மு.க.ஸ்டாலின் நியமித்துள்ள 4 புதிய செயலாளர்கள் யார்?
முதன்மைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதேபோல், உமாநாத் ஐ.ஏ.எஸ், எஸ்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ், அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ் ஆகியோரும் முதலமைச்சரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கடந்த மாதம் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக கூட்டணி 159 இடங்களைக் கைபற்றியது. திமுக 125 இடங்களைப் பெற அதனை தொடர்ந்து நடந்த எம்எல்ஏ கூட்டத்தில் ஸ்டாலின் சட்டமன்ற குழுத் தலைவரக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்படி, ஸ்டாப்களின், தமிழக முதல்வர் ஆவது உறுதியானது. இன்று காலை 9 மணி அளவில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டி ராஜ்பவனில் எளிமையான முறையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்பின் தலைமைச்செயலகம் சென்ற ஸ்டாலின், முதன்முதலாக ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
“2.07 கோடி ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் தொகையாக ரூபாய் 4000 வழங்கப்படும். ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு. அரசு நகரப் பேருந்துகளில் நாளை முதல் அனைத்து மகளிருக்கும் இலவசப் பயணம். கொரோனா நோய்க்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே இனி ஏற்பது, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 100 நாட்களுக்குள் மக்களின் புகார் மனுக்களின் மீது தீர்வு," போன்ற முக்கிய ஆணையில் கையெழுத்திட்டார்.
இதற்கிடையே, தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினின் செயலாளர்களாக நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதன்மைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதேபோல், உமாநாத் ஐ.ஏ.எஸ், எஸ்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ், அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ் ஆகியோரும் முதலமைச்சரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
முதன்மை செயலாளராக இருக்கும் உதயசந்திரன் ஈரோடு, மதுரை மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. மேலும், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், தமிழகச் செய்தி மற்றும் மக்கள்தொடர்புத்துறை உள்ளிட்ட துறைகளில் முத்திரை பதித்து இருக்கிறார். இதைவிட கீழடி அகழாய்வில் இவரது பங்கு அதிகமாக பேசப்பட்டது.
இதேபோல், இரண்டாவது செயலாளராக உமா நாத் ஐஏஎஸ் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி இருக்கிறார். அதேபோல், மருந்துகள் துறையில் பணிபுரிந்த அனுபவம் இருக்கிறது. மேலும், எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ், தற்போது அருங்காட்சியகம் துறை ஆணையராகவும், அனு ஜார்ஜ் ஐஏஎஸ், தற்போது தொழித்துறை ஆணையராகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.