Gold Rate Chennai: நகைப்பிரியர்களுக்கு நற்செய்தி - ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை!
தங்கம் விலை இன்று குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்தோருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கம் விலை இன்று குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்தோருக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (01/06/2023)
நேற்று யாருமே எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை தடாலடியாக 400 ரூபாய் வரை உயர்ந்தது. ஆனால், இன்று தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தின் போது தங்கத்தின் விலை கிராமிற்கு 5,645 ரூபாயாகவும், சவரனுக்கு 45,160 ரூபாயாகவும் இருந்தது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 5,620 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 44,960 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6,072 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 48,576 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் சற்றே குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு 20 காசுகள் குறைந்து 77 ரூபாய் 60 காசுகளுக்கும், கிலோவிற்கு 200 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
அமெரிக்க கடன் உச்சவரம்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைந்துள்ளது சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,620 (மாற்றம்: ரூ.25 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,960 (மாற்றம்: ரூ.200 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,072 (மாற்றம்: ரூ.25 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,576 (மாற்றம்: ரூ.200 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,570 (மாற்றம்: ரூ.15 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,560 (மாற்றம்: ரூ.120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,076 (மாற்றம்: ரூ.17 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,608 (மாற்றம்: ரூ.136 குறைவு)