Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மும்பை சாலைகளில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகக் குடை வழங்கும் திட்டம்!

2018-ம் ஆண்டு விமல் சேரன்கட்டு தொடங்கிய ‘தி கவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக மும்பை சாலைகளில் உள்ள குழந்தைகளுக்கு சுமார் 2,000 குடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

மும்பை சாலைகளில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகக் குடை வழங்கும் திட்டம்!

Friday August 02, 2019 , 2 min Read

மும்பை என்றதும் உங்களுக்கு முதலில் எது நினைவிற்கு வரும்? இந்தியாவின் நிதி தலைநகரம் என்பதா? கனவுகளின் உலகம் என்பதா? அனைத்திற்கும் மேலாக இந்த நகரம் கடுமையான பருவமழைக்குப் பெயர்போனது.


பருவமழை காலத்தில் இந்த நகரம் முழுவதும் மழை வெள்ளத்தில் மிதக்கும். சாலைகள், வீடுகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியிருக்கும். கடற்கரைகளில் அலைகள் உயர எழும்புவதைப் பார்க்கமுடியும். பலர் இந்தப் பருவத்தை ரசிக்கும் நிலையில் குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் கனமழையாலும் கடும் புயலாலும் அதிக பாதிப்பிற்கு ஆளாவார்கள்.


மும்பையில் 36,154 குழந்தைகள் சாலையில் வசிப்பதாக டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் (TISS) மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் அடங்கிய குழு இணைந்து நடத்திய கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. இது நிச்சயம் கவலையளிக்கும் தகவல் ஆகும். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் ’தி கவர்’ திட்டம் 2018-ம் ஆண்டு முதல் இந்தக் குழந்தைகளுக்கு இலவசமாக குடைகளை வழங்கி வருகிறது.

1

இத்திட்டத்தின் முகநூல் பக்கத்தில் காணப்பட்ட பதிவு ஒன்று உலகம் முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது. இவர்கள் பழைய குடைகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 2018-ம் ஆண்டு வரை ’தி கவர்’ திட்டம் மூலம் மும்பையின் சாலையில் உள்ள குழந்தைகளுக்கு 2,000 குடைகள் வழங்கப்பட்டுள்ளது.


ஐடி ஊழியரான 27 வயது விமல் சேரன்கட்டு ஒருமுறை கனமழையின்போது ஒரு சிறுமி தன்னுடைய தம்பியை சுமந்தவாறே ரோஜாப்பூக்களை விற்றுக் கொண்டிருந்ததை கவனித்துள்ளார். அந்தச் சிறுமி விமலின் அருகே வந்து பூக்களை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுள்ளார். அந்தச் சம்பவம் குறித்து Effort For Good உடனான உரையாடலில் அவர் கூறும்போது,

“திடீரென்று அந்தச் சிறுமி ஒரு விசித்திரமான கோரிக்கையை வைத்தார். என்னுடைய குடையைத் தருமாறு கெஞ்சினார். நான் என்னுடைய பழைய குடையைக் கொடுத்ததும் அந்தச் சிறுமி ஓடிச்சென்று அவரது நண்பர்களை அழைத்தார். உடனே வெவ்வேறு திசையில் இருந்து நான்கு குழந்தைகள் ஒன்றுகூடி அந்தக் குடையின்கீழ் நின்றுகொண்டனர். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது,” என்றார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் முகநூலில் ஒரு பதிவிட்டார். மக்கள் தங்களது பழைய குடைகளை நன்கொடையாகத் தருமாறு கேட்டுக்கொண்டார். அந்தப் பதிவு வைரலாகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. பத்து நாட்களுக்குள் அவர் எதிர்பார்த்ததற்கும் அதிகமாக சேகரிக்கப்பட்டது. 10,000 ரூபாய் பணமும் 100 குடைகளும் வழங்கப்பட்டதாக The Indian Feed குறிப்பிடுகிறது.

2

தேவை இருப்போருக்கு குடை வழங்கும் முயற்சி வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டதை அடுத்து மருத்துவ மாணவர்கள் உதவியுடன் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யும் முயற்சியை விமல் தொடங்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“எங்களது முதல் முயற்சியில் குடைகள் விநியோகித்தபோது பருவமழை காலத்தில் குழந்தைகள் தொற்றுநோயால் அவதிப்படுவதை கவனித்தேன். இந்தப் பிரச்சனை குறித்து நான் மனம் வருந்தியபோது ஸ்விட்ச் இந்தியாவில் பணிபுரிந்து வந்த சுமார் 15 மருத்துவ மாணவர்கள் எங்களுடன் தன்னார்வலர்களாக இணைந்துகொண்டனர். தற்போது இவர்கள் எங்களுடைய ஒவ்வொரு முயற்சியிலும் இணைந்துகொண்டு குழந்தைகளுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர்,” என்று Efforts For Good உடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் இத்திட்டத்தின்கீழ் சுமார் 1,700 குடைகள் விநியோகிக்கப் பட்டுள்ளது. குடைகளில் ஓவியம் தீட்டும் பட்டறை வாயிலாக போதுமான நிதி திரட்டப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு விநியோகிப்பதற்கு கூடுதல் குடை வாங்க இந்த நிதித்தொகை பயன்படுத்தப்படும். விமல் கூறுகையில்,

“விரைவில் 3,000 என்கிற எண்ணிக்கையை எட்ட விரும்புகிறோம்,” என்றார்.

கட்டுரை: THINK CHANGE INDIA