கூகுள் ஊழியர்களின் வேலைக்கு ஆபத்தா? மறைமுகமாக எச்சரித்த சுந்தர் பிச்சை!
தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை கூகுளில் அதிகமான பணியாளர்கள் உள்ளனர், ஆனால் அவர்களில் பலர் திறமையாக மற்றும் கவனம் வேலை செய்வதில்லை என கருத்து தெரிவித்துள்ளது, ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை கூகுளில் அதிகமான பணியாளர்கள் உள்ளனர், ஆனால், அவர்களில் பலர் திறமையாக மற்றும் கவனமாக வேலை செய்வதில்லை என கருத்து தெரிவித்துள்ளது, ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகிலேயே முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் விளங்கி வருகிறது. கொரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள பல டெக் நிறுவனங்கள் ஆட்கள் குறைப்பு நடவடிக்கைகளில் இயக்கியதைப் போலவே கூகுள் நிறுவனம் முடிவெடுத்தது.
உலகம் முழுவது உள்ள அலுவலகங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தனது நடவடிக்கையின் வேகத்தை குறைத்துக் கொண்ட கூகுள் நிறுவனம் குறைந்தபட்சம் இந்த ஆண்டு முழுவதும் புதிதாக யாரையும் பணிக்கு எடுக்க வேண்டாமென முடிவெடுத்துள்ளது.
ஊழியர்களை எச்சரித்த சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை, நிறுவனத்தின் ஊழியர்கள் குறித்தும், அவர்களது திறமை குறித்து தெரிவித்துள்ள கருத்து கூகுள் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கையில் இறங்க திட்டமிட்டுள்ளதா? என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட கூகுள் ஊழியர்களின் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற சுந்தர் பிச்சை,
திறமையாக பணியாற்றும்படியும், தயாரிப்புகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு உதவிடுவதில் அதிக கவனம் செலுத்தும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார். உற்பத்தித் திறன் குறைந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள பிச்சை, நிறுவனத்தில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது போல் தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தில் அதிக ஊழியர்கள் உள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், பலர் திறமையாக வேலை செய்யவில்லை என்றும், கவனம் செலுத்தவில்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
CNBC இன் ஒரு அறிக்கை படி,
“தனது ஊழியர்களின் எண்ணிக்கையை மறுஆய்வு செய்யும் பணியை செய்து, முன்னுரிமை வாய்ந்த பணியாளர்கள் அடங்கிய ஒரு புதிய குழுவை ஒழுங்குபடுத்துவதற்கான பணியை மேற்கொள்ள சுந்தர் பிச்சை அறிவுறுத்தியுள்ளார். கவனச்சிதறல்களைக் குறைப்பது மற்றும் தயாரிப்புக்களின் சிறப்பு மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றை எவ்வாறு உயர்த்துவது என்பதைப் பற்றி சிந்திக்கவும் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளார்,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுளின் திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வருவாய் எதிர்பார்த்த அளவை விட மிகவும் குறைந்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. கடந்த ஆண்டை விட இந்த காலாண்டில் கூகுள் நிறுவனமானத்தின் வளர்ச்சி 13 சதவீதம் குறைந்துள்ளது.
எனவே, பணியாளர்களைக் குறைப்பது தொடர்பாக கூகுள் நிறுவனம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே தான் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முன்னுரிமை வாய்ந்த பணியாளர்கள் அடங்கிய ஒரு புதிய குழுவை அமைத்து, மறுசீராய்வு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன், செலவை குறைப்பது போன்ற காரணங்களை கணக்கில் கொண்டு கூகுள் நிறுவனம் விரைவில் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தகவல் உதவி - இந்தியா டூடே | தமிழில் - கனிமொழி