'பேக் செய்த பன்னீர், தயிர், கோதுமை மாவு மீது 5% GST வரி’ - சிறு வணிகர்களுக்கு பெரும் இழப்பை உண்டாக்கும்!
ஜிஎஸ்டி கவுன்சில் முடிவை எதிர்த்து வர்த்தகர்கள் குழு நிதி அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் என்று வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைப்பான அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) பிரி பேக்கேஜ் (Packaged) மற்றும் லேபில் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் (Labelled Food products) மீது 5 சதவீத GST, விதிக்கப்பட்டிருப்பது உணவுதானிய வணிகர்கள் வர்த்தகத்திற்கு கடும் இழப்பை உண்டாக்கி, பிராண்ட் செய்யப்படாத அத்தியாவசியப் பொருட்கள் விலையை அதிகரிக்கச்செய்யும் என்று தெரிவித்துள்ளது.
இந்த முடிவு தொடர்பாக மத்திய அமைச்சர் மற்றும் ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் முறையிட இருப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இறைச்சி, மீன், பன்னீர், தேன் போன்ற பிரி பேக் செய்த, லேபில் இடப்பட்ட உணவுப்பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி பொருந்தும்.
வரி விதிப்பை சீராக்கும் வகையில், விலக்குகளை ரத்து செய்வது தொடர்பான மாநிலங்களின் அமைச்சர்கள் குழு பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த வாரம் ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் பொதுச்செயலாலர் பிரவீன் கந்தல்வேல், ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதியமைச்சரை வர்த்தகர்கள் குழு சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் என்று தெரிவித்தார்.
"பிரி பேக்கேஜ் (Pre-Package) மற்றும் லேபில் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி,. விதிக்கப்பட்டிருப்பது தொடர்பான கவுன்சிலின் பரிந்துரை உணவுதானிய வணிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் இது, நாட்டில் உணவுதானிய வர்த்தகர்களுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தும், என்றும் அவர் கூறியுள்ளார்.
"சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் பெரிய பிராண்ட்கள் அதிகாரம் பெற இந்த முடிவு வழிவகுக்கும். சீரியல்கள் போன்ற சிறப்பு உணவுகள் ஜிஎஸ்டி விலக்கு பெற்றுள்ளன.
"கவுன்சிலின் இந்த முடிவால், பிரி பேக் செய்யப்பட்ட தயிர், மோர் உள்ளிட்ட பிரிபேக் செய்த உணவுகளுக்கு ஜிஎஸ்டி பொருந்தும். இது நாடு முழுவதும் உள்ள 6500 உணவு தானிய சந்தைகளில் உள்ள வர்த்தகர்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும்,” என்று அவர் கூறினார்.
கூட்டமைப்பின் தேசிய தலைவர் பிசி.பார்தியா செய்தியாளர்களிடம் பேசும் போது, வர்த்தகர்களுக்கான செலவை அதிகரிப்பதோடு, அத்தியாவசியப் பொருட்கள் விலையையும் இந்த முடிவு அதிகமாக்கும் என்று கூறினார்.
"இந்த முடிவின்படி, மளிகைக் கடைக்காரர், அடையாளம் கொண்ட பிரிபேக் செய்த உணவுப்பொருளை விற்பனை செய்தால் அதற்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். பன்னீர், மோர், தயிர், கோதுமை மாவு, அப்பளம், வெல்லம் போன்ற பொருட்கள் விலை உயரும்,” என்று அவர் கூறினார்.
செய்தி- பிடிஐ செய்தி நிறுவனம்