Remove China Apps மற்றும் Mitron ஆப்’களை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்!
இந்தியாவில் பல லட்சம் மக்களால் டவுன்லோட் செய்யப்பட்டு வைரலான ‘Mitron' மற்றும் ‘Remove China Apps' ஆகிய இரண்டு செயலிகளையும் 24 மணி நேரத்தில் கூகுள் நீக்கியது ஏன்?
கடந்த சில தினங்களாக இந்தியாவில் வைரலாக டவுன்லோட் செய்யப்பட்ட ‘Remove China Apps' மற்றும் ‘Mitron’ செயலிகள், கூகுளின் ப்ளேஸ்டோர் பாதுகாப்புக் கொள்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி, தனது ப்ளேஸ்டோரில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் கூகுள், அந்த ஆப்களை நீக்கியுள்ளது. இந்த இரு ஆப்கள், ஒருவரின் போனில் உள்ள சீன ஆப்’களை கண்டறிந்து உடனே டெலீட் செய்ய உதவுவதற்காக இயங்கியது.
கூகுளின் கொள்கையின்படி,
“நாங்கள் மற்ற ஆப்’களை டெலீட் செய்ய வழிகாட்டும் ஆப்’களை அனுமதிப்பதில்லை. நேர்மையற்ற இத்தகைய செயல்பாடுகள் எங்கள் கொள்கைக்கு எதிரானது. ஒரு ஆப் பயனருக்குத் தேவையான மறைமுகமில்லாத செயல்பாடுகளைக் கொண்டிருக்கவேண்டும். ஒரு ஆப் மற்ற ஆப்’களை மறைமுகமாக தாக்கவோ, பயனரின் அனுமதியில்லாமல் அவர்களின் போனில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யக்கூடாது,” என்று கூறுகிறது.
இந்த கொள்கைக்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, கூகுள் ‘Remove China Apps' மற்றும் ‘Mitron’ ஆப்’களை தற்போது நீக்கியுள்ளது.
‘Remove China Apps' மற்றும் ‘Mitron’ என்ன செய்தது?
OneTouch AppLabs என்ற ஜெய்பூரைச் சேர்ந்த நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ‘Remove China Apps' கடந்த சில தினங்களாக, இந்திய-சீனா எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து இந்தியர்களிடையே சீன ஆப் மற்றும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் தொடங்கியதால் பிரபலமடைந்தது.
இந்தியர்களிடையே சீனாவுக்கு எதிராக கோபம் நிலவியிருந்த சூழலில், அந்த ஆப் பிரபலமானது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இதை டவுன்லோட் செய்தார்கள். பல பிரபலங்களும் Remove China Apps-ஐ ஆதரித்து டீவீட் செய்தனர். யோகா குரு பாபா ராம்தேவ் முதல் பல சினிமா பிரபலங்களும் இந்த ஆப்-க்கு ஆதரவாக இருந்தனர்.
“Remove China Apps 10 நாட்களில் சுமார் 50 லட்சம் டவுன்லோட்கள் செய்யப்பட்டது.”
Mitron ஆப் மீதும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. சைனாவை தலைமையிடமாகக் கொண்ட பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் ஆப்’க்கு எதிராகத் இந்திய மக்களுக்கு தொடங்கப்பட்டதே Mitron ஆப். பொதுவாக ஒரு ஆப்-ஐ வடிவமைக்க டெவலப்பர்கள், ஏற்கனவே உள்ள சோர்ஸ் கோட் பயன்படுத்தி உருவாக்குவார்கள். அப்படி அவசர அவசரமாக தொடங்கப்பட்டதே Mitron ஆப். ஆனால் இது ஏற்கனவே இருந்த டிக்டிக் என்ற ஆப்-ன் சோர்ஸ் கோடை பயன்படுத்தியது. இது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தைச் சேர்ந்ததாகும். இதை ஆராய்ந்த சைபர் வல்லுனர்கள்,
“Mitron ஆப்-ல் எந்தவித கூடுதல் பாதுகாப்பு அம்சமும் இல்லை, அதன் தனியுரிமை கொள்கைகளும் வலுவில்லாமல் இருப்பதால் இதில் உள்ள டேட்டா ரிஸ்காக அமையும்,” என்றார்.
டிக்டாக் ஆப்க்கு போட்டியாக இந்தியாவில் சுமார் 5 மில்லியன் டவுன்லோட்களை பெற்ற Mitron ஆப்-பையும் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கியது. டேட்டா பாதுகாப்புக் காரணங்களுக்காக கூகுள் இதை நீக்கியுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த ஆப்-ஐ ஏற்கனவே பதிவிறக்கம் செய்துள்ளவர்கள் உடனடியாக அதை டெலீட் செய்வதே நல்லது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல் உதவி: The New Indian Express