேலை வாய்ப்பு; 60 ஒப்பந்தங்கள்!
"முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு" முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1.25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களுக்கான வணிக உற்பத்தியை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 22,252 கோடி ர
"முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு" மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களுக்கான வணிக உற்பத்தியை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 22,252 கோடி ரூபாய் முதலீட்டில் 17,654 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற "முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் வாயிலாக மொத்தம் 60 திட்டங்களின் மூலம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில், 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி’ மாநாடு:
பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31ஆம் நிதியாண்டிற்குள் தமிழ்நாட்டினை டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார 1 வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கப்பட்டது. 'தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022' தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை ஆகியவற்றை வெளியிட்டார்.
TNTecxperience தொடக்கம்: மாநிலத்தில் நிதித் தொழில் நுட்பங்கள் பரவலாக பின்பற்றப்படுவதை அதிகரிக்கும் வகையில் TNTecxperience திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் தனிநபர்கள்/புத்தொழில் நிறுவனங்கள்/குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள். நிதி தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதை மேலும் மேம்படுத்தும் வகையில், நிதி நுட்ப சேவைகளை இலவசமாகவோ அல்லது சில காலத்திற்கு குறைவான கட்டணத்திலோ பெறலாம்.
மேலும், டிஎன்டெக்ஸ்பரியன்ஸ் இணையதளத்தையும் https://tntecxperience.com முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
இந்நிகழ்ச்சியில், 11 நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டன.
65,373 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 58,478 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பமானது.
59,871 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 16,420 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் சிறப்புத் தொகுப்புச் சலுகை அளிக்கப்படும் 7 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மொத்தம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74 7,050 பேருக்கு வேலைவாய்ப்பளிக்ககூடிய 60 புரிந்து ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.
சட்டவியல் நுட்பம், தனி நபர் நிதி, நிதி நுட்பம் ஆராய்ச்சி, நிதி நுட்பம் பங்கு மேலாண்மை, பெண்களை பணியமர்த்துதல், நிதி நுட்பம் கணக்கியல் மென்பொருள் தீர்வுகள், நிதி நுட்பம் - நிதிக் கட்டமைப்பு, தகவல் தொடர்பு தொழில் நுட்பம், நிதி நுட்பம் - கட்டணச் சேவைகள், தகவல் தொழில் நுட்பம் ஏற்றப்பலகை, உலகளாவிய கட்டணம் மேற்கொள்ளுதல் மற்றும் தொழில்நுட்பம், நிதி நுட்பம் - கட்டணச் சேவைகளை மேற்கொள்வதற்கான தீர்வு ஆகிய துறைகளின் கீழ், 11 நிதி தொழில் நுட்ப நிறுவனங்களுடன் நிறுவனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
53 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
65,373 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 58,478 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பமாகியுள்ளது.
தூத்துக்குடி, சென்னை, செங்கட்டு, கிருஷ்ணகிரி, அம்பத்தூர், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இத்திட்டங்களின் கீழ் மேற்கூறிய பகுதிகளில், பசுமை ஹைட்ரஜன், மின்னணுப் பொருட்கள், தகவல் தரவு மையம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரிபாகங்கள், தகவல் தொழில் நுட்பம், மரச்சாமான்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மின் வாகனங்கள், விவசாயப் பொருட்கள், பிவிசி பைப்புகள், மருந்துவப் பொருட்கள், ரசாயனங்கள், நூற்பாலை உள்ளிட்ட பல தொழில் தொடங்கப்பட உள்ளன.
21 புதிய திட்டங்களுக்கு அடிக்கல்:
சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி ஆகிய பகுதிகளில் JSW Renew Energy நிறுவனம் சார்பில் காற்றாலை எரிசக்தி தயாரிக்கவும், செங்கல்பட்டு சிறுசேரி பகுதியில் Sify Technologies என்ற பெயரில் தகவல் தரவு மையம் அமைத்தல், காஞ்சிபுரத்தில் L&T Data Centre நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைத்தல் உள்ளிட்ட 21 புதிய நிறுவனங்களின் திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு - முதல்வர் பெருமிதம்:
தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு என்பது வரலாற்று சாதனை இந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கக்கூடிய நற் சான்றிதழ். ஒராண்டிற்குள்ளாகவே இமாலய சாதனையை அடைந்திருக்கிறோம்.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அமைச்சரவையில் அவருக்கு துறை வழங்குவது தொடர்பாக சிந்தித்தபோது தொழிற்துறையை தேர்ந்தெடுத்தேன். துணிச்சலாக செயல்படக்கூடிய தங்கம் தென்னரசு பெயரை டிக் செய்தேன். தொழில்துறையை தங்கமாக மாற்றியவர் தங்கம் தென்னரசு என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
“தமிழ்நாடு அரசு மீது அபார நம்பிக்கை வைத்து தொழில் நிறுவனங்கள் முன் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி தொழில் திட்டங்களுக்குத் தேவையான அனுமதிகளை பெறவும், சிறக்கவும் உறுதி தர கடமைப்பட்டுள்ளேன் ஆன்லைன் விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளது. அந்த வளர்ச்சியை பயன்படுத்தி நாமும் வளரவேண்டும் நிதி நுட்ப நகரம் படிப்படியாக கட்டமைக்கப்படவுள்ளது. உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் தமிழ்நாட்டை ஸ்மார்ட் மாநிலமாக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
பரிணாம வளர்ச்சி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாநிலத்திற்கும்தான் திமுக அரசு எடுத்த முயற்சியினால் 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இருமடங்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என அன்பு கட்டளையிட்டேன்.
ரூ.2,20,000 கோடி அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இது 2.5 மடங்கு அதிகம் மட்டற்ற மகிழ்ச்சி. மூன்றாவது இடத்திலிருந்து முதலிடத்திற்கு வருவோம். அதற்கான திட்டமிடலை தொடங்கி விட்டோம். 68% முதலீடுகள் தென்மாவட்டங்களில் அமையவுள்ளது. சொன்னதை செய்து வருகிறோம், என்றார்.