அரசின் மின்சார வாகனத்துக்கான ரூ.500 கோடி திட்டத்தின் கீழ் மானியங்கள்: யார்? யார்? என்ன பயன்பெறலாம்?
மத்திய அரசின் மின்சார வாகனத்துக்கான ரூ. 500 கோடி திட்டத்தின் மூலம் சுமார் 3.33 லட்சம் வாகனங்களுக்கு இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.
மத்திய அரசின் மின்சார வாகனத்துக்கான ரூ.500 கோடி திட்டத்தின் மூலம் சுமார் 3.33 லட்சம் வாகனங்களுக்கு இரு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.
ஏப்ரல் 1ம் தேதி தொடங்கிய இந்தத் திட்டம், ஜூலை மாதம் வரை நடைமுறையில் இருக்கும். இதற்கிடையில், FAME அல்லது இந்தியாவில் மின்சார வாகனங்களை வேகமாக அறிமுகம் செய்வது மற்றும் உற்பத்தி செய்தல் என்பதன் இரண்டாம் கட்டம் (FAME-II) மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்தது.
மார்ச் 31ம் தேதி முடிவடைந்து விட்டதே என்று கவலை வேண்டாம். ஃபேம் இரண்டு திட்டத்தின் கீழ் மார்ச் 31ம் தேதி முடிவடைந்த தேதி வரை விற்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கும் மானியம் உண்டு. நாட்டில் மின்சார வாகனங்களை (EVs) தொடர்ந்து அறிமுகம் செய்து ஏற்றுக் கொள்ளச் செய்தலுக்காக மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தால் ரூ.500 கோடி மதிப்பிலான எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்பு 2024 (EMPS 2024) திட்டம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் இரு சக்கர வாகனம் ஒன்றிற்கு ரூ.10,000 மானியம் வழங்கப்படுகிறது. அதாவது, 3.33 லட்சம் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. அதே போல், சிறிய 3 சக்கர வாகனங்களான இ-ரிக்ஷாக்கள், இ-கார்ட்கள் போன்றவற்றிற்கு ரூ.25,000 மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி, 41,000 வாகனதாரிகள் பயன்பெறுவார்கள்.
பெரிய 3 சக்கர வாகனங்களுக்கு மானியம் ரூ.50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஏப்ரல் 1, 2024 முதல் ஜூலை 31, 2024 வரை நடைமுறையில் இருக்கும். சுற்றுச்சூழலை பாதிக்காத இருசக்கர மூன்று சக்கர மின்சார வாகனங்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்பதற்கான ஊக்குவிப்புத்திட்டமே இந்த மானியத்திட்டம்.
மொத்தமாக இந்தத் திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 72 ஆயிரத்து 215 மின்சார வாகனங்கள் பயன்பெறும். மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் வகையில், மேம்பட்ட பேட்டரிகள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகையின் பலன்கள் நீட்டிக்கப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
அரசின் ஆத்மநிர்பார் பாரத் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, EMPS 2024, நாட்டில் திறமையான, போட்டித்தன்மை மற்றும் மீள்திறன் கொண்ட மின்சார வாகன உற்பத்தித் தொழிலை ஊக்குவிக்கிறது.
இந்த நோக்கத்திற்காக, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், மின் வாகன விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும் உற்பத்தித் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது மதிப்புச் சங்கிலியை உருவாக்குவதோடு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
(பிடிஐ தகவல்களுடன்)