Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

விவசாயிகளுக்கு மஞ்சள் சாகுபடியில் பயிற்சி அளித்து கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் முன்னாள் ஆசிரியை!

மேகாலயாவில் பெண் விவசாயிகள் இயற்கையான முறையில் லகாடாங் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட்டு வருவாய் ஈட்ட உதவுகிறார் பத்மஸ்ரீ விருது வென்ற ட்ரினிடி சாயூ.

விவசாயிகளுக்கு மஞ்சள் சாகுபடியில் பயிற்சி அளித்து கூடுதல் வருவாய் ஈட்ட உதவும் முன்னாள் ஆசிரியை!

Tuesday July 27, 2021 , 3 min Read

மேகாலயாவைச் சேர்ந்த ட்ரினிடி சாயூ பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர். ஜெயின்டியா ஹில் ட்ரைப் உறுப்பினர். முலியே கிராமத்தைச் சேர்ந்த இவர், மருத்துவக் குணங்கள் நிறைந்த லகாடாங் மஞ்சள் சாகுபடியை ஊக்குவித்து வருகிறார். இந்த லகாடாங் மஞ்சள் வகை மேகாலயாவில் விளையக்கூடியது.


நிலையான இயற்கை விவசாய முறைகளை உருவாக்கியதற்காகவும் இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி குறித்து கிட்டத்தட்ட 800 கிராமப்புற பெண்களுக்கு பயிற்சியளித்ததற்காகவும் 2020-ம் ஆண்டு ட்ரினிடி சாயூவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

1

பெண் விவசாயிகள் அடங்கிய சுய உதவிக் குழு ஒன்றையும் இவர் உருவாக்கியுள்ளார்.

இவர் Hills Curcumin & Spice Producer Society என்கிற சங்கத்தை அமைத்து உதவி பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். இதன் மூலம் சுமார் 100 சுய உதவி குழுக்கள் இவருடன் நேரடியாக இணைந்துள்ளன. மஞ்சள் சாகுபடி பற்றி இவர்களுக்கு ட்ரினிடி பயிற்சியளிக்கிறார்.

ட்ரினிடியும் சுய உதவிக் குழுக்களும் இணைந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 30 மெட்ரிக் டன் அளவிலான லகாடாங் மஞ்சளை ஏற்றுமதி செய்துள்ளனர்.

தொடக்கம்

2003-ம் ஆண்டு ‘ஸ்பைஸ் போர்ட் ஆஃப் இந்தியா’ முலியே கிராமத்தைப் பார்வையிட்டது. அந்த சம்பவம்தான் ட்ரினிடியின் முயற்சிக்கு துவக்கப்புள்ளியாக அமைந்துள்ளது. அந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

2
“ஸ்பைஸ் போர்ட் குழுவினர் லகாடாங் மஞ்சள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து அறிந்திருந்தபோதும் மஞ்சள் சாகுபடி குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை. லகாடாங் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க விரும்பினார்கள். அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் கொண்டு வந்து லகாடாங் மஞ்சள் சாகுபடிக்கு மானியம் வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார்கள்,” என்று ட்ரினிடி பகிர்ந்துகொண்டார்.

ட்ரினிடி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் ஸ்பைஸ் போர்ட் அதிகாரிகள் கிராமத்தைப் பார்வையிட வந்தபோதுதான் லகாடாங் வகை மஞ்சளின் மகத்துவத்தையும் தேவைகளையும் அவர் உணர்ந்துள்ளார்.

3

ஸ்பைஸ் போர்ட் ட்ரினிடி மற்றும் முலியே கிராமத்தைச் சேர்ந்த ஏழு பேரின் பெயர்களையும் மானிய திட்டம் ஒன்றின்கீழ் மூன்றாண்டுகளுக்கு பதிவு செய்து கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் இதைப் புதுப்பித்துக்கொள்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.

ட்ரினிடி ஆசிரியையாகப் பணியாற்றியவர். ஆங்கிலம், இந்தி இரண்டு மொழிகளையும் நன்றாக அறிந்திருந்தார். இதனால் அதிகாரிகளுடன் கலந்து பேசி அரசாங்க திட்டங்களை அவரால் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள முடிந்தது.

ட்ரினிடி அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்றார். இயற்கை முறையில் லகாடாங் மஞ்சள் சாகுபடி செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அங்குள்ளவர்கள் பாரம்பரிய விவசாய முறைகளுக்கு மாற்றாக மஞ்சள் சாகுபடியை மேற்கொள்ள பயிற்சியளித்தார்.

லகாடாங் திட்டம்

“பெண்கள் தலைமையில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட சுய உதவிக் குழுக்களின் வலுவான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழுவை மேலும் வலுவாக்குவதற்கு அரசாங்கத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள ஊக்குவித்தேன்,” என்கிறார் ட்ரினிடி.

