'ஆசிரியர்களின் பொற்காலம் திரும்புகிறது' - TechSparks 2021ல் பைஜு ரவீந்திரன் பேச்சு!
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப மாநாடான டெக்ஸ்பார்க்ஸ் 2021 நிகழ்ச்சியில், பைஜுஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன், ஆசிரியர்களில் நட்சத்திரங்களை உருவாக்குவது பற்றி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியைகளுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் சமூகத்திற்கு நல்லது செய்வது மற்றும் லாப நோக்கம் தொடர்பான கர
பெங்களூருவை தலைமையமகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய கல்வி நுட்ப டெகாகான் (10 பில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்புள்ள ஸ்டார்ட் அப்) நிறுவனமான பைஜுஸ், வகுப்பறையை எங்கிருந்தும், எந்த நேரத்திலும் அணுகுவதன் மூலம் இந்திய இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்திக்கொள்ள வழி செய்வதில் முக்கிய கிரியாஊக்கியாக விளங்குகிறது.
இந்தியா இளைஞர்களை அதிகம் கொண்ட தேசம் எனும் போது இது மிகவும் முக்கியமானது. எனினும், இந்திய இளைஞர்கள் பெரும்பாலும் சுய வேலை மற்றும் சுய வேகம் ஆகியவற்றுக்கு வெளியிலேயே இருந்தனர். இதைவிட முக்கிய அம்சம் என்னவெனில், பைஜுஸ் குடும்பத்தில் இருக்கும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியைகள். பைஜூஸ் போன்ற வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் இவர்கள் தங்கள் தனி வாழ்க்கை மற்றும் பணி வாழ்க்கையை ஒருங்கிணைத்திருக்க முடியாது.
இந்தியா முழுவதும் ஆசிரியர்களின் ஆற்றலை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் வருமானம் ஈட்டும் ஆற்றலை மேம்படுத்து, குறைந்த சம்பளம் கொண்ட பணி எனும் நிலையை மாற்றியிருப்பதன் மூலம், ஆசிரியர்களின் பொற்காலத்தை பைஜுஸ் துவக்கி வைத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் தொழில்நுட்ப மாநாடான டெக்ஸ்பார்க்ஸ் 2021 ல் துவக்க நாள் நிகழ்வில் பேசும் போது பைஜுஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன்,
“ஆசிரியர்களின் பொற்காலம் திரும்பி வருவதை காண்கிறேன்...” என்று கூறினார்.
இவரே ஒரு முன்னாள் கணித ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. “நம்முடைய எதிர்காலம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள் எப்போதுமே முக்கியப் பங்காற்றி வருகின்றனர். இருப்பினும் அவர்கள் பெரும்பாலும் உரிய அங்கீகாரம் பெற்றதில்லை. ஆசிரியர்களே கூட மாணவர்கள் மீது தாங்கள் உண்டாக்கம் தாக்கத்தை குறைத்து மதிப்பிடுகின்றனர்.
ஆனால், இப்போது பணம் இதை மாற்றியுள்ளது. தொழில்நுட்பம் ஆசிரியர்கள் வருவாய் ஈட்டுவதை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. உலகமே இன்று வகுப்பறையாகி இருக்கிறது, என்று அவர் மேலும் கூறினார்.
"யார் வேண்டுமானாலும் ஆசிரியராகலாம், நீங்கள் விரும்புவதை கற்றுத்தரலாம். கணிதம், அறிவியல் என உங்களுக்கு ஈடுபாடு உள்ளதை கற்றுக்கொடுக்கலாம். ஆன்லைனில் சென்றால் நீங்கள் மாணவர்களை கண்டறியலாம்,” என்று யுவர்ஸ்டோரி நிறுவனர் , சி.இ.ஓ ஷர்த்தா சர்மாவுடன் பேசும் போது பைஜு ரவீந்திரன் கூறினார்.
இந்தியாவில் ஆசிரியர்கள் எப்போதுமே மதிக்கப்பட்டாலும், அந்த மதிப்பு பொருளாதார நோக்கில் அமைந்ததில்லை. அவர்கள் எந்த அளவு தகுதி உடையவர்களாக இருந்தாலும், அதற்கேற்ப பொருளியல் பலன் பெறாமல், முனிவர்களாக கருதப்படும் நிலையிலேயே ஆசிரியர்களின் சித்திரம் இருந்து வந்துள்ளது.
