Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: ஒரேநாளில் கிடுகிடு உயர்வு - ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.1,000 அதிகரித்துள்ளது.

Gold Rate Chennai: ஒரேநாளில் கிடுகிடு உயர்வு - ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை!

Friday January 03, 2025 , 2 min Read

புத்தாண்டு பிறந்ததில் இருந்தே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் வகையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.1,000 அதிகரித்துள்ளது நகை வாங்க விழைவோருக்கு பேரதிர்ச்சி தந்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.7,180 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.57,440 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.7,833 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.62,664 ஆகவும் இருந்தது.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (3.1.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.7,260 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.640 உயர்ந்து ரூ.58,080 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 உயர்ந்து ரூ.7,920 ஆகவும், சவரன் விலை ரூ.696 உயர்ந்து ரூ.63,360 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (3.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.100 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 உயர்ந்து ரூ.1,00,000 ஆகவும் உள்ளது.

gold

காரணம் என்ன?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை உயர்ந்திருப்பது மட்டுமின்றி, பண்டிகை காலம் என்பதால் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, தங்கத்தின் மீது முதலீடு செய்வதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,260 (ரூ.80 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,080 (ரூ.640 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,920 (ரூ.87 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,360 (ரூ.696 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,260 (ரூ.80 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.58,080 (ரூ.640 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,920 (ரூ.87 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.63,360 (ரூ.696 உயர்வு)


Edited by Induja Raghunathan