Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

1 ரூபாய், 2 ரூபாய்க்கு டீ? புதிய ஆஃபர்களுடன் சென்னையைக் கலக்கும் ’Tea Boy'

நீங்களும் டீ கடை போடணுமா? ரூ. 2.5 லட்சம் முதலீடு செய்து மாதம் 50 ஆயிரம் - 1 லட்சம் வரை வருமானம் ஈட்டுங்க. பெண்களுக்கு ஃபிரான்சைஸ் கட்டணத்தில் ரூ.50,000 வரை தள்ளுபடியும் உண்டு.

1 ரூபாய், 2 ரூபாய்க்கு டீ? புதிய ஆஃபர்களுடன் சென்னையைக் கலக்கும் ’Tea Boy'

Monday February 03, 2020 , 4 min Read

எந்த காலத்துலப்பா இருக்கீங்க 1 ரூபாய், 2 ரூபாய்க்கெல்லாம் டீயே கிடைக்காது என்று பொருளாதாரம் பேசும் சராசரி மக்களை ஸ்பெஷல் ஆஃபரால் தன் வசம் கவனத்தை திசை திருப்பி இருக்கிறது சென்னையில் பிரபலமாகத் தொடங்கி இருக்கும் ‘டீ பாய்’ (tea boy) பிராண்ட்.


பிப்ரவரி மாதத்தில் மட்டும் தான் இந்த சலுகை மற்ற நாட்களில் டீயின் விலை ரூ.10 மட்டுமே. நம்ம தெரு முக்கு அக்கா கடையிலயும், நாயர் கடையிலயுமே ரூ.10க்கு டீ கிடைக்குது, அப்புறம் எதுக்கு ’டீ பாய்’னு நினைக்கலாம். அங்க தான் விஷயமே இருக்கு ‘டீ பாய்’ காஸ்ட்லியான கடையில் கம்மி விலையான ரூ. 10ல் நறுமணம், புத்துணர்ச்சியோடு, இயற்கை மூலிகைகள் கலந்து தூய்மையான சுற்றுச்சூழலில் first class ஸ்ட்ராங்க் டீயைத் தருகிறது.

Tea Boy

Tea Boy திறப்பு விழாவில் நடிகை ரம்யா பாண்டியன் உடன் நிறுவனர் ஜோசப் ராஜேஷ்

’டீ பாய்’ எப்படித் தோன்றியது என்று அதன் நிறுவனர்களில் ஒருவரான ஜோசப் ராஜேஷ் யுவர் ஸ்டோரி தமிழிடம் பேசுகையில், என்னுடைய சொந்த ஊர் கரூர். பள்ளி, கல்லூரிப் படிப்புகளை அங்கேயே படித்தேன், படிக்கும் காலத்தில் NCCயில் பங்கேற்றதன் மூலம் போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஐபிஎஸ் அதிகாரிக்கான தேர்வு எழுதிய நிலையிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வேலைக்கும் போக மனமில்லாததால் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன்.


மூணாரில் தேயிலைத் தொழிலில் அனுபவமிக்க நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பேசுகையில் அங்கு தேநீர் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்று கேட்டேன், தேயிலைகளைப் பறித்து போட்டு தேநீர் தயாரிப்பதாகச் சொன்னார். நான் அங்கு குடித்த தேநீர் வித்தியாசமான சுவையில் இருந்தது. அப்போது தான் நான் உணர்ந்தேன் நாம் குடிப்பது டீ தூளில் இருந்து வரும் சாயத்தினாலான தேநீர் என்று.

”மூன்று தலைமுறைகளாக நாம் காலை, மாலை இரு வேளையிலும் டீ குடித்து புத்துணர்ச்சி பெறும் பழக்கத்திற்கு வந்துவிட்டோம். அப்படி இருக்கையில் ஆரோக்கியமான தேநீரை ஏன் மக்களுக்குத் தரக் கூடாது என்று எனக்குள் கேள்வி எழுந்தது என்கிறார்.

பல சுவைகளில் ஆரோக்கியமான தேநீரை இந்தியச் சந்தை மூலமாக சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக தன்னுடைய நண்பர்கள் 6 பேருடன் இணைந்து ’பிளாக்பெகோ’ (Blackpekoe) என்ற பிராண்டை உருவாக்கி தேநீர் விற்பனை சந்தைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார் ஜோசப். ரூ.20 விலையில் சுவையான தேநீரை வழங்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பிளாக்பெகோ தற்போது 12 அவுட்லெட்களில் சென்னை மற்றும் பெங்களூரில் இயங்கி வருகிறது.

பிளாக்பெகோவில் பிளாக் டீ, கிரீன் டீ, பாலுடன் சேர்ந்த டீ என பல்வேறு விதமான டீகள் கிடைக்கும். தேநீர் சந்தையில் அடுத்த கட்டத்தை அடைவதற்காக இந்த அவுலெட்களில் வாடிக்கையாளர்கள் விரும்பி அருந்தும் தேநீர் எது என்ற ஆய்வை செய்தேன். இதே போன்று வெளிஇடங்களிலும் டெலிவரி பாய்கள் மூலம் தேநீர் குறித்த சர்வே ஒன்றை எடுத்தேன்.

