மாம்பழம் முதல் முருங்கை வரை 1000 வகை ஊறுகாய் ரெசிப்பி தரும் 'ஊறுகாய் ராணி'
ஊறவைத்த சோயா, குடைமிளகாய் ஊறுகாய், முளைகட்டிய பச்சைப் பயிறு ஊறுகாய், என கேள்விப்படாத ஊறுகாய் வகைககளை செய்முறையுடன் புத்தகம் வெளியிட்டுள்ளார் உஷா பிரபாகரன்.
2000'களின் முற்பகுதியில் 'உஷாவின் பிக்கிள் டைஜஸ்ட்' என்ற புத்தகம் சென்னையின் புத்தகக் கடைகளில் விற்பனையாகத் தொடங்கியது. அதன் ஆசிரியர் உஷா ஆர் பிரபாகரனை யார் என்று யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. புத்தகம் அங்கு எவ்வாறு வந்தது என்பது கூட புத்தகக் கடை மேலாளருக்கு நினைவில் இல்லை.
ஆனால் அந்த புத்தகம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அட்டையில் 1000 ஊறுகாய்கள் பற்றிய விவரங்கள் என்று போடப்பட்டிருந்தது. வினிகர் ஊறுகாய்கள், சூடான உதிரி மாம்பழ ஊறுகாய்கள், தர்பூசணி தோலினால் ஆன ஊறுகாய் என்று #1 முதல் #1,000 ஊறுகாய்களுக்கான சமையல் குறிப்புகள் அதில் இருந்தன.
சைவ ஊறுகாய் மட்டுமே புத்தகத்தில் இருந்தன, ஆனால் அவற்றில் ஊறவைத்த சோயா நக்கட் கொண்ட குடைமிளகாய் ஊறுகாய், பூக்களினால் ஆன ஊறுகாய், முருங்கைக்காய் தோலில் செய்யப்பட்ட ஊறுகாய், முளைகட்டிய பச்சைப் பயிறு ஊறுகாய், அஸ்பாரகஸ் மற்றும் ஊறவைத்த சோயா நகட் ஊறுகாய் போன்ற பல கேள்விப்படாத ஊறுகாய் வகைககள் செய்யும் ரெசிப்பிகள் அதில் இருந்தன.
இது பற்றி உஷா கூறியதாவது,
"இந்த புத்தகத்தில் ஆந்திராவிலிருந்து கோங்குரா இலை, அசாமில் இருந்து குறுகாத்தி (elephant apple) மற்றும் காஷ்மீரில் இருந்து பச்சை அக்ரூட் பருப்புகள் போன்ற பாரம்பரிய உணவு வகைகள் இருக்கின்றன. ஊறுகாய் நுட்பங்கள், கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் திரவங்கள் மற்றும் சேமிப்பு வழிமுறைகள் பற்றிய விரிவான வழிமுறைகளும் இருக்கின்றன."
ஊறுகாய் தயாரிக்க காய்கறிகளை எப்படி வாங்கவது, சேமிப்பது, வெட்டுவது போன்ற உதவிக்குறிப்புகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. ஊறுகாய் தயாரிப்பின் ஒரு பகுதி பாரம்பரியமான வாழை தோல்கள், காலிஃபிளவர் தண்டுகள் மற்றும் சுரைக்காய் தோல்கள் போன்ற வீணாகும் பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.
ஒன்பது இந்திய மொழிகளில் காய்கறிகளின் பெயர்கள் மற்றும் தாவரவியல் பெயர்களைக் கொண்ட சொற்களஞ்சிய பகுதி இருந்தது, புத்தகத்தின் விலை வெறும் 460 ரூபாய் தான்.
'உஷாவின் ஊறுகாய் டைஜஸ்ட்' என்ற இந்த புத்தகத்தினுடைய மாயாஜாலம் இணையத்தில் உணவுக் குழுக்களில் பேசும் பொருளானது. இந்த புத்தகம் ஆன்லைனில் கிடைக்கவில்லை, எனவே சென்னைக்குச் செல்வோர் அவர்களுக்கான பிரதிகளை வாங்கி மற்ற நகரங்களுக்கு அனுப்பத் தொடங்கினர்.
