Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஆரோக்கிய ஸ்னேக்ஸ் பிரிவில் நேரடி விற்பனையில் இறங்கும் ஐஐடி பட்டதாரிகள் தொடங்கிய Farmley

தில்லியைச் சேர்ந்த டி2சி ஸ்டார்ட் அப் ஃபார்ம்லே, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் கலப்படம் இல்லாத உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை ஆரோக்கியம் சார்ந்த ஸ்னேக்சாக வழங்குகிறது.

ஆரோக்கிய ஸ்னேக்ஸ் பிரிவில் நேரடி விற்பனையில் இறங்கும் ஐஐடி பட்டதாரிகள் தொடங்கிய Farmley

Saturday April 20, 2024 , 4 min Read

பெருந்தொற்றுக்கு பிறகு, மேலும் பல நுகர்வோர் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை நாடுவதால், சூப்பர் மார்க்கெட்களில் பலவகையான ஊட்டச்சத்து மிக்க ஸ்நாக்ஸ் ரகங்களை காண முடிகிறது. ஆனால், ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்கள் விலை அதிகம் கொண்டவையாக இருப்பதால், நுகர்வோர்கள் அதிக ஆற்றல், சோடியம், சர்க்கரை, கொழுப்பு கொண்ட உடனடி உணவு ரக ஸ்நாக்ஸ்களை நாடுகின்றனர்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஐஐடி பட்டதாரிகள், ஆகாஷ் சர்மா, அபிஷேக் அகர்வால், 2017ல் `ஃபார்ம்லே` (Farmley- முன்னதாக டெக்னிபை பிஸ் ) நிறுவனத்தை உண்டாக்கினர். தில்லியைச் சேர்ந்த இந்த நேரடி நுகர்வோர் பிராண்ட், கலப்படம் இல்லாத உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களில் கவனம் செலுத்துகிறது.  

farmley products

இரண்டு வேளை சாப்பாடு எனும் பழக்கத்திற்கு மாறாக இப்போது நுகர்வோர் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 வேளை சாப்பிடுகின்றனர், என்கிறார் ஃபார்ம்லே இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அகாஷ் சர்மா.

“சிங்கப்பூர் போன்ற பிராந்தியங்களில் இப்படி ஒருவர் தினமும் 8 வேளை சாப்பிடுகிறார். இவற்றில் பெரும்பாலான வேளை உணவு என்பது ஸ்கேன்ஸ் வகையாக இருக்கிறது. இந்த போக்கு, முழுமையான, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் தேர்வுகளை நாட வைக்கிறது” என அவர் யுவர்ஸ்டோரியிடம் பேசும் போது கூறினார்.

இந்த ஸ்டார்ட் அப் தனக்கான பொருட்களை பண்ணையில் இருந்து நேரடியாக தருவிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில், பல்வேறு பண்ணைகளுடன் ஆழமான தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

திருப்பு முனை

ஃபார்ம்லே துவக்கத்தில் மொத்த வர்த்தகத்தில் கவனம் செலுத்தியது. தனிப்பட்ட ரீட்டைலர்களுக்கு வழங்கியது. அவர்கள் தங்கள் பெயரில் விற்பனை செய்தனர்.

மூன்றாண்டுகளுக்குப் பின், நுகர்வோரை நேரடியாக அணுகும் டி2சி மாதிரைய நாடியது.

“இந்த பிரிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, மூலப்பொருட்களில் புதுமைகள் புகுத்தி, புதுமையான பொருட்களை தர வேண்டும் என உணர்ந்தோம். நுகர்வோர் மீது மேலும் தாக்கம் செலுத்த சொந்த பிராண்டை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம், என்கிறார் சர்மா.

தற்போது நிறுவனம் உலர் பழங்கள், நட்ஸ்களில் கவனம் செலுத்தி வருகிறது. 80க்கும் மேற்பட்ட பொருட்களை வழங்கி வருகிறது. பொருட்களை தயாரிக்க பாம் ஆயிலை பயன்படுத்துவதில்லை. பொருட்களின் விலை ரூ.30 முதல் ரூ.999 வரை அமைகிறது.

அமேசான், ஃபிளிப்கார்ட், பிளின்கிட், ஜெப்டோ, இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் உள்ளிட்ட இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் விற்பனை செய்கிறது. பிரத்யேக விற்பனை நிலையங்கள் இல்லாவிட்டாலும், கடைக்குள் கடை முறையில் விற்பனை செய்து வருகிறது.

“முதலில் அதிக விற்பனை, தரத்தில் கவனம் செலுத்தினோம். பண்ணையில் இருந்து நேரடி கொள்முதல் சங்கிலியை அமைத்து உற்பத்தி மற்றும் பிராசஸிங் வசதியை அமைத்தோம்.”

அதன் பிறகு, தரத்தை புரிந்து கொள்வது, பிராசிஸிங் செயல்முறையை கவனிப்பது, கலப்படம் தவிர்ப்பு மற்றும் மொத்த விநியோக சங்கிலியில் மதிப்பை வழங்குவதில் கவனம் செலுத்தத் துவங்கினோம், என்கிறார்.

விவசாயிகள்

ஆகாஷ் சர்மா ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து வருகிறார். அவரது குடும்பம் விவசாயக் குடும்பம்.  