இதில் 50 சதவிகிதம் பேர் பாலுடன் சேர்த்த தேநீரையே விரும்புவதைக் கண்டறிந்தேன். இந்த முடிவின் பலனாக பாலுடன் இயற்கை மூலிகைப் பொருட்களையும் சேர்த்து நறுமணமான தேநீரை ரூ. 10 விலையில் விற்க முடிவெடுத்தேன், என்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘டீ பாய்’ என்ற பிராண்ட் அறிமுகம் செய்யப்பட்டு அதன் முதல் அவுட்லெட் மடிப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. டீ பாயின் செயல்பாடுகளை நான் கவனித்துக் கொள்ள, அதன் கணக்கு வழக்குகளை ஜெர்மனியில் இருக்கும் இணைநிறுவனர் ராதா கவனித்துக் கொள்கிறார்.

நச்சுனு சுவையில் ஒரே ஒரு தனித்துவமான தேநீர் என்பதே இந்தக் கடையின் சிறப்பு. விளம்பரங்கள் எதுவும் செய்யாமல் வெறும் வாய்மொழி பரிந்துரைப்பாக தொடக்க நாளிலேயே டீ பாய் 2000 வாடிக்கையாளர்களைப் பெற்றது. ஒரு சிறு பகுதியிலேயே இத்தனை வரவேற்பா என்று நான் அசந்தே போய்விட்டேன்.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாகத் தான் சைதாப்பேட்டையில் ஃபிரான்சைஸ் (franchise) முறையில் ஒரு அவுட்லெட் கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டு படு பிசியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் ஜோசப்.

joseph

ஜோசப் ராஜேஷ், சிஇஓ மற்றும் நிறுவனர், டீ பாய்

‘டீ பாய்’ பார்முலா மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது. அமைப்பு சாரா துறையாக இருக்கும் தேநீர் தொழிலை டீ பாய் பிரான்சைஸ் மூலம் ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டு வர நினைக்கிறேன். 1000 சுயதொழில்வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம், அதிலும் 70 சதவிகிதம் பெண்களாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

குறைந்தபட்சம் ரூ. 2.5 லட்சம் முதலீடு இருந்தாலே போதும் டீ பாய் ஃபிரான்சைஸ் பெற்று மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம் என்று உறுதியளிக்கிறார் ஜோசப். அதிலும் பெண்களுக்கு ஃபிரான்சைஸ் கட்டணத்தில் ரூ.50,000 வரை தள்ளுபடியும் உண்டாம்.

டீ பாய் அவுட்லெட்க்கான மாடல், தனிச்சுவை தேநீர் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அனைத்தையும் நாங்களே தந்துவிடுவோம். டீ போடுவது என்றால் பாலை காய வைத்து டீத்தூள், சர்க்கரை போட்டு கலப்பதல்ல, அறிவியல் ரீதியில் எந்தெந்த மூலிகைப் பொருளை எத்தனையாவது நிமிடத்தில் தேநீர் தயாரிப்பில் சேர்க்க வேண்டும், எவ்வளவு டிகிரி வெப்பத்தில் அதனை காய்ச்ச வேண்டும் என்ற செயல்பாடுகளை நாங்களே கற்றுத் தந்துவிடுவோம். இதனால் எங்கள் தேநீரின் சுவையில் எந்த மாற்றமும் இருக்காது, சுகாதாரத்திற்கும் குறைவிருக்காது என்கிறார் ஜோசப்.


டீ பாயை பிரபலப்படுத்தும் விதமாக பிப்ரவரி மாதத்தில் அசத்தல் ஆஃபர்களை சைதாப்பேட்டை கிளையில் அறிவித்துள்ளார்கள். ‘Your Date Your cost’ அதாவது பிப்ரவரி 10ம் தேதிக்குள் அன்றைய தேதி தான் தேநீரின் விலை. எங்களது அவுட்லெட்டை பார்த்து மக்கள் பலரும் இது காஸ்ட்லியான கடை அதனால் டீயின் விலையும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள், உண்மை அதுவல்ல என்பதற்காகவே இந்த தள்ளுபடியை அறிவித்திருக்கிறோம்.

tea boy

சலுகை விலையில் டீ குடிக்க லைனில் நிற்கும் தேனீர் விரும்பிகள்

என்னதான் டீயின் விலை ரூ.10 என்று போட்டிருந்தாலும் மக்கள் அதனை பெரிதாக கவனிக்கவில்லை, ஆனால் இந்த தள்ளுபடி எங்களுக்கு கைக் கொடுத்திருக்கிறது.

பிப்ரவரி 1ம் தேதி ரூ.1 விலையில் சுமார் 2 ஆயிரம் பேர் மகிழ்ச்சியோடு வந்து தேநீர் குடித்துவிட்டு சென்றனர். இதே போன்று 2ம் தேதி என்றால் ரூ.2 என தொடர்ச்சியாக 10ம் தேதி வரையிலும் கம்மியான விலையில் தேநீர் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுவும் ஒரு விதத்தில் வாடிக்கையாளர்களைக் கட்டிப்போடுவதற்கான மார்க்கெட்டிங் சக்சஸ் ஃபார்முலா என்கிறார் ஜோசப் ராஜேஷ்.


இதுமட்டுமல்ல போலீஸாக வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர், தற்போது அந்த டச்சையும் தன்னுடைய டீ பாய் ஆஃபரில் களமிறக்கியுள்ளார். பெண்களுக்கு உதவுவற்காக சென்னை மாநகரக் காவல்துறை அறிமுகம் செய்துள்ள காவலன் செயலியை பதிவிறக்கி பயன்படுத்துபவர்களுக்கு தேநீர் இலவசம் என்றும் அறிவித்திருக்கிறார் இவர்.


ப்ரான்சைஸ் தகவலுக்கு தொடர்பு கொள்ள: ஜோசப்- 9360123355