Gold Rate Chennai: நகை வாங்க ரெடி ஆகுங்க; தங்கம் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
நேற்றைய நிலவரத்தை விட இன்று தங்கத்தின் விலை மேலும் சரிந்து, நகை வாங்க காத்திருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றைய நிலவரத்தை விட இன்று தங்கத்தின் விலை மேலும் சரிந்து, நகை வாங்க காத்திருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4,715 ரூபாய்க்கும், சவரன் 37,720 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வெள்ளி கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 4,706 ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 37,648 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 10 ரூபாய் குறைந்து 5,134 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 41,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி கிராம் 64 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 64,000 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
காரணம்: வரலாறு காணாத வகையில் சரிந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தை சரி செய்வதற்காக, ஃபெடரல் ரிசர்வ் (US FED) வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டதன் விளைவாக டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது தங்கத்தின் மீது கடும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.
இதனால் அதிக வட்டி வாய்ப்பு காரணமாக பாண்ட் மற்றும் டாலர்கள் மீது முதலீடு அதிகரித்துள்ளது. அதேசமயம் எவ்வித வட்டி வாய்ப்பும் இல்லாத தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது, அதன் விலையில் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,706 (மாற்றம்: ரூ 9 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,648 (மாற்றம்: ரூ 72 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,134 (மாற்றம்: ரூ 10 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 41,072 (மாற்றம்: ரூ.80 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,669 (மாற்றம்: ரூ 1 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,352 (மாற்றம்: ரூ.8 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,094 (மாற்றம்: ரூ.1 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.40,752 (மாற்றம்: ரூ.8 குறைவு)