பெண் தொழில் முனைவோர் கனவு நினைவாக உதவும் நேச்சுரல்ஸ் தரும் ஆதரவு!
பெரும்பாலான பெண்கள், குடும்பத்தை கவனித்து கொள்வதற்காக தங்கள் பணி வாழ்க்கையை பின்னுக்குத் தள்ளுகின்றனர் என்பது தெரிந்த விஷயம் தான். இல்லத்தரசிகளாக இருக்கும் இந்திய பெண்கள் 2 பேரில் ஒருவர், இளம்வயதில் நிதிச் சுதந்திரத்துடன் இருக்க விரும்பியதாக, பிரிட்டானியா மேரி கோல்ட் இந்தியன் வுமன் தொழில்முனைவு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால் 69 சதவீத பெண்களுக்கு பெரிய தடையாக இருப்பது போதுமான நிதி இல்லாமல் இருப்பது, 39 சதவீத பெண்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாதது மற்றும் 36 சதவீத பெண்களுக்கு தொழில்முனைவை மேற்கொள்வதற்கான துணிவு இல்லாதது ஆகியவைக் காரணங்களாக அமைந்துள்ளன. பணியில் இருந்தவர்கள் கூட, நிதி சுதந்திரம் பெற்றிருக்கவில்லை. ஏனெனில், அவர்கள் தங்கள் செலவுகள் குறித்து விளக்கம் அளிக்கும் நிலையில் உள்ளனர்.
பெரும்பாலான இல்லத்தரசிகள் வர்த்தகப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் இல்லை என்பதால், வர்த்தகம் தொடர்பான அம்சங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. வர்த்தகத்தில் ஈடுபட விரும்பிய இல்லத்தரசிகளில் 28 சதவீதம் பேர் அழகு நிலையங்களை நடத்த விரும்பியதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த பின்னணியில், நேச்சுரல்ஸ், கடந்த ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 700 சலூன்களை அமைத்து, 450 நிதிச் சுதந்திரம் பெற்ற பெண்களுக்கு தொழில்முனைவு வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. நிறுவனர் சி.கே.குமாரவேலுவின் மனைவி வீணா குமாரவேல், பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லத்துவங்கியவுடன் அவரிடம் போதுமான நேரம் இருந்த போது என்ன செய்வது என யோசிக்கத்துவங்கியதன் பயனாக நேச்சுரல்ஸ் சலூனுக்கான எண்ணம் உண்டானது.
”அலுப்படைவது தான் ஊக்கத்திற்கான மிகப்பெரிய உந்துசக்தி. நீங்கள் ஏதேனும் ஒன்றால் அலுப்படைந்திருந்தால், அதை கவனமாக பார்த்தால் அதில் வாய்ப்பு மறைந்திருக்கும்,” என்கிறார் குமாரவேல்.
யுவர் ஸ்டோரியின் ’வுமன் ஆன் ஏ மிஷன்’ மாநாட்டில் பேசும் போது, குமாரவேல், கரூரைச்சேர்ந்த வர்த்தக பங்குதாரர் ஒருவரின் கதையை பகிர்ந்து கொண்டார். கரூர் சலூனுக்கு தயாராகவில்லை என குமாரவேல் நினைத்த நிலையில், அவர் கரூரில் சலூன் ஒன்றை துவக்குவதில் உறுதியாக இருந்தார்.
"அவர் வசதியான குடும்பத்தைச்சேர்ந்தவர். வாழ்க்கையில் தேவையான எல்லாம் இருக்கும் அவரைப்போன்ற ஒருவர் ஏன் சலூன் துவங்க நினைக்க வேண்டும் என யோசித்தேன்,” என்கிறார் குமாரவேல்.
