வயதான நோயாளிக்கான முதல் ` பிரத்யேக 'கேத் ஆய்வகம்' சென்னையில் Geri Care தொடங்கியது!
முதியோர் நோய் சிகிச்சை மற்றும் உடல் ஆரோக்கியப் பராமரிப்புச் சேவையில் பிரத்யேகமாகச் செயல்பட்டு வரும் ஜெரி கேர், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள முதியோருக்கான புதிய பல் நோக்கு மருத்துவமனையில் வயதான நோயாளிகளுக்கான இந்தியாவின் முதல் பிரத்யேக கேத் ஆய்வகத்தை தொடங்கியுள்ளது.
முதியோர் நோய் சிகிச்சை மற்றும் உடல் ஆரோக்கியப் பராமரிப்புச் சேவையில் பிரத்யேகமாகச் செயல்பட்டு வரும் 'ஜெரி கேர்' (Geri care), சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள முதியோருக்கான புதிய பல்நோக்கு மருத்துவமனையில் வயதான நோயாளிகளுக்கான இந்தியாவின் முதல் பிரத்யேக கேத் (Cath Lab) ஆய்வகத்தை தொடங்கியுள்ளது.
இந்த ஆய்வகத்தை ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயலதிகாரி பி.என்.வாசுதேவன் சென்னை ஆதம்பாக்கத்தில் திறந்து வைத்தார்.
இருதய நோய் தொடர்பான ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, உடல் உறுப்பு நீக்கம் அல்லது உடல் உறுப்பு ஒன்றின் செயலால் விளையும் உடல் உபாதைகளை போக்கும் விதமாக அந்த உறுப்பின் செயலை முடக்கி வைப்பது போன்ற சிகிச்சை மற்றும் பேஸ்மேக்கர்-ஐசிடி-க்களை பொருத்துதல் உள்ளிட்டவற்றுக்கான சோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ள இமேஜிங் சாதனங்கள் கொண்ட ஆய்வகமாகும் இது.
சென்னையில் முதியோர் சிகிச்சையில் நிபுணர்களான Dr.லட்சுமிபதி ரமேஷ் மற்றும் Dr. வி.சீனிவாஸ் ஆகியோரால் கடந்த 2018ஆம் ஆண்டு நிறுவப்பட்டது ஜெரி கேர் மருத்துவமனை. முதியோர்களுக்கு வீட்டுக்கு வந்து சிகிச்சை அளித்தல், கிளினிக் சேவைகள், அன்றாட வாழ்க்கை உதவிகள் மற்றும் மருத்துவமனைகள் என முதியோருக்கான பராமரிப்பை வழங்குகிறது ஜெரி கேர்.
இந்நிலையில், முதியோர் மருத்துவ நலன்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட முதியோர் நலன் சார் மருத்துவச் சேவைகளுக்கான ‘கேத்’ ஆய்வகத்தைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஜெரி கேர் ஹெல்த் சர்வீசஸின் நிர்வாக இயக்குநர் டாக்டர் லட்சுமிபதி ரமேஷ் கூறும்போது,
“வயதான நோயாளிகளுக்கு உள்ள அனைத்து சிறந்த மருத்துவ கண்டுபிடிப்புகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து , வயதானவர்களுக்கும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கும் எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் அவர்களுக்கான சிகிச்சை அனுபவத்தை மேம்படுத்துவதே எங்கள் இலக்கு.
ஜெரி கேர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள ஜெரியாட்ரிக் கேத் ஆய்வகம் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இதய ஆரோக்கியம் தொடர்பான முக்கியமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கான இந்தியாவின் முதல் பிரத்யேக கேத் ஆய்வகத்தை சென்னையில் தொடங்குவதில் பெருமை கொள்கிறோம், தொடர்ந்து தேசிய அளவில் முக்கிய இடங்களில் எங்கள் சேவைகளை விரிவுபடுத்த இருக்கிறோம், என்று தெரிவித்தார்.
கேத் ஆய்வகத்தை திறந்து வைத்து பேசிய ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பி.என். வாசுதேவன், கூறும்போது,
“சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஜெரி கேர் மருத்துவமனையில் ஜெரியாட்ரிக் கேத் ஆய்வகத்தை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வயதானவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மூத்தகுடிமக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முதல் ஆய்வகம் இது. தடையற்ற இதய பராமரிப்பை உறுதி செய்வதற்காக கூடுதலாக இந்த கேத் ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. வயதானவர்களின் சுகாதார சேவையை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் ஜெரி குழுவினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
ஜெரி கேர் மருத்துவமனையில் CBC, HbA1C/RBS, RFT, ECG மற்றும் ECHO ஆகியவற்றுடன் இதய மருத்துவரின் ஆலோசனையுடன் கூடிய மூத்த குடிமக்களுக்கான “Cardiac Health Check Pack” என்ற இதய பரிசோதனை பேக்கேஜும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராமில் 50% வரை தள்ளுபடி கிடைக்கும் என்று ஜெரி கேர் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியுள்ளது.