Gold Rate Chennai: தங்கம் விலை திடீர் சரிவு; சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை இன்று மீண்டும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
தங்கம் விலை இன்று மீண்டும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
தங்கம் விலை நிலவரம் (13/02/2024):
கடந்த சனிக்கிழமையில் இருந்து நேற்று வரை தொடர்ந்து 3 நாட்களாக தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரே விலையிலேயே நீடித்து வந்த தங்கம் விலை, இன்று தடாலடியாக சரிந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
சென்னையில் நேற்றைய இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,830 ரூபாய்க்கும், சவரன் 46,640 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை) 22 காரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 20 ரூபாய் குறைந்து 5,810 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து 46,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் கிராமிற்கு 20 ரூபாய் குறைந்து 6,280 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 50,240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சரிவுக்கான காரணம் என்ன?
முதலீட்டாளர்களின் கவனம் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்பதன் மீது திரும்பியுள்ளதால்,தங்கத்தின் மீதான முதலீடுகள் சரிந்துள்ளன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,810 (மாற்றம்: ரூ.20 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.46,480 (மாற்றம்: ரூ.160 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,280 (மாற்றம்: ரூ.20 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.50,240 (மாற்றம்: ரூ.160 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,760 (மாற்றம்: ரூ.10 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 46,080 (மாற்றம்: ரூ.80 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,284 (மாற்றம்: ரூ.11 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 50,272 (மாற்றம்: ரூ.88 குறைவு)