Stock News: பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி; வரலாறு காணாத ரூபாய் மதிப்பு சரிவு!
சர்வதேச போக்குகளில் எதிரொலியாலும், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவாலும் இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு நிலவி வருகிறது.
சர்வதேச போக்குகளில் எதிரொலியாலும், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து குறைவாலும் இந்தியப் பங்குச் சந்தைகளில் கடும் சரிவு நிலவி வருகிறது. இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இப்போது வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.13) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 843.67 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 76,535.24 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 258.8 புள்ளிகள் சரிந்து 23,172.70 ஆக இருந்தது.
வாரத்தின் தொடக்க நாளிலேயே மாபெரும் வீழ்ச்சி ஆரம்பித்தது, முதலீட்டாளர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், சரிவின் தீவிரம் சற்றே தணிந்து வருவது ஆறுதல் அளித்துள்ளது. பெரும்பாலான நிறுவன பங்குகள் இறக்கம் கண்டுள்ளன.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 424.95 புள்ளிகள் (0.55%) சரிந்து 76,953.95 ஆகவும், நிஃப்டி 156.70 புள்ளிகள் (0.67%) சரிந்து 23,274.80 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையின் கடைசி வர்த்தக நிறைவில் பாதகமே நிலவியது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல், ஷாங்காய், ஹாங்காங் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. இந்த சர்வதேச போக்கு எதிரொலியாக மட்டுமின்றி, வெளிநாட்டு முதலீடுகளின் வரத்தும் வெகுவாக குறைந்திருப்பதால் இந்தியப் பங்குச் சந்தையில் கடும் சரிவு நிலவுகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
இண்டஸ்இண்ட் பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
டிசிஎஸ்
இன்ஃபோசிஸ்
நெஸ்லே இந்தியா
மாருதி சுசுகி
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டைட்டன் கம்பெனி
எஸ்பிஐ
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
என்டிபிசி
எல் அண்ட் டி
பாரதி ஏர்டெல்
ஐடிசி
பஜாஜ் ஃபைனான்ஸ்
டாடா மோட்டார்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இந்திய ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் 27 பைசா குறைந்து ரூ.86.31 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan