ஆரோக்கியம் + அழகு = 'நேச்சுரல்ஸ் ஆயுர்' - இந்த ஃபார்முலாவில் நீங்கள் சேர்ந்தால் சக்சஸ் தொழில் முனைவர்!
வளர்ந்து வரும் அழகுக்கலைத் துறையில் புதிய முயற்சியாக ஆயுர்வேதத்தை புகுத்தி வெற்றி கண்டுள்ளது ‘நேச்சுரல்ஸ் ஆயுர்’. இந்த வெற்றிப்பயணத்தில் நீங்களும் இணைந்து லாபமடைய என்ன செய்ய வேண்டும்?
ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள், பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்குமே பிடித்தமான விஷயம். வெளித்தோற்றத்திற்கு மட்டும் இந்த அழகு கூடாது ஆரோக்கியமான அழகே முக்கியம் என்பதை ஆதாரமாக வைத்து தொடங்கப்பட்டது இந்தியாவின் நம்பர் 1 சலூன் நேச்சுரல்ஸ். முடி திருத்தகம் மற்றும் சலூனாக ஒரே ஒரு ஸ்பாவோடு தொடங்கப்பட்ட நேச்சுரல்ஸ் இன்று நாடு முழுவதும் 600 கிளைகளாக விரிவடையும் அளவிற்கு மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெண்களின் அழகை ஆரோக்கியமும் ஆயுர்வேதமும் கலந்ததாக வழங்கலாம் என்ற புதிய முயற்சியை நேச்சுரல்ஸ் 3 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து பார்த்தது. அந்த புதிய பிராண்ட் தான் 'நேச்சுரல்ஸ் ஆயுர்’ ‘Naturals Ayur' ஆயுர்வேத முறையில் beauty மற்றும் wellness சிகிச்சை தருவதே இந்த ஸ்பாவின் பணி.
ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி ஆண், பெண் என இரு பாலருக்கும் ஆரோக்கியமான அழகைப் பேணுவதற்கு இந்த ஸ்பா வழிகாட்டுகிறது. சோதனை முயற்சியாக கோயம்புத்தூரில் 2016ல் தொடங்கப்பட்ட நேச்சுரல்ஸ் ஆயுர் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைந்தது எப்படி என்று யுவர் ஸ்டோரி தமிழ் இடம் பகிர்ந்து கொண்டார் அதன் ஃபிரான்சைஸ் பங்குதாரர் தினேஷ் பாலகிருஷ்ணன்.
ஆயுர்வேத தெரபிகள் 5000 ஆண்டுகள் பழமையானவை அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த முறை பின்பற்றப்பட்டு அதற்கான பலன்களையும் கண்கூடாக உணர முடிகிறது.
நேச்சுரல்ஸ் ஆயுர்-ல் ஆயுர்வேத முறையில் ஃபேஷியல், பெடிக்யூர், பாடி பாலிஷ் உள்ளிட்ட சலூன் சேவைகளைப் பெற முடியும். இது தவிர பாடி மசாஜ், உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கான சிகிச்சை, வயதான தோற்றத்தைத் தரும் தோல் சுருக்கங்களை தவிர்ப்பதற்கான சிகிச்சை, உடல் எடை குறைப்பு உள்ளிட்ட அகம் சார்ந்த சாராம்சங்களுக்கும் சிகிச்சைகள் தரப்படுகிறது.
மேலும் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும் இயந்திரம் போன்ற வாழ்க்கையில் மனிதர்களுக்கு ஏற்படும் கழுத்து, தோள்பட்டை, முட்டி மற்றம் உடல் வலிகளில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகளோடு மனஅழுத்தத்தை போக்கும் முறை, பிரசிவித்த பெண்களுக்கான போஸ்ட்நேடல் சிகிச்சை என இன்றைய செயற்கை உலகில் ஆண்களும் பெண்களும் இயற்கை முறையில் தங்களது உடலை பேணிப் பாதுகாப்பதற்கான வழிகளை வழங்குகிறது நேச்சுரல்ஸ் ஆயுர்.
கோவை பெர்க்ஸ் ஆர்ச் சாலையில் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது ’நேச்சுரல்ஸ் ஆயுர்’. ஆர்ய வைத்யா பார்மசியுடன் கைகோர்த்து நேச்சுரல்ஸ் எடுத்து வைத்த முதல் அடி வெற்றியைக் கண்டுள்ளது. தொடக்கத்தில் நேச்சுரல்ஸ் ஆயுர் வழங்கும் சேவைகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு புரிதல் இல்லை. நேச்சுரல்ஸ் சலூனிற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இந்த புதிய பிராண்ட் பற்றி விளக்கம் அளித்தோம்.
ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் எங்களது தெரபிகள் வாடிக்கையாளர்களின் உடல்நலனில் சில மாற்றங்களை ஏற்படுத்த கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் கவனம் ஆயுர் பக்கம் திரும்பியது என்கிறார் தினேஷ்.
