Gold Rate Chennai: 2-வது நாளாக குறைந்தது தங்கம் விலை - இன்று கிராம் ரூ.6,850
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்திருப்பது, நகை வாங்கு விழைவோருக்கு ஆறுதலுக்கு உரியதாக உள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு ஆறுதலுக்கு உரியதாக உள்ளது.
சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.6,865 ஆகவும், சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.54,920 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து ரூ.7,489 ஆகவும், சவரன் விலை ரூ.128 குறைந்து ரூ.59,912 ஆகவும் இருந்தது. இன்றும் அதே அளவில் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - புதன்கிழமை (18.9.2024)
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.6,850 ஆகவும், சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.54,800 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து ரூ.7,473 ஆகவும், சவரன் விலை ரூ.128 குறைந்து ரூ.59,784 ஆகவும் இருக்கிறது.
சமீப நாட்களில் சவரனுக்கு ரூ.1,400 அளவுக்கு அதிகரித்த தங்கம் விலை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் புதன்கிழமை (18-9-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.96 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்து ரூ.96,000 ஆகவும் விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித குறைப்புக்கான எதிர்பார்ப்பு அப்படியே நீடிக்கிறது. இதற்கான விடை புதன்கிழமை இரவு தெரியவரும். அதையடுத்து, சர்வதேச சந்தைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழலாம். இப்போதைய சூழலில், உலக அளவில் முதலீட்டாளர்கள் இடையே உறுதியான போக்கு இல்லாததால் தற்போது தங்கம் விலை சற்றே குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,850 (ரூ.15 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.54,800 (ரூ.120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,473 (ரூ.16 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,784 (ரூ.128 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,850 (ரூ.15 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.54,800 (ரூ.120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,473 (ரூ.16 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,784 (ரூ.128 குறைவு)
Edited by Induja Raghunathan