ஓராண்டு கழித்து அந்த பெண்மணி போன் செய்து, மாதம் ரூ.50,000 சம்பாதிக்க முடிந்ததற்கு நன்றி தெரிவித்தார். வசதியானவராக இருந்தாலும் தான் செலவிடும் தொகைக்கு எப்போதும் கணக்கு அளிக்க வேண்டியிருந்தது என்றும், தற்போது சொந்தமான சலூன் இருப்பதால், இப்போது சுயமாக செலவு செய்து நிதி சுதந்திரத்துடன் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
சொந்த பிரான்சைஸ்
நேச்சுரல்ஸ் சலூனின் வர்த்தக மாதிரி, நூற்றுக்கணக்கான பெண்கள் புதிய தொழில் வாழ்க்கை பெற உதவி வருகிறது. அவர்கள் நிதிச் சுதந்திரம் பெறும் கனவை நிறைவேற்ற உதவுகிறது. நிறுவனம் 700க்கு மேற்பட்ட பிரான்சைஸ் மையங்கள் கோண்டுள்ளது. இவற்றில் 450 மையங்கள் பெண்களால் நடத்தப்படுகின்றன. குறிப்பிட்ட வரையரைக்குள் செயல்பட ஏற்றவர்கள் என்பதால் பெண் பங்குதாரர்களை விரும்புவதாக குமாரவேல் கூறுகிறார்.
“நேச்சுரல்ஸ் மட்டும் அல்ல, எந்த பிரான்சை வணிகம் என்றாலும், ஒருங்கிணைந்த செயல்பாடு, நுட்பமான தகவல்களில் கவனம் செலுத்துவது போன்ற அம்சங்களால் பெண்கள் மிகவும் ஏற்றவர்களாக இருக்கின்றன,” என்கிறார் அவர்.
இப்போது நிறுவனம் மேலும் பெண் பங்குதாரர்களை எதிர்பார்க்கிறது.
“2020 ம் ஆண்டு வாக்கில், 1,000 பெண்களை தொழில் முனைவோராக்கி, 3,000 சலூன்களை திறந்து 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்க விரும்புவதாக,” வீணா குமாரவேல் தெரிவிக்கிறார்.
யார் விண்ணப்பிக்கலாம்?
நேச்சுரல்ஸ்; மும்பை, புனே, கொல்கத்தா, தில்லி, அகமாதாபாத், பரோடா, ராஜ்கோட், சூரத், ஜெய்பூர், நொய்டா, குர்காவ்ன் மற்றும் லக்னோ உள்ளிட்ட நகரங்களில் பிரான்சைஸ் அமைக்க பெண் பங்குதாரர்களை எதிர்பார்க்கிறது. 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், பிள்ளை பேறுக்கு பிறகு பணி வாய்ப்பை நோக்குபவர்கள், இல்லத்தலைவிகள், தொழில்முறை நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆரம்ப கட்டத்தில் ரூ. 40 முதல் ரூ. 50 லட்சம் முதலிடு தேவைப்படலாம். 20 முதல் 30 மாதங்களில் முதலீட்டின் மீது பலன் கிடைக்கும்.
முழுமையான நேர்மை, உரிமையாளர்கள்/ மேலாளர்களாக இருக்கும் விருப்பம், ஒரு குழுவை நடத்தும் திறன், வாடிக்கையாளர் நிர்வாக திறன், பணத்தை முதலீடு செய்யும் திறன் மற்றும் இறுதியாக (ஆச்சர்யம் அளிக்கும் வகையில்) அழகு நிலைய துறை பற்றி எந்த அனுபவமும் இல்லாத பெண்களை எதிர்நோக்குவதாக குமாரவேல் கூறுகிறார்.
பங்குதாரர்கள் அனுபவம்
எம்பிஏ பட்டதாரியான உமா, சத்யம் கம்ப்யூடர்சில் திருமணமாகும் வரை பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு எப்போதுமே அழகுக் கலை துறையில் ஆர்வம் உண்டு. நேச்சுரல்ஸ் தான் முதலில் நினைவுக்கு வரும் பிராண்டாக இருந்தது. ஒரு சில மாதங்கள் நேச்சுரல்ஸ் சலூனில் பணியாற்றி அனுபவம் பெற்றவர், குறுகிய காலத்தில் 3 பிரான்சைஸ்களை துவக்கினார்.
