Gold Rate Chennai: ஒரேயடியாய் உயர்ந்த தங்கம் விலை; இன்று சவரனுக்கு எவ்வளவு?
இன்று தங்கத்தின் யாருமே எதிர்பாராத அளவிற்கு தடாலடியாக சவரனுக்கு 176 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இன்று தங்கத்தின் யாருமே எதிர்பாராத அளவிற்கு தடாலடியாக சவரனுக்கு 176 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (01/02/2023)
கடந்த சில நாட்களாகவே மாற்றம் இன்றி நீடித்து வந்த தங்கம் விலை, நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு சற்றே குறைந்தது. இந்த மகிழ்ச்சி நீடிக்கும் முன்பே, இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 176 ரூபாய் அளவிற்கு உயர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சென்னையில் கடந்த வார வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,360 ரூபாய்க்கும், சவரன் 42,880 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை), இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து 5,360 ரூபாயாகவும், சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து 42,880 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 22 ரூபாய் அதிகரித்து 5,722 ரூபாய்க்கும், சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து 45,776 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையை போலவே இன்று வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமிற்கு 30 காசுகள் அதிகரித்து 74 ரூபாய் 80 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 74 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்க ஃபெடரல் வங்கி மிகக்குறைந்த அளவிலேயே வட்டி விகிதத்தை உயர்த்தும் என்பதால் டாலர் மற்றும் பாண்ட் குறியீட்டில் மிகப்பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும் 10 ஆண்டு கால பத்திர வருவாய் மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்டுள்ள சரிவும், முதலீட்டாளர்களை தங்கத்தின் மீது தங்களது கவனத்தை திரும்ப வைத்துள்ளது. எனவே கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,360 (மாற்றம்: ரூ.22 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,880 (மாற்றம்: ரூ.176 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,722 (மாற்றம்: ரூ.22 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 45,776 (மாற்றம்: ரூ.176 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,275 (மாற்றம்: ரூ.25 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.42,200 (மாற்றம்: ரூ.200 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,755 (மாற்றம்: ரூ.28 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 46,040 (மாற்றம்: ரூ.244 அதிகரிப்பு)