31.17 ஏக்கர் பரப்பளவு; 2,400 கோடி ரூபாய் மதிப்பு - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட வீடு!
சுந்தர் பேச்சை பற்றி தமிழர்களுக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. உலகிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளை கட்டி ஆளும் நம்ப மதுரை தமிழன். பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்பு வகிக்கும் இந்திய வம்சாவளியினர் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்.
சுந்தர் பிச்சை பற்றி தமிழர்களுக்கு அதிக அறிமுகம் தேவையில்லை. உலகிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளை கட்டி ஆளும் நம்ம ஊர் தமிழன். பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் இந்திய வம்சாவளியினர் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்.
தனது கடின உழைப்பு மற்றும் சாதனைகள் மூலமாக இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக விளங்கும் சுந்தர்பிச்சை பற்றிய லேட்டஸ்ட் செய்தி ஒன்று இணையத்தில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
கூகுள் சுந்தர் பிச்சை:
ஐஐடி பட்டதாரியான சுந்தர் பிச்சை, 2015ம் ஆண்டு, கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டு கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். இவரது தலைமையின் கீழ் கூகுளின் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டன. மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்கிலும் மிகப்பெரிய அலவிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சுந்தர் பிச்சை கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். அவரைப் போலவே பிரம்மாண்ட அவரது வீடும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
31.17 ஏக்கரில் பிரம்மாண்ட வீடு:
கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் உள்ள லாஸ் ஆல்டோஸில் அமைந்துள்ளது சுந்தர் பிச்சையின் 31.17 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட வீடு. சுந்தர் பிச்சை இந்த வீட்டை 40 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியதாக சொல்லப்படுகிறது. நடப்பு ஆண்டின் மதிப்புபடி, சுந்தர் பிச்சை வீட்டின் மதிப்பு 2,400 கோடி ரூபாய் ஆகும்.
4,429 சதுர அடியில் பரந்து விரிந்து கிடக்கும் அவரது ஆடம்பரமான வீட்டில் 9 படுக்கை அறைகள், 5 குளியலறைகள், கணினி ஆய்வகம், தியேட்டர், சலூன், நீச்சல் குளம், கிரிக்கெட் மைதானம் போன்றவை உள்ளன.
இந்த வீட்டின் உட்புறத்தை சுந்தர் பிச்சையின் மனைவியே முழுமையாக வடிவமைத்துள்ளார். இதற்கான இன்டீரியர் டிசைனிங்கிற்காக மட்டும் 49 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர வீட்டினுள் இன்பினிட்டி நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, ஒயின் பாதுகாப்பு அறை, சோலார் பேனல்கள், லிஃப்ட், பணியாளர்கள் தங்குமிடம் உள்ளிட்ட நவீன வசதிகளும் உள்ளன.
சுந்தர் பிச்சைக்கு கார் என்றால் கொள்ளை பிரியம். அதனால் அவரது கார் கலெக்ஷனில் Mercedes S650, Mercedes Benz V Class, BMW 730 LD, Range Rover, Porsche ஆகிய காஸ்ட்லியான சொகுசு கார்கள் இடம் பிடித்துள்ளன.
கூகுள் நிறுவனமான ஆல்பபெட், சுந்தர் பிச்சைக்கு ஆண்டுக்கு ரூ.1,880 கோடி பேக்கேஜை வழங்குகிறது. பிச்சை பெற்ற மொத்த தொகுப்பு ரூ. 1,865 கோடி மதிப்புள்ள பங்குகள், அத்துடன் அவரது அடிப்படை சம்பளம் ரூ. 15 கோடி ஆகும். தற்போது சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு ரூ.10,215 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
‘இந்தியா என்னில் ஒரு அங்கம்’ - பத்ம பூஷன் விருது பெற்ற கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை உருக்கம்!