Gold Rate Chennai: அடேங்கப்பா!! இன்று 43,000 ரூபாயை கடந்தது தங்கம் விலை!
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை போக்கு காட்டி வந்த நிலையில், இன்று யாருமே எதிர்பாராத அளவிற்கு உயர்ந்து நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை போக்கு காட்டி வந்த நிலையில், இன்று யாருமே எதிர்பாராத அளவிற்கு உயர்ந்து நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (26/01/2023)
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே இறங்குவது, ஏறுவதுமாக போக்கு காட்டி வந்த நிலையில், இன்று வரலாறு காணாத உச்சத்தை நெருங்கியுள்ளது. தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது நகை வாங்க காத்திருந்த நடுத்தர மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,345 ரூபாய்க்கும், சவரன் 42,760 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வியாழன் கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 5,380 ரூபாயாகவும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 43,040 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 35 ரூபாய் அதிகரித்து 5,742 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 45,936 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையிலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் அதிகரித்து 75 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1000 ரூபாய் அதிகரித்து கிலோ 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அடுத்த வாரம் நடைபெற உள்ள கொள்கைக் கூட்டத்தில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் பாண்ட் மற்றும் டாலர் மூலம் கிடைக்கூடிய வட்டி வருவாய் பெரிய அளவில் இருக்காது என்பதால், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்து வருவது விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,380 (மாற்றம்: ரூ.35 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,040 (மாற்றம்: ரூ.280 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,742 (மாற்றம்: ரூ.35 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,936 (மாற்றம்: ரூ.280 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,310 (மாற்றம்: ரூ.40 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,480 (மாற்றம்: ரூ.320 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,793 (மாற்றம்: ரூ.40 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 46,344 (மாற்றம்: ரூ.320 அதிகரிப்பு)