“எங்களிடம் இருந்த பெரிய பண்ணையில் கடுகு எண்ணெய் உற்பத்தி செய்தோம். அப்போது தான் சிறிய மதிப்பு கூட்டல் கூட பலன் அளிக்கும் என்பதை உணர்ந்தேன்,~ என்கிறார்.

ஃபார்ம்லே இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறது. தரக்கட்டுப்பாடு சோதனைகளையும் மேற்கொள்கிறது. 5000க்கும் மேலான விவசாயிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

இந்தியா தவிர அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது. 260 உறுப்பினர்களை கொண்ட இந்த ஸ்டார்ட் அப், ஐந்து பிரசாஸிங் மையங்களை செயல்படுத்தி வருகிறது. 60 சதவீத பணியாளர்கள் பெண்கள். பெரும்பாலான பொருட்கள் தயாராகும் நான்கு முழு பிராசஸிங் மையங்களையும் கொண்டுள்ளது.

“எங்கள் உற்பத்தி மையங்கள் பிகாரின் பூர்னியாவில் அமைந்துள்ளன. இங்கு 3,500க்கும் மேலான விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறோம், என்கிறார்.

கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள ஆலை முந்திரிகளை தயார் செய்கிறது, மகாராஷ்டிராவின் சங்கிலியில் உள்ள ஆலை திராட்சைகளை தயார் செய்கிறது. இந்தூரில் உள்ள ஆலை மதிப்பு கூட்டலை வழங்குகிறது. இந்த முறையில் தரமான மூலப்பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதோடு, விவசாயிகளுடன் நெருங்கிய உறவையும் வைத்துக்கொள்ள முடிகிறது என்கிறார்.

அனைத்து பதப்படுத்தலும், பேக்கிங்கும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. தயாரிப்பில் தரத்தை முழுவதும் கவனம் செலுத்துவது எங்களை வேறுபடுத்திக்காட்டுகிறது என்கிறார்.

Farmley

ஆரோக்கிய ஸ்நாக்ஸ் சந்தை

இந்திய ஸ்நாக்ஸ் சந்தை மிகவும் போட்டி மிக்கது. ஹால்டிராம்ஸ், ஜம்போடைல், லிசியஸ், ஆசம் டைரி போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த சந்தை ஆண்டுக்கு 10.4 சதவீத கூட்டு வளர்ச்சியில் 2028ல் ரூ.70,731 கோடி மதுப்பு பெற்றிருக்கும் என IMARC தெரிவிக்கிறது. .

“இந்த ஸ்நாக்ஸ் சந்தை வேகமாக வளர்வதோடு, இளம் தலைமுறை மத்தியில் முழுமையான ஸ்நாக்சிற்கான தேவையை அதிகரித்து வருகிறது,” என்கிறார் சர்மா.

உலர் பழங்கள், நட்ஸ்களுக்கான சந்தை மிகவும் போட்டி மிக்கது என்றும், பலரும் கலந்த பழங்கள் மற்றும் ஆப்ரிகாட் போன்றவற்றை அளிக்கின்றனர் என்கிறார்.

ஃபார்ம்லே தனது விவசாயிகள் வலைப்பின்னல் மற்றும் புதுமையாக்கத்தால் தனித்து நின்றாலும் ஒரு சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை. விநியோக வலைப்பின்னலை அமைப்பது மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது சவாலாக இருக்கிறது. இவற்றுக்கு நேரமும், முதலிடும் அதிகம் தேவை, என்கிறார் சர்மா.

“வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பொருட்களை அறிவது இன்னொரு சவாலாக இருக்கிறது. ஏனெனில், விரிவான ஆய்வுக்கு பிறகும் கூட, சில பொருட்கள் நுகர்வோர் ஆதரவை பெறுவதில்லை. புதிதாக நுழையும் பிராண்ட்கள், என்னை ஏன் தேர்வு செய்ய வேண்டும் எனும் கேள்விக்கு பதில் அளிக்க விநியோகத்தை அதிகரித்து, பேக்கேஜிங் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும், என்கிறார்.

எதிர்காலத் திட்டம்

இந்த ஸ்டார்ட் அப் கடந்த ஆண்டு பிசி ஜிண்டால் குழுமம் தலைமை வகித்த நிதிச்சுற்றில் 6.7 மில்லியன் டாலர் திரட்டியது. ஏற்கனவே உள்ள டிஎஸ்.ஜி கன்ஸ்யூமர் பார்ட்னர்ஸ், ஆம்னிவோர், ஆல்கமி பார்ட்னர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கேற்றன.

நிறுவனத்தின் வருவாய், 2020 நிதியாண்டில் ரூ.150 கோடியை எட்டியது. ஆண்டு தொடர் வருவாய் ரூ.300 கோடியாக உள்ள நிலையில், நிறுவனம் தனது நேரடி விற்பனையையும், பொது வர்த்தகத்தையும் விரிவாக்க வருகிறது.

நிறுவனம் கடைகள் மூலமான விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்திய மக்கள்தொகையை இலக்காகக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளில் இருப்பை கொண்டுள்ளது. விரிவாக்கத் திட்டம் குருகிராமில் ஒரு பதப்படுத்தும் ஆலையையும் அமைக்கிறது.

ஆங்கிலத்தில்: புவனா காமத் : தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan