Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

கேமிங்கில் கில்லாடியா? கேமிங்கில் ஆர்வம் படைத்தவரா? ஆம் எனில் உங்களுக்கான நிகழ்வு இது...

கேமிங்கில் கில்லாடியா? கேமிங்கில் ஆர்வம் படைத்தவரா? ஆம் எனில் உங்களுக்கான நிகழ்வு இது...

Saturday January 19, 2019 , 2 min Read

Global Game Jam is back! யெஸ்... கேம் டெவலப்பிங் கற்போர், புரோபஷனல் வீடியோ கேம் டெவலப்பர்ஸ், டிசைனர்ஸ், ஆர்டிஸ்ட், மற்றும் வீடியோ கேமிங்கில் ஆர்வமுள்ள அனைவருக்குமான ஒன்று கூடலான ’குளோபல் கேம் ஜாம்’ (GGJ), இம்மாத கடைசி வீக்கெண்ட்டில் நடக்கவுள்ளது. அது சரி, ஆனா, GGJ என்றால்...?

GGJ ௭ன்பது கலிபோர்னியாவின் சான் லூயிஸ் ஓபிஸ்போவில் உள்ள குளோபல் விளையாட்டு ஜாம் எனும் சர்வதேச லாப நோக்கற்ற நிறுவனத்தால் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரே நேரத்தில் நடைபெறும் ஒரு தனிப்பட்ட வீடியோ கேம் உருவாக்கல் நிகழ்வாகும். AAO போன்ற புதிய நிகழ்வுகள் மூலம் விளையாட்டு வடிவமைப்பு மற்றும் விளையாட்டுk கல்வியினை ஊக்குவிக்க முடியும் என்ற குறிக்கோளுடன் இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது.

2009ம் ஆண்டு முதன் முதலில் தொடங்கப்பட்ட GGJ, உலகின் 53 இடங்களில் நடத்தப்பட்டு 1,650வீடியோ கேம்கள் உருவாகியுள்ளன. அவ்வாண்டு முதல் ஆண்டின் தொடக்க மாதத்தின் இறுதி வீக்கெண்டுகளில் இந்த ஒன்றுகூடல் உலகின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாய் மதுரை மண்ணிலும், ஃபர்ஸ்ட் சீட் எனும் கேம் டெவலப்மண்ட் ஸ்டூடியோவின் நிறுவனர் செந்தில் குமார் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து வருகிறார். 

பத்தாண்டுகளாய் வெற்றிகரமாய் நடந்து வரும் GGJவின் மதுரை நிகழ்வு, இந்தாண்டு ஐய்யர் பங்களாவில் உள்ள கிட்ஸ் கேரேஜ் மழலையர் பள்ளியில் நிகழவிருக்கிறது. ஜனவரி மாதம் 25ம் தேதி மாலை 5மணிக்கு தொடங்கும் நிகழ்வு தொடர்ச்சியாய் 48 மணி நேரங்களுக்கு நடத்தப்பட்டு, 27ம் தேதி மாலை 5மணிக்கு நிறைவடைகிறது.

ஆனால் என்ன தீமில் கேம் உருவாக்க வேண்டும் என்பது படு சீக்கெரட். நிகழ்வு தொடங்கிய பின்னே, உலகம் முழுவதும் நடக்கும் கேம் ஜாம் பங்கேற்பாளர்களுக்கு ஒரே நேரத்தில் கேம் தீம் அறிவிக்கப்படும். கேமிங்கில் ஆர்வமிக்கவர்களுக்கான சிறந்த அனுபவ சேகரிப்பு இந்நிகழ்வு தவிர போட்டியில்லை. ஆனாலும், பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதற்காக சிறப்புப் பரிசுகளை வழங்கி வருகிறார் செந்தில் குமார். 

“புரோகிராமர்ஸ், டிசைனர்ஸ், காலேஜ் ஸ்டூடன்ஸ் என வீடியோ கேமிங்கில் ஆர்வம் கொண்ட எவரேனும் பங்கேற்கலாம். மற்ற திறன்களைவிட கேமிங் கற்றுக் கொள்ள எங்கு ஆரம்பிப்பது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இந்நிகழ்வில் பங்கேற்பது நல்ல தொடக்கமாய் அமையும்,” என்கிறார் அவர்.

இதுபோன்றதொரு நன்தொடக்கத்துக்கு யுவர்ஸ்டோரி தமிழ் மீடியா பாட்னராக இருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறது. இதனால், சொல்லவருவது, கேமில் ஆர்வமுள்ளோர் இந்த நிகழ்ச்சியில் பங்குக் கொண்டு நிகழ்வை சிறப்பிக்க கேட்டுகொள்கிறோம்.

வருகை முன்பதிவுக்கு கிளிக்குக:- Global Game Jam

மேற்கொண்ட தகவல்களுக்கு:- https://www.facebook.com/events/2071227953102164

நுழைவுக் கட்டணம்: இலவசம்

நேரம்: 48 மணி நேரம் 

யார் பங்கேற்க முடியும்: எவரும்

வயது கட்டுப்பாடு: 18+ மட்டுமே

இடம் : கிட்ஸ் கேரேஜ், புது நத்தம் ரோடு, அய்யர் பங்களா, மதுரை - 625001

நாள்: ஜனவரி 25 - 27