Gold Rate Chennai: அப்பாடா!! நிம்மதி பெருமூச்சு விட வைத்த தங்கம் விலை; சவரனுக்கு இவ்வளவு குறைவா?
தங்கம் விலை இன்று குறைய ஆரம்பித்துள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று குறைய ஆரம்பித்துள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை நிலவரம் (06/05/2023)
இந்த வாரத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று கணிசமான அளவு குறைந்துள்ளது. வாரக்கடைசியில் தங்கம் கொடுத்த இந்த சர்ப்ரைஸ் நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,775 ரூபாய்க்கும், சவரன் 46,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 83 ரூபாய் குறைந்து 5,692 ரூபாயாகவும், சவரனுக்கு 664 ரூபாய் குறைந்து 45,536 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 83 ரூபாய் குறைந்து 6,162 ரூபாயாகவும், சவரனுக்கு 664 ரூபாய் குறைந்து 49,296 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே இன்று வெள்ளியின் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ஒரு ரூபாய் 30 காசுகள் குறைந்து 82 ரூபாய் 40 காசுகளுக்கும், கிலோவிற்கு ஆயிரத்து 400 ரூபாய் குறைந்து 82 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித உயர்த்தப்பட்டதால் மீண்டும் டாலர் மதிப்பு உயரத்தொடங்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது இருந்து டாலர் மீது திரும்பியுள்ளதால் தங்கம் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,692 (மாற்றம்: ரூ.83 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,536 (மாற்றம்: ரூ.664 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,162 (மாற்றம்: ரூ.83 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 49,296 (மாற்றம்: ரூ.664 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,650 (மாற்றம்: ரூ.70 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.45,200 (மாற்றம்: ரூ.560 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,164 (மாற்றம்: ரூ.76 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 49,312 (மாற்றம்: ரூ.608 குறைவு)