Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: பண்டிகைக் காலத்தில் தங்கம் விலையில் தொடரும் உச்சம் - சவரனுக்கு ரூ.320 உயர்வு!

இந்த வாரத்தின் தொடக்க நாளிலும் வெகுவாக உயர்ந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு வர்த்தக தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,000 அளவுக்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

Gold Rate Chennai: பண்டிகைக் காலத்தில் தங்கம் விலையில் தொடரும் உச்சம் - சவரனுக்கு ரூ.320 உயர்வு!

Monday January 13, 2025 , 2 min Read

கடந்த வார இறுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்க நாளிலும் வெகுவாக உயர்ந்திருப்பது, நகை வாங்க விழைவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு வர்த்தக தினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,000 அளவுக்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.7,300 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.58,400 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.17 உயர்ந்து ரூ.7,964 ஆகவும், சவரன் விலை ரூ.136 உயர்ந்து ரூ.63,712 ஆகவும் இருந்தது. தற்போது, மேலும் விலை அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் சவரன் விலை ரூ.59,000-ஐ நெருங்கலாம் என அஞ்சப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (13.1.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.40 உயர்ந்து ரூ.7,340 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.320 உயர்ந்து ரூ.58,720 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.43 உயர்ந்து ரூ.8,007 ஆகவும், சவரன் விலை ரூ.344 உயர்ந்து ரூ.64,056 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (13.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.102 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,02,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதேபோல், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே உயர்ந்துள்ளதாலும், பண்டிகை காலம் என்பதாலும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,340 (ரூ.40 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,720 (ரூ.320 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,007 (ரூ.43 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,056 (ரூ.344 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,340 (ரூ.40 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,720 (ரூ.320 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,007 (ரூ.43 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,056 (ரூ.344 உயர்வு)


Edited by Induja Raghunathan