"நேச்சுரல் எனக்கு ஒரு அடையாளத்தை அளித்து, என்னை சுதந்திரமான பெண்ணாக ஆக்கியிருக்கிறது என்கிறார் அவர். இன்னொரு பிரான்சைஸ் உரிமையாளரான, பிரியா ஹரிகுமார், இதுவே தான் மேற்கொண்ட சிறந்த முடிவு என்கிறார். "இந்த பிராண்ட் பெண்கள் வளர வழி செய்கிறது. வேலைவாய்ப்புகளை வழங்க முடிவதால் சாதித்த உணர்வும் இருக்கிறது” என்கிறார் அவர்.
எட்டு ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணியாற்றி, பின்னர் நேச்சுரஸ்ல் பிரான்சைஸ் நடத்தி வரும் மகாலட்சுமி, இது தனக்கு பொறுப்புணர்வை அளித்திருப்பதாக கூறுகிறார்.
இந்த பெண்கள் தொழில்முனைவு மற்றும் வாடிக்கையாளர்கள் நிர்வாகத்தை கற்று வருகின்றனர். 2011 ல் ஒரு பிரான்சைசுடன் துவங்கிய ராகினி, இன்று தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 8 கிளைகளை கொண்டிருக்கிறார்.
“எனக்கும், மற்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளித்து அதிகாரமளித்திருக்கும் நேச்சுரல்சுடன் இணைந்திருப்பதில் பெருமை கொள்கிறேன் என்கிறார் அவர். நேச்சுரல்சில் மேக்கப் கலைஞராக பணியாற்றிய ப்ரீத்தி இன்று பிரான்சைஸ் நடத்துகிறார். இந்த பிராண்ட் போல என் வாழ்க்கையை வேறு எந்த பிராண்டும் மாற்றவில்லை என உறுதியாக சொல்வேன் என்கிறார் அவர்.
நான் நேச்சுரல்சை நம்பியதைவிட, நேச்சுரல்ஸ் என் திறன்கள் மீது அதிக நம்பிக்கை வைத்தது, என்கிறார் செளமியா. மற்றொரு பங்குதாரரான, லோபா, ஒடிஷாவில் 7 சலூன் வைத்திருப்பவர், கடந்த 7 ஆண்டுகளில் நான் நேச்சுரல்ஸ் குடும்பத்துடன் வளர்ந்திருக்கிறேன் என்கிறார்.
பிரான்சைஸ் நலன்கள்
நன்கறியப்பட்ட பிராண்ட் பெயருடன் இணைவது மற்றும் வர்த்தக அனுபவம் பெறுவது தவிர, பெண் தொழில்முனைவோர்கள், அழகுக் கலைத்துறையின் முன்னணி பங்குதாரர்கள் அனைவரும் இணைந்திருப்பதால் நல்ல பலன் பெறுவார்கள். மேலும் ஸ்டேட் வங்கியுடன் ஈட்டுறுதி இல்லாத கடன் ரூ.30 லட்சம் பெறவும் கூட்டு ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இந்த வகையான பிரான்சைஸ் சிறிய தொழில் முனைவோருக்கு ஏற்றதாக இருக்கிறது.
நேச்சுரல்ஸ் ஒரே நேரத்தில் 350 பேருக்கு பயிற்சி அளிக்கும் திறன் பெற்றுள்ளது. எனவே, பிரான்சைஸ் பங்குதாரர்கள் நிலையம் துவங்கியதும் அவர்களுக்கு திறன் மிக்க ஊழியர்கள் கிடைப்பார்கள்.
"பணம் மற்றும் நேரத்தை முதலீடு செய்தால் அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று கூறும் குமாரவேல், பெண்கள் தங்கள் கனவுகளை நினைவாக்கிக் கொள்ள அனுமதித்தால், அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழந்து, அதன் மூலம் அழகான இந்தியாவை உருவாக்கலாம் என்கிறார். சொந்தக்காலில் நிற்பது தான் நீங்கள் தெரிவிக்ககூடிய மிகப்பெரிய பேஷன் செய்தியாகும்,” என்கிறார்.
நேச்சுரல்ஸ் பிரான்சைசுக்கு விண்ணப்பிக்க...
ஆங்கில கட்டுரையாளர்: ஜெர்லின் ஜஸ்டஸ் | தமிழில் : சைபர்சிம்மன்