Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

400.6 கோடி ரூபாய் நிதி திரட்டியது Ather Energy!

பெங்களூவைச் சேர்ந்த Ather Energy ஸ்டார்ட் அப் Caladium Investment மற்றும் Herald Square Ventures நிறுவனங்களிடமிருந்து 400.6 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

400.6 கோடி ரூபாய் நிதி திரட்டியது Ather Energy!

Tuesday October 18, 2022 , 2 min Read

பெங்களூவைச் சேர்ந்த Ather Energy ஸ்டார்ட் அப் Caladium Investment மற்றும் Herald Square Ventures நிறுவனங்களிடமிருந்து 400.6 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. நிறுவங்களுக்கான பதிவாளர் (RoC) அறிக்கை தாக்கலின்படி, இந்த நிதித்தொகை திரட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்நிறுவனம் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது. நிதி திரட்டுவதற்காக ரூபாய் 78,008 என்கிற சந்தா விலையில் 51,359 Series E1 CCPS வழங்க சிறப்பு தீர்மானம் இதில் நிறைவேற்றப்பட்டது.

Ather Energy
RoC தாக்கலின்படி, Ather நிறுவனத்தில் Caladium 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அதேபோல், Herald 64 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளது.

2022ம் ஆண்டில் இது Ather நிறுவனத்தின் இரண்டாவது நிதி திரட்டும் முயற்சி. இந்த ஆண்டு மே மாதம் இந்த ஸ்டார்ட் அப் 128 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. இந்த சீரிஸ் E நிதிச்சுற்று நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட் லிமிடெட் (NIIFL) மற்றும் Hero MotoCorp உள்ளிட்ட தற்போதுள்ள முதலீட்டாளர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

Get connected to Ather Energyys-connect

இந்த ஆண்டு ஜூலை மாதம் Ather நியூ ஜெனரேஷன் மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 450X அறிமுகப்படுத்தியது. இதன் விலை 1,55,657 ரூபாய். மேலும் இந்நிறுவனம் Ather Grid என்கிற அதன் 580-வது ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டை இந்தியாவின் 56 நகரங்களில் சமீபத்தில் நிறுவியிருப்பதாக அறிவித்திருந்தது.

இந்நிறுவனம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், Ather Energy கூடுதலாக இப்படிப்பட்ட 820 பாயிண்டுகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. 2023 நிதியாண்டு இறுதிக்குள் 1,400 என்கிற இலக்கை எட்ட இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

தயாரிப்புப் பணிகளைப் பொருத்தவரை Ather நிறுவனத்தின் ஓசூர் தொழிற்சாலை தற்போது ஆண்டிற்கு 1.20 லட்சம் வாகனங்கள் தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கையை ஆண்டிற்கு 4 லட்சம் வாகனங்களாக உயர்த்தும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் அருகிலேயே மற்றுமொரு தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2021-2022 நிதியாண்டில் மின்சார வாகனங்கள் சந்தை 408.5 கோடி ரூபாய் மதிப்பு கொண்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Get connected to Ather Energyys-connect

கடந்த ஆண்டு 79.8 கோடி ரூபாயாக இருந்த மதிப்புடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 411.9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம்,

2021 நிதியாண்டில் 233.3 கோடி ரூபாயாக இருந்த இழப்பு மின்சார வாகனங்களின் உதிரி பாகங்களின் விலை உயர்வு, ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளின் செலவு போன்ற காரணங்களால் 344.1 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

Vahan போர்டலின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 6,266 வாகனங்களை இந்நிறுவனம் பதிவு செய்த நிலையில் அக்டோபர் மாதத்தில் இதுவரை 3,520 வாகனங்களைப் பதிவு செய்துள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: ஐஸ்வர்யா லஷ்மி | தமிழில்: ஸ்ரீவித்யா

Get connected to Ather Energyys-connect