இதனால் தான், யுவர்ஸ்டோரியின் ஷ்ரத்தா சர்மா, ராமாயணம், மகாபாரதத்தில் இருந்து மகத்தான ஆசிரியர்களான வசிஷ்டர் மற்றும் துரோனரை உதாரணம் காட்டி பேசினார்.
“ஆனால், பணம் என்று வரும் போது, செல்வம் என வரும் போது அது குறைத்து மதிப்பிடப்பட்டது. இந்த நிலை மாறி வருகிறது. இன்று ஆசிரியர்கள் நன்றாக பொருள் ஈட்டும் வகையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் நீங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளதால் இது பற்றி பேச விரும்புகிறேன்: என்று ஷரத்தா சர்மா கூறினார்.
அது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்தை குறிக்கோளாக கொள்ளாத பெண்கள் இந்தத் துறையில் பாலின சார்பின் சுமையையும் அனுபவித்துள்ளனர். அவர்களின் தாய்மை மற்றும் தியாக குணமே போற்றப்பட்டுள்ளன. மேலும், கற்பித்தல் என்பது, குறைந்த சம்பளம் கொண்ட, திருமணம் வரை மேற்கொள்ள வேண்டிய பணி என்றே அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலை இப்போது இல்லை. இப்போது பைஜூ ஆசிரியர் வகுப்பறையில் இருந்து ஒரு கிளிக் தொலைவில் மட்டுமே இருக்கிறார். அவரது பணி வாழ்க்கை மேம்படுவது சாத்தியமாகியுள்ளது.
கற்றல் பணிக்கு இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளதன் மூலம் பைஜுஸ், ஒவ்வொரு ஆசிரியரையும் நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது. எதிர்காலத் தலைமுறைக்கான அடித்தளம் அமைத்து தரும் செல்வாக்காளர் என உணர வைத்துள்ளது.
ஆசிரியர் சமூகத்திற்கு அதிகாரம் அளித்துள்ளதோடு, ஆசிரியர்கள் தங்களுக்கான செல்வாக்கை கொண்டுள்ள நட்சத்திர கலாச்சாரத்தையும் உருவாக்கியுள்ளதாக ரவீந்திரன் குறிப்பிட்டார். இந்த கல்வி நுட்ப நிறுவனம் 12,000 பெண் ஆசிரியர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளதாக ஷர்த்தா சர்மா குறிப்பிட்டார்.
எனினும், இந்த கல்வி ஜனநாயகமயமாக்கல் தரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று ரவீந்திரன் கூறினார். இந்த ஆசிரியர்கள் அனைவரும், அதிகத் தகுதியுடைய பட்டதாரிகள் என்றும், மற்றபடி சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வளைந்து கொடுக்கும்பணி நேரம், வசதி உள்ளிட்ட அம்சங்கள் இவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன.
“இது பயன்படுத்திக்கொள்ளப்படாத வாய்ப்பாக இருந்தது என்று கூறிய ரவீந்திரன் இது செலவு தொடர்புடையது மட்டும் அல்ல தரம் தொடர்புடையதும்,” என்று கூறினார்.
“உலகிற்கு கற்றுத்தரும் பணியை செய்ய நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் துவங்கியது ஒரு புரட்சியாக மாறும் என சொல்வதில் மகிழ்கிறேன்,” என்றும் கூறினார்.
இந்த கல்வி நுட்ப நிறுவனம் 16.5 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்தியாவின் மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் எனும் அந்தஸ்தை பெற்றுள்ளது. 16 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பேடிஎம் நிறுவனத்தை முந்தியுள்ளது. எனினும் இந்த நிறுவனங்களின் தாக்கம் அவற்றின் மதிப்பை கடந்து அமைந்துள்ளது.
ஆங்கிலத்தில்: சன்ஹதி பானர்ஜி | தமிழில்: சைபர் சிம்மன்