ஒரு வருடத்திலேயே நேச்சுரல்ஸ் ஆயுர் பிரபலமடைந்து விட்டது 600 வாடிக்கையாளர்களுடன் தொடங்கி தற்போது மாதத்திற்கு 1200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது நேச்சுரல்ஸ் ஆயுர்.
24 மணி நேரமும் ஆயுர்வேத மருத்துவர்கள் சலூன்களில் இருப்பார்கள் என்றும் அவர்களின் ஆலோசனைபடியே தெரபிகளும், மசாஜ்களும் வழங்கப்படும் என்கிறார் தினேஷ்.
வலிநிவாரணிகள், மருந்து, மாத்திரைகள் என உட்கொள்ளும் மருத்துவ முறையில் இல்லாமல் மசாஜ், டயட், வாழ்க்கை முறை மாற்றத்திற்கான ஆலோசனைகள் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருவது ஆயுர். பார்த்த உடனே பிடிக்காது பார்க்க பார்க்கத் தான் பிடிக்கும் என்பது போல நேச்சுரல்ஸ் ஆயுரில் எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகள் தொடர்ந்து செய்து வர நாள்பட்ட பலனைத் தரும் என்கிறார் அவர்.
ரூ. 80 லட்சம் முதலீட்டில் நேச்சுரல்ஸ் ஆயுர்-ன் முதல் பிரான்சைஸ் பார்ட்னராக இணைந்த தினேஷ், முதல் தலைமுறை தொழில்முனைவர். இன்சூரன்ஸ் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் தொழில்முனைவுப் பாதையை தேர்ந்தெடுக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்தரக்கூடிய ஆயுர்வேத முறையிலான அழகு மற்றும் ஆரோக்கிய சிகிச்சை நிச்சயம் வெற்றியைத் தரும் என்று நேச்சுரல்ஸ் ஆயுருடன் இணைந்திருக்கிறார்.
அவரது நம்பிக்கை கைவிடவில்லை இன்று மாதத்திற்கு ரூ. 10 முதல் ரூ- 12 லட்சம் வரை வருமானம் பெறுகிறார்.
நேச்சுரல்ஸ் ஆயுரின் முதல் மையத்தையே வெற்றியாக்கியுள்ள தினேஷிடமே இதர பிரான்சைஸிக்ளுக்கான பயிற்சிகளை வழங்கும் பொறுப்பை வழங்கியுள்ளது நேச்சுரல்ஸ். இதன்படி அடுத்த 3 ஆண்டிற்குள் இந்தியாவில் 100 மையங்களையும் வெளிநாடுகளில் 25 மையங்களையும் உருவாக்கி விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
நேச்சுரல்ஸ்ன் நோக்கமே இல்லத்தரசிகளை தொழில் முனைவர்களாக்க வேண்டும், அவர்கள் தங்களது சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதே. குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு 6 மணி நேரம் மட்டுமே தங்களது வர்த்தகத்திற்கு செலவிட முடியும் என்றால் பெண்கள் நிச்சயம் நேச்சுரல்ஸில் பங்குதாரராக இணைந்து சுய பொருளாதார வளர்ச்சி கண்டு நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்க முடியும்.
மேலும் ஏற்கனவே அழகுக்கலைத் துறையில் இருப்பவர்களுக்கும் நேச்சரல்ஸ் ஆயுரில் பிரான்சைஸியாக இணைந்து வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும். இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் அழகுக்கலைத் துறை 25 சதவிகிதம் நிச்சயமான வளர்ச்சி இருப்பதாக கணிக்கப்படுகிறது. ஆயுர்வேத முறையிலான அழகுக்கலை சிகிச்சைக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் இந்தத் தொழிலில் நஷ்டமடைய வாய்ப்பே இல்லை, என்கிறார் தினேஷ்.
ஆயுர் ஸ்பா அமைத்துத் தருவது முதல் பிரான்சைஸ்களுக்கான பயிற்சிகளையும் நேச்சுரல்ஸே வழங்குகிறது. மேலும் தெரபி சிகிச்சை அளிப்பதற்கான பணியாளர்களுக்கு இவர்கள் பயிற்சி அளித்து அவர்களை பணியில் அமர்த்திவிடும். தொடக்கத்தில் அளிக்கும் பயிற்சி மட்டுமின்றி தொடர்ந்து சிகிச்சையளிக்கும் முறைகளில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதற்கான தொடர் பயிற்சியும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்கிறார் தினேஷ்.
நிர்வாகத் திறமையும் அழகுக்கலைத் துறையில் அனுபவமும் இருந்தால் நேச்சுரல்ஸ் ஆயுர் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான தொழில் என்று உத்தரவாதம் அளிக்கிறார் இவர். நேச்சுரல்ஸ் உடன் பிரான்சைஸ் ஆக விரும்புபவர்கள் இந்த இணையதள பக்கத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
https://www.naturals.in/salon-franchise-business-opportunities.php