Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

கூகுள் மேப்ஸ்-க்கு ‘குட்பை’- சொந்த மேப்களை பயன்படுத்தப் போகும் ஓலா கேப்ஸ்!

கடந்த மாதம் Azure பயன்பாட்டில் இருந்து வெளியேறிய பிறகு, நாங்கள் இப்போது கூகுள் மேப்பில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டோம், என ஓலா நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கூகுள் மேப்ஸ்-க்கு ‘குட்பை’- சொந்த மேப்களை பயன்படுத்தப் போகும் ஓலா கேப்ஸ்!

Sunday July 07, 2024 , 1 min Read

ஓலா கேப்கள், தனது பயணங்களுக்கு இதுவரை கூகுள் மேப்களைப் பயன்படுத்தி வந்தது, தற்போது கூகுள் மேப்களிலிருந்து வெளியேறி தாங்களே உருவாக்கிய ஓலா மேப்களைப் பயன்படுத்தப் போவ்வதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஓலா கேப்ஸ் நிறுவனர் பாவிஷ் அகர்வால் கூறும்போது,

இதுவரை கூகுள் மேப்களுக்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவழித்துக் கொண்டிருந்தோம். ஆனால், இந்த மாதத்தில் அந்தச் செலவே இல்லாமல் செய்து விட்டோம். அதாவது, நாங்களே உருவாக்கிய ஓலா மேப்களைப் பயன்படுத்தினோம். உங்கள் ஓலா செயலியை இப்போதே செக் செய்து தேவைப்பட்டால் புதுப்பிக்கவும்," என்றார்.
Google Maps

Image Credits: Pixabay

கடந்த மாதம் Azure-இல் இருந்து வெளியேறிய பிறகு, நாங்கள் இப்போது கூகுள் மேப்பில் இருந்து முழுமையாக வெளியேறிவிட்டோம்.

ஸ்ட்ரீட் வியூ, நியூரல் ரேடியன்ஸ் ஃபீல்டுகள் (NERFs), உட்புறப் படங்கள், 3D வரைபடங்கள் மற்றும் ட்ரோன் வரைபடங்கள் போன்ற அம்சங்களை ஓலா வரைபடத்தில் சேர்த்து வருகிறது.

Ola Maps API Krutrim Cloud-இல் கிடைக்கிறது, டெவலப்பர்கள் அதை தங்கள் செயலிகளில் ஒருங்கிணைக்கலாம். ஓலா தனது வரைபடங்களை எவ்வாறு உருவாக்கியது என்று ஆர்வமுள்ளவர்களுக்கு, இந்த வார இறுதியில் விரிவான வலைப்பதிவு இடுகையை வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

சுமார் 3 மாதங்கள் முன்னதாக, மைக்ரோசாஃப்ட் அஸூர் (Microsoft Azure) என்னும் கிளவுட் கம்யூட்டிங் சேவைக்கு பதிலாக ஓலா தனது சொந்த AI நிறுவனமான க்ரூடிம் (Krutrim) நடைமுறைக்கு மாறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தாங்களே உருவாக்கிய மேப்கள் உள்ளிட இயங்கு தளத்திற்கு மாறியது ஓலாவின் நஷ்டங்களை குறைக்க உதவியுள்ளது. ஓலா நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ANI டெக்னாலஜிஸ் 2022-23 நிதியாண்டில் (FY23) ₹772.2 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பை அறிவித்தது, முந்தைய நிதியாண்டில் ₹1,522.3 கோடியிலிருந்து கிட்டத்தட்ட பாதி குறைந்தது. இதற்கிடையில், இயக்க வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 42 சதவீதம் உயர்ந்து ₹2,799.3 கோடியாக உள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது..