Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தினமும் ஊழியர்களுக்கு 'ராஜவிருந்து' - கூகுளின் வியாபாரத் தந்திரத்தை போட்டுடைத்த சுந்தர் பிச்சை!

கூகுள் தனது ஊழியர்களுக்கு தினமும் இலவச உணவு கொடுப்பதின் பின்னணியில் உள்ள வியாபாரத் தந்திரத்தைப் பற்றி அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை வெளிப்படையாகப் பேசி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் ஊழியர்களுக்கு 'ராஜவிருந்து' - கூகுளின் வியாபாரத் தந்திரத்தை போட்டுடைத்த சுந்தர் பிச்சை!

Wednesday October 23, 2024 , 2 min Read

கூகுள் என்ற வார்த்தையைத் தெரியாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு, ஆசிரியராக, சமயத்தில் மருத்துவக் குறிப்புகளைத் தரும் ஆலோசகராக, அள்ள அள்ளக் குறையாத தகவல்களைத் தரும் அட்சயப் பாத்திரமாக என உலகத்தையே நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்டது கூகுள்.

அப்படிப்பட்ட கூகுள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதென்பது பலரின் கனவாகத்தான் இருந்து வருகிறது. அதற்குக் காரணம், கூகுள் நிறுவனத்தில் அதன் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளாக நாம் ஊடகங்களில் படிக்கும் தகவல்கள்தான். அப்படி கூகுள் ஊழியர்கள் அனுபவிக்கும் வசதிகளில் முக்கியமானது தினமும் அங்கு வழங்கப்படும் ராஜவிருந்துதான்.

தன் நிறுவன வளர்ச்சிக்காக உழைக்கும் ஊழியர்கள், வயிறார சாப்பிட்டு, வாயார வாழ்த்தி, மனதார வேலை பார்க்க வேண்டும் என்றுதான் இப்படி ஒவ்வொரு வேளையும் கூகுள் ராஜவிருந்து அளித்து வருகிறது என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, ‘அதெல்லாம் இல்லீங்க.. அதிலும் ஒரு வியாபாரத் தந்திரம் இருக்கு’ என வெளிப்படையாகப் பேசி, இணையத்தை அதிர வைத்திருக்கிறார் கூகுள் நிறுவனத்தின் சி இ ஓ சுந்தர் பிச்சை.

sundar pichai

ராஜ விருந்து

இந்தியரான சுந்தர் பிச்சை, நியூயார்க் நகரத்தின் மிட் டவுன் மன்ஹாட்டனைத் தலைமையிடமாகக் கொண்ட, பிரபல அமெரிக்க தனியார் நிதி, மென்பொருள், தரவு மற்றும் ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க்கின், "The David Rubenstein Show: Peer to Peer Conversation" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அதில், கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு இலவச உணவு கூப்பன் வழங்கப்படுவது குறித்து அவர் கூறுகையில்,

“கூகுள் தனது ஊழியர்களுக்கு வழங்கும் இலவச உணவு கூப்பன்களுக்கான முழுச் செலவையும் நிறுவனமே ஏற்கிறது. ஊழியர்கள் ஒன்றாக கஃபேயில் அமர்ந்து உணவு சாப்பிடுவது பல நன்மைகளைத் தருகிறது. அதோடு ஒப்பிடுகையில் இலவச உணவு வழங்குவது நிறுவனத்திற்கு ஒரு பெரிய செலவாக இருக்கவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

“கஃபேயில் அமர்ந்து உணவு சாப்பிடுவதன் மூலம் ஊழியர்களின் படைப்பாற்றல் அதிகரிப்பதோடு, அவர்கள் ஒருவரையொருவர் இணைக்கும் வாய்ப்பையும் உருவாக்குகிறது. அதாவது, கஃபேவில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதன் மூலம் புதிய யோசனைகள் உருவாகின்றன. அந்த யோசனைகள் நிறுவனத்திற்கு நன்மையளிக்கும். அந்த யோசனைகள் இலவச உணவை வழங்குவதற்கான செலவை விட அதிகமாக உள்ளது,” எனக் கூறியுள்ளார்.
google

கூகுளில் சேர தகுதிகள்

2004ம் ஆண்டு கூகுளில் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் பணிக்குச் சேர்ந்த சுந்தர் பிச்சை, படிப்படியாக முன்னேறி தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வருகிறார்.

ஆரம்பத்தில் தானும் கஃபேக்களுக்குச் சென்று மக்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், அதன் மூலம் தனக்கு பல யோசனைகள் வந்ததாகவும் இந்த நிகழ்ச்சியில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் சுந்தர் பிச்சை.

அதோடு, கூகுளில் பணிக்குச் சேர என்னென்ன தகுதிகள் மற்றும் திறமைகள் இருக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளார். அதில் அவர்,

"கூகுள் ஒரு வலுவான ப்ரோகிராமிங் பின்னணிகளை கொண்டவர்களை தேடுகிறது என்றும், கணினி அறிவியலைப் புரிந்துகொண்டு, அதில் வரும் பிரச்சினைகளை சரிசெய்யவும், கூகுளின் திறனை மேலும் மேம்படுத்தவும் தெரிந்தவர்களை ஆரம்ப நிலைக்கு தேடுவதாகவும்," அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘இன்ஜினியரிங்கில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை என்றும், சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் இன்ஜினியர்களை தேடுவதாகவும், ஆற்றல்மிக்க மற்றும் போட்டி சூழ்நிலைகளில் சிறந்து விளங்கும் அணிக்கு முக்கிய நபராக இருப்பவர்களை கூகுள் உயர்வாகக் கருதுகிறது,' என்றும் சுந்தர் பிச்சை அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.