உஷா பிரபாகரன் ஒரு வழக்கறிஞராக பயிற்சி பெற்றதாக கூறினார். ஆனால், தனது மகன் பிறந்த பிறகு, தனக்கு சட்டத்தில் உண்மையான ஆர்வம் இல்லை என்பதை உணர்ந்தார். அவர் சமையல் மற்றும் சமையல் குறிப்பில், குறிப்பாக ஊறுகாய் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
எனவே அவர் உணவுக் குறிப்புகளை சேகரிக்கத் தொடங்கினார். இவற்றினால் ஊறுகாய் தயாரிப்பை புத்தகமாக போடும் திட்டம் உருவானது. அதை அவர் மிகவும் முழுமையான முறையில் செய்ய முடிவு செய்தார். இப்புதகத்தம் அவர் ஆன்லைனில் இருக்கக் கூடிய புத்தக வெளியீட்டு வழிமுறைகளைப் பின்பற்றி சமையல் குறிப்புகளை எளிய, தெளிவான வடிவமாக்கி, புத்தகத்தை அவரே வெளியிட்டார்.
வணிக ரீதியாக வெளியிடப்பட்ட பெரும்பாலான சமையல் புத்தகங்களைப் போலல்லாமல் இது வடிவமைப்பை தெளிவாகவும் நடைமுறை ரீதியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது, என்கிறார் உஷா.
ஆனால் புத்தகம் வெளியான சமயத்தில், உஷா கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவரது மூளையில் ஏற்பட்ட ஒரு தொற்று, அரிய நிலையை அடைந்திருந்தது மற்றும் அதற்கு அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டது. அதிலிருந்து பழைய நிலைக்குத் திரும்ப அவருக்கு நீண்ட காலம் ஆனது. அவர் மிகவும் சுத்தமான, அமைதியான சூழ்நிலையில் இருந்து கவனமாக இருக்க வேண்டியிருந்தது. அவர் பழைய நிலைக்குத் திரும்ப சற்று காலம் தேவைப்பட்டது.
பின்னர் அவர் மற்றொரு மாற்றத்தை செய்ய வேண்டியிருந்தது. அவரது மகன் ஒரு டென்னிஸ் வீரராக தனது எதிர்காலத்தை உருவாக்க விரும்பினார். அப்போது உஷாவும் அவரது கணவரும் தங்கள் மகன் பெங்களூரில் உள்ள டென்னிஸ் அகாடமிக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர். ஆனால் இது எளிதல்ல, இருப்பினும் அந்த முடிவை எடுத்த நிலையில், இன்று உஷா பிரபாகரனின் மகன் பிரஜ்னேஷ் இந்தியாவின் ஆண்கள் ஒற்றையரில் முன்னிலை வீரராக ஆக்கியுள்ளது.
தனது மகனைப் பற்றி உஷா கூறும்போது,
“அவன் அந்த இடத்தை சுலபமாக அடையவில்லை. இளைய வயதிற்குப் பிறகு, அவன் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் டென்னிஸ் கற்றுக் கொள்ளச் சென்றான். இந்த நேரத்தில் அவனுக்கு ஏற்பட்டக் காயங்களால் அவனால் 5 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட முடியாமல் போனது. ஆனால் 2018 ஆம் ஆண்டில், அவன் 29 வயதை எட்டியபோது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலத்தையும், ஏடிபி சேலஞ்சர்ஸ் சுற்றுப்பயணத்தில் இரண்டு பதகங்களையும் வென்றான்,” என்றார்.
தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது தன் குடும்பம் தனியாகக் கையாள கற்றுக்கொண்டது தனக்கு பெருமை அளிப்பதாக உஷா பிரபாகரன் கூறினார்.
ஊறுகாய் முடித்து இப்போது ரசம் பற்றிய புதிய திட்டத்தில் உஷா பிரபாகரன் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். அவர் ஊறுகாய்களுக்கு காட்டிய அதே அர்ப்பணிப்புடன் சமையல் குறிப்புகளை சேகரிக்க முயற்சித்து வருகிறார். அடுத்து வரவிருக்கும் அவருடைய ரசம் புத்தகத்தில் 1,000 செய்முறைகள் உள்ளனவா என்பது தான் இப்போது பல பேருடைய ஒரே கேள்வி (அவரிடம் சுமார் 3,000 ஊறுகாய் சமையல் செய்முறைகள் இருந்தது அதிலிருந்து சுருக்க வேண்டியிருந்தது!).
உஷாவின் ஊறுகாய் புத்தகம் உலகம் முழுதும் பிரபலமாகி, பல பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. பலரும் அதை நகலெடுத்து பிறருக்கு பகிரும் அளவிற்கு அவரின் ஊறுகாய் வகைகள் வாய்க்கு ருசியாக இருந்திருக்கிறது.