Gold Rate Chennai: புதிய உச்சம்; சவரனுக்கு ரூ.44,500-ஐ கடந்த தங்கம் விலை!
கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்றே குறைவாக உயர்ந்துள்ளது நடுத்தர மக்களை சற்றே நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்றே குறைவாக உயர்ந்துள்ளது நடுத்தர மக்களை சற்றே நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (21/03/2023)
கடந்த வாரம் முழுவதும் கிடுகிடுவென விலை ஏறி வந்த தங்கம், உச்சபட்சமாக சவரனுக்கு 44 ஆயிரத்து 500 ரூபாயைக் கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் இனி தங்கம் வாங்க முடியுமா? என நகைப் பிரியர்கள் இடையே குழப்பம் நீடித்தாலும், இன்று தங்கம் விலை சற்றே குறைவான அளவு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,560 ரூபாய்க்கும், சவரன் 44,480 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 5,570 ரூபாயாகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 44,560 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் அதிகரித்து 6,077 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 48,616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே இன்று வெள்ளியின் விலையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 70 காசுகள் அதிகரித்து 74 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோவிற்கு 700 ரூபாய் அதிகரித்து 74 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
திடீர் உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்காவின் வங்கி நெருக்கடி மற்றும் வட்டி விகித உயர்வை பின்வாங்க மத்திய வங்கி திட்டமிட்டு வருவது போன்ற காரணங்களால், அங்குள்ள சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. இது டாலர் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் பக்கம் முதலீட்டாளர்களின் கவனம் திரும்பி வருவதும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,570 (மாற்றம்: ரூ.10 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,560 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,077 (மாற்றம்: ரூ.10 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,616 (மாற்றம்: ரூ.80 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,500 (மாற்றம்: ரூ.20 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,000 (மாற்றம்: ரூ.160 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,000 (மாற்றம்: ரூ.22 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,000 (மாற்றம்: ரூ.176 அதிகரிப்பு)