ட்ரினிடி உருவாக்கிய சங்கத்தில் 25 முக்கிய உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கம் அரசாங்கத்தின் தரவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 800-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்திருக்கிறார்கள்.

”எங்கள் சங்கத்தின்கீழ் ‘மிஷன் லகாடாங்’ என்கிற திட்டத்தைத் தொடங்கினோம். மஞ்சள் உற்பத்தி மற்றும் அறுவடைக்குத் தேவையான இயந்திரங்களை வாங்கினோம். எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் லகாடாங் சாகுபடியில் ஈடுபட பணமும் வழங்குகிறோம்,” என்கிறார்.

ஸ்பைஸ் போர்ட் உதவியுடன் ட்ரினிடி லாகாடாங் மஞ்சள் விதைகளை வாங்கினார். ரசாயன பயன்பாடின்றி ஆர்கானிக் முறையில் சாகுபடி செய்ய பயிற்சியும் அளித்தார்.

சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் ட்ரினிடி அமைத்துள்ள தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

”உள்ளூர் விவசாயிகளிடம் மூலப்பொருட்களை வாங்கி நானும் என் ஊழியர்களும் மஞ்சளை சுத்தப்படுத்துவோம். லாஸ்கியன் பிளாக்கில் 86 கிராமங்கள் இருப்பதால் விவசாயிகளிடம் விளைச்சலை சேகரிக்க உள்ளூரில் ஆட்களை நியமித்திருக்கிறேன்,” என்கிறார்.

முக்கியக் குழுவில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் 10 விவசாயிகள் ட்ரினிடியின் வழிகாட்டலின்கீழ் செயல்படுகின்றனர்.

தாக்கம்

சுமார் 800 பெண்கள் லகாடாங் சாகுபடியில் ஈடுபட ட்ரினிடி பயிற்சியளித்துள்ளார். கிட்டத்தட்ட 100 சுய உதவிக் குழுக்கள் ட்ரினிடியுடன் நேரடியாக பணியாற்றுகிறது.


ட்ரினிடி லகாடாங் மஞ்சள் ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாது 3 மெட்ரிக் டன் அளவிலான உலரந்த இஞ்சியை ஏற்றுமதி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

“மாவட்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் அதிகாரிகளின் ஆதரவுடன் கிராமப்புற விவசாயப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு நிதிப் பிரச்சனை இருந்தாலும் இவர்களுக்கு சரியான நேரத்தில் பணம் கிடைப்பதை உறுதிசெய்கிறேன்,” என்கிறார் ட்ரினிடி.

சுற்றுப்புற பகுதிகளுடன் நிறுத்திக்கொள்ளாமல் ’ஹில் ஃபார்மர்ஸ் யூனியன்’ உதவியுடன் மேகாலயா முழுவதும் தன்னுடைய செயல்பாடுகளைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஸ்பைஸ் போர்ட் ஆதரவு தவிர வேறு எந்தவித முதலீடோ நன்கொடையோ அவருக்குக் கிடைக்கவில்லை.

4

தேசியளவில் அங்கீகாரம்

மேகாலயாவில் உள்ள பெண் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டதற்காக 2020-ம் ஆண்டு ட்ரினிடிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ’அதிகம் போற்றப்படாத ஹீரோ’ என்று ட்ரினிடியை பாராட்டியுள்ளார்.


ட்ரினிடியின் முயற்சிகளுக்காக 2020 ’பலிபரா ஃபவுண்டேஷன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று

”நாங்கள் கிராமப்புறத்தில் இருப்பதால் கொரோனா பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எங்கள் கிராமத்தில் ஒருவருக்குக்கூட கோவிட்-19 தொற்று ஏற்படவில்லை,” என்கிறார்.

ஊரடங்கு சமயத்தில்கூட ட்ரினிடியின் சங்கம் 16 மெட்ரிக் டன் லகாடாங் மஞ்சள் உற்பத்தி செய்துள்ளது.


லகாடாங் மஞ்சளில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் தேவை அதிகமுள்ளது. இதை விவசாயிகளிடம் எடுத்துக்கூறி லகாடாங் மஞ்சள் சாகுபடியில் ஈடுபட ஊக்குவிப்பது சவாலான காரியம் என்கிறார் ட்ரினிடி.

வருங்காலத் திட்டங்கள்

லகாடாங் மஞ்சள் சந்தையில் நல்ல விலைக்கு விற்பனையாகி விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்று ட்ரினிடி விரும்புகிறார். விவசாயிகளுக்கு பணம் மட்டுமின்றி அங்கீகாரமும் கிடைக்கவேண்டும் என்பது இவரது விருப்பம்.


மேலும், இளம் தலைமுறையினருக்கு லகாடாங் மஞ்சள் வகையின் பாரம்பரியத்தையும் அதுகுறித்த தகவல்களைக் கொண்டு சேர்க்க விரும்புகிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா