ஹெலிகாப்டர் என்ட்ரி, ரூ.90 லட்சம் பணமழையுடன் ஊர்வலம்: தொழில் அதிபரின் பிரம்மாண்ட திருமணம்!

காசு, மழை, துட்டு, மணி மணியென கட்டு கட்டா ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்து கொண்டே பணமழையின் மத்தியில் சமீபத்தில் நிகழ்ந்த மணமக்களது ஊர்வல நிகழ்வு, சுத்தியிருந்த கூட்டத்தினரை மட்டுமின்றி மொத்த இந்தியாவையும் திகைக்கச் செய்துள்ளது. இது எங்க தெரியுமா?

4th Dec 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

திருமணம் எனும் வாழ்வின் இரண்டாம் அத்தியாத்தில் அடியெடுத்து வைத்துள்ள பலரது திருமணச் செலவுகளை கேட்டால், ஒரு செகண்ட் ஷாக் மோடுக்கு சென்று திரும்பிவிடும் நிலை உண்டாகும். ஏனெனில், ஊரு கூடி உறவுக்காரர்கள் மத்தியில் நடக்கும் திருமணங்கள் ஆடம்பரங்களினால் நிறைந்து, பத்திரிக்கை முதல் பந்தி வரை எல்லா இடங்களிலும் பணத்தை வாரி இறைப்பதை காணமுடிகிறது. ஆனால், குஜராத்தில் ஒரு மணமகன் உண்மையிலே ரூபாய் நோட்டுக் கட்டுக்களை வீசியெறிந்து அதன் ஊடே மணமக்கள் ஊர்வலத்தை நடத்தி, திகைக்க வைத்துள்ளார்.


குஜராத்தின் ஜாம்நகர் சேலா பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ருஷிராஜ் சிங் ஜடேஜா. கான்ட்ராக்ட் தொழில் புரிந்துவரும் அவருக்கு கடந்த வியாழக்கிழமை திருமணம் கோலாகலமாய் நடந்து முடிந்தது.

திருமணத்தை அவரது கெத்தை நிரூபிக்கும் வாய்ப்பாக கருதிய ருஷிராஜ், மணமக்கள் ஊர்வலத்தில் 10 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை காற்றில் பறக்கவிட்டார். வான்நோக்கி வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள் பணமழையாக பொழிய அக்கிராமத்தார் திகைத்துப்போயினர். பின், அங்கிருந்து திருமண மண்டபத்திற்கு மணமக்கள் ஹெலிகாப்டரில் சென்று என்ட்ரி ஆகியுள்ளனர். அங்கு மட்டுமின்றி திருமண நிகழ்வின் போதும், பணமழை பொழிந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறாக காற்றில் ரூ.90 லட்சம் ரூபாய் மதிப்பு நோட்டுகள் பறக்கவிடப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Rushiraj wedding

பட உதவி: Ahmedabad Mirror

இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாட்டில் கூறுகையில்,

“எங்க கிராமத்தில் மணமக்கள் ஹெலிகாப்டரில் மண்டபத்திற்கு வந்து இறங்குவது இதுவே முதல் முறை. கிராமத்தில் உள்ள பெருவாரியான மக்கள் ஹெலிகாப்டரை முதல் முறை பார்த்ததால், கிராமத்தினருக்கு ஒரே குஷி. கிராமமே களிப்புணர்ச்சியில் நிரம்பியிருந்தது,” என்றார்.

குஜராத்தியான ருஷிராஜ் சிங் பக்கா மணி-மைண்டட் பெர்சன். பால்ய வயதிலிருந்தே கார்கள் மீது அவருக்கு அதீத ஈர்ப்பு. எப்போதுமே சிறுவயதில் ரிமோட் கண்ட்ரோல் கார்களுடனே விளையாடியவர், வளர்ந்தபிறகு அவருக்கான கனவு காரையும் தேர்ந்தெடுத்து வாங்கியுள்ளார்.


பட்டப்படிப்பு முடிந்தவுடன் கார்களின் உலகில் அவரது வாழ்க்கையை தொடர விரும்பிய அவர், கார் டீலராக வேண்டும் என்று எண்ணினார். ஆனால், வாழ்க்கை அவருக்கு வேறுவிதமான பாதையை தேர்ந்தெடுத்து கொடுத்தது. சோஷியல் மீடியாக்களில் அதிகமான பணம் சம்பாதிப்பது எப்படி என்ற அவரது தொடர் தேடலின்முடிவில், சோஷியல் மீடியாவின் செல்வாக்குமிக்க நபராக மாற முடிவெடுத்தார்.

rushiraj singh1

இதற்காக, ருஷிராஜ் அவரது இன்ஸ்டாகிராமை புதுப்பித்து, ஆட்டோமொபைல்கள் குறித்த உள்ளடக்கத்தை வெளியிடத் தொடங்கினார். அவரது எக்ஸ்பென்சிவ் கார்களுடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டார். ஆன்லைனில் பாப்புலாரிட்டி மிகுந்தவராக மாறியது குறித்து அவர் பேசுகையில்,

“நான் ஒரு பிளாகர் ஆக வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால் சமூக ஊடகங்களின் அம்சங்களைப் பற்றி நான் தெரிந்தவுடன், எனது ஆர்வத்தை எனது தொழிலாக மாற்ற முடிவு செய்தேன். இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யத் தொடங்கினேன், காலப்போக்கில் மக்களிடமிருந்து நேர்மறையான பதில்களைப் பெற்றேன். அப்போதிருந்து, நான் ஒரு பிளாகராக மாற முடிவு செய்தேன்.”

அடிப்படையில், நான் குஜராத்தின் ஜாம்நகர் நகரைச் சேர்ந்தவன். தூய தொழிலதிபர்கள் என்று அறியப்படும் ஜாம்நகர் மக்களிடமிருந்து நான் தனித்துவமான ஒன்றைச் செய்ய விரும்பினேன்,” என்று இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்சிற்கு முன்பு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


எப்போதும் அவரது சொகுசு வாழ்க்கை முறையை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவருக்கு 1.50 லட்ச ஃபாலோயர்களுண்டு. பிரம்மாண்ட பிரியர் அவரது திருமணத்தை ராயல் வெட்டிங்காக மாற்றியது அவரது ஃபாலோயர்களுக்கு ஆச்சரியமில்லை.

மணமகனின் அண்ணன், புதுமண தம்பதிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். திருமணத்தின்போது பெறப்பட்ட நன்கொடைகள் 5 கோசாலைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன. இவரின் ஆடம்பரத் திருமணம் குறித்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து ஆன்லைன் உலகத்தாரை முட்டக்கண்ணு ஸ்மைலி ரியாக்ஷன் கொடுக்க வைத்துள்ளது.
rushiraj singh

ஆனால், ருஷிராஜின் பிரமