'நீங்கள் இந்தியரா? அமெரிக்காரா? - சுந்தர் பிச்சையின் சுவாரஸ்ய பதில்!
ஜெஃப் பெசோஸ் குறித்து மனம் திறந்த சுந்தர் பிச்சை!
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிபிசிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். குறிப்பாக, ஜெஃப் பெசோஸ் மீதான பொறாமை, இந்தியா உடனான உறவு, இணைய தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவரின் பேட்டியில், 'ஜெஃப் பெசோஸின் விண்வெளி பயணத்தில் நான் கொஞ்சம் பொறாமைப்படுகிறேன்,' என்று மனம் திறந்துள்ளார் பிச்சை.
”நானும் விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்க விரும்புகிறேன்" என்றவரிடம், கடைசியாக எப்போது அழுதீர்கள் என நிருபர் கேட்க அதற்கு,
“கோவிட் காலத்தில் உலகம் முழுவதும் நிகழ்ந்த இறப்புகளை பார்க்கும்போது கவலையாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கும் போது இந்த கவலை அதிகரித்தது," என்று வேதனை தெரிவித்தார்.
அப்போது நீங்கள் இந்தியரா அல்லது அமெரிக்கரா என்ற கேள்விக்கு பதிலளித்த சுந்தர் பிச்சை,
”நான் ஒரு அமெரிக்கக் குடிமகன், ஆனால் இந்தியா எனக்குள் ஆழமாக உள்ளது. எனவே நான் யார் என்பதில் இந்தியாவுக்கு பெரிய பகுதி இருக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசியவர், ”நாங்கள் (கூகிள்) உலகின் மிகப்பெரிய வரி செலுத்துவோரில் ஒருவர், கடந்த தசாப்தத்தில் சராசரியாக நீங்கள் பார்த்தால், நாங்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை செலுத்தியுள்ளோம். அமெரிக்காவின் வரிகளில் எங்களுடையது பெரும்பகுதியை வகிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் என ஒரு நூற்றாண்டின் அடுத்த காலாண்டில் உலகில் மேலும் புரட்சியை ஏற்படுத்தும். செயற்கை நுண்ணறிவு மனிதகுலம் எப்போதும் உருவாக்கி செயல்படும் மிக ஆழமான தொழில்நுட்பமாக கருதுகிறேன். நீங்கள் நெருப்பு, மின்சாரம் அல்லது இணையத்தைப் பிரமிப்புடன் நினைப்பதைப் போல், இதை இன்னும் ஆழமானதாக நான் நினைக்கிறேன்.
தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக உணர்கிறேன். இலவச மற்றும் திறந்த இணையம் தாக்குதலுக்கு உள்ளாகிறது, என்றவர் சீனாவை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும்,
“எங்கள் முக்கியத் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் எதுவும் சீனாவில் கிடைக்கவில்லை," என்றும் பேசினார்.
தகவல் உதவி: பிபிசி | தமிழில்: மலையரசு