‘மிஸ்டு கால் கொடுத்தால் கோழிப் பண்ணை விவசாயி ஆகலாம்’ - சுகுணா ஃபுட்ஸ் புதிய அழைப்பு!
கோழிப்பண்ணை வைப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் எளிதாக இதில் ஈடுபட உதவும் வகையில் மிஸ்டு கால் கொடுத்தால், கோழிப்பண்ணை வர்த்தகத்தில் ஈடுபடும் வாய்ப்பை வழங்கும் திட்டத்தை சுகுணா புட்ஸ் துவக்கியுள்ளது.
கோவையைச் சேர்ந்த 'சுகுணா ஃபுட்ஸ்' நிறுவனத்தின் அங்கமான சுகுணா சிக்கன், கோழிப்பண்ணை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் வகையில் புதிய திட்டத்தை துவக்கியுள்ளது. இதன் படி,
ஆர்வம் உள்ளவர்கள் மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் நிறுவனத்துடன் இணைந்து கோழிப்பண்ணை வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
ஒப்பந்த அடிப்படையில் கோழிப்பண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் சுகுணா சிக்கன், இந்த பிரிவில் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிறுவனத்துடன் இணைந்து கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக மிஸ்டு கால் கொடுத்தால், கோழிப்பண்ணை வர்த்தகத்தில் ஈடுபடும் வாய்ப்பை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி இருப்பதாக நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
கிராமப்புற இந்தியாவை புத்துயிர் பெற வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள நிறுவனம், விவசாய சமூகத்துடனான தனது உறவை மேலும் வலுவாக்கிக் கொள்ள இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.
பிராய்லர், லேயர் பார்மிங், குஞ்சு மையம், தீவனம் ஆலை உள்ளிட்ட ஒருங்கிணைந்த வசதிகளைக் கொண்டுள்ள சுகுணா ஃபுட்ஸ் நிறுவனம், இதன் மூலம் நீடித்த நிலையான தன்மை கொண்ட விவசாயத்தை வளர்க்க முடியும் என நம்புவதாக தெரிவித்துள்ளது.
மேலும், விவசாயிகள், 9894398944 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால், இடைத்தரகள் இல்லாமல் நிறுவனத்தை நேரடியாக எளிதாக தொடர்பு கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஒப்பந்த முறையிலான கோழிப்பண்ணை விவசாயிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பவதாக தெரிகிறது.
மேலும், பல விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பையும், பரஸ்பர வளர்ச்சியையும் எதிர்பார்ப்பதாகவும் நிறுவனம் இந்த மிஸ்டு கால் திட்டம் பற்றி தெரிவித்துள்ளது.
தொகுப்பு: சைபர் சிம்மன்