இனி எலெக்ட்ரிக் வாகனங்களின் காலம்: மின்சார வாகன தயாரிப்பில் Foxconn!

By YS TEAM TAMIL|22nd Feb 2021
ஆட்டோமொபைல் துறையிலும் கால்பதிக்கும் ஃபாக்ஸ்கான்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

"புதிய எலக்ட்ரிக் வாகன தளத்தில் இரண்டு லைட் வாகனங்களின் டிசைனை வடிவமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது..."


உலகத்தின் பார்வை முழுவதும் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் திரும்பியுள்ளது. இந்த புதிய முயற்சிக்கு தொடக்கமாக இருந்தது என்னவோ டெஸ்லா நிறுவனம் தான். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் மின்சார வாகனங்களை தயாரிப்பில் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.


சுற்றுச்சூழலுக்கு மாசுவிளைவிக்காமல், பெட்ரோல், டீசல் விலை தொல்லை இல்லாமல் இருக்க பலரும் மின்சார வாகனங்களையே விரும்புகின்றனர். இந்நிலையில், ஐபோன் தயாரிப்பு நிறுவனமான Foxconn டெக்னாலஜி குரூப் புதிதாக எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்புக்காகப் பிரத்யேகமாக தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த புதிய தளத்தின்படி, ஒப்பந்த முறையில், பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கு உதவ முடியும். 


ஃபாக்ஸ்கான் குரூப்-ஐ பொறுத்தவரை தைவானை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம். இது ஸ்மார்ட்போன், கம்யூட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது அடுத்தகட்ட வளர்ச்சியாக ஆட்டோமொபைல் துறையிலும் கால்பதிக்க உள்ளது.


ஃபாக்ஸ்கான் தற்போது சீன கார் தயாரிப்பு நிறுவனமான கீலி ஹோல்டிங் குரூப் நிறுவனத்துடன் இணைந்து கூட்டணி நிறுவனத்தை உருவாக்கி இந்த புதிய தளத்தை உருவாக்கியுள்ளது.

பாக்ஸ்கான்
ஃபாக்ஸ்கான் உருவாக்கியுள்ள புதிய எலக்ட்ரிக் வாகன தளத்தில் இரண்டு லைட் வாகனங்களின் டிசைனை வடிவமைத்து கொடுக்கப்பட்டுள்ளது என தைவான் நாட்டின் டைபை பகுதியில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஹான் ஹாய் பிரிசிஷன் இன்டஸ்ட்ரீஸ் கோ நிறுவனத்தின் தலைவரான யோங் லேயு தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, புதிய எலக்டரிக் வாகனத் தயாரிப்பு தளத்தின் வாயிலாக, மற்றொரு திட்டத்தையும் வைத்துள்ளது அந்நிறுவனம். மின்சார வாகனங்களின் அடுத்த கட்ட வளர்ச்சியான எலக்ட்ரிக் பஸ்- ஐ உருவாக்கும் திட்டம்தான் அது. மின்சார வாகன தயாரிப்பில் தனது அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாராகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தானியங்கி எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க ஹூண்டாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை துவங்கி, பல்வேறு காரணங்களுக்காக இக்கூட்டணி திட்டத்தை ரத்து செய்தது.


இந்நிலையில் கான்டிராக்ட் உற்பத்தியாளராக ஆட்டோமொபைல் துறையில் இயங்க ஃபாக்ஸ்கான் தற்போது உருவெடுத்து வருகிறது. Foxconn-ன் இந்தத் தளத்தின் மூலம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய மாடல்களை விரைவில் சந்தையில் அறிமுகம் செய்யும் வாய்ப்புள்ளது.


தகவல் உதவி - asia.nikkei | தமிழில்: மலையரசு