Gold Rate Chennai: சற்றே உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு இவ்வளவு மட்டுமே!
கடந்த வாரம் முழுவதும் கிராமிற்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஒரு ரூபாய் மட்டுமே அதிகரித்து சற்றே நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
கடந்த வாரம் முழுவதும் கிராமிற்கு 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஒரு ரூபாய் மட்டுமே அதிகரித்து சற்றே நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
சென்னையில் கடந்த சனிக்கிழமை இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் 4,650 ரூபாய்க்கும், சவரன் 37, 200 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (திங்கட் கிழமை), 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 4,651 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 37,208 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 1 ரூபாய் அதிகரித்து 5,053 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாய் வரை அதிகரித்து 40,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையைப் பொறுத்தவரை கிராமிற்கு 80 காசுகள் குறைந்து 60.70 ரூபாயாகவும், கிலோவிற்கு 800 ரூபாய் குறைந்து 60,700 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.
காரணம்: அமெரிக்க டாலரின் மதிப்பு 113.567 என்ற புதிய உச்சத்தை அடைந்திருப்பதால், இதனால் உலகின் பல்வேறு நாடுகளின் தங்களது நாணயத்தை மதிப்பை காக்க போராடி வருகின்றன. டாலரின் மதிப்பு அசுர வேகத்தில் முன்னேறி வருவதால் முதலீட்டாளர்கள் டாலர்களில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக கருத ஆரம்பித்துள்ளனர். இதனால் தங்கத்தின் விலையின் மீது பெரிய அளவிலான மாற்றம் ஏற்படவில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,651 (மாற்றம்: ரூ.1 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,208 (மாற்றம்: ரூ.8 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,053 (மாற்றம்: ரூ. 1 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,424 (மாற்றம்: ரூ.8 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,600 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.36,800 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,020 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.40,160 (மாற்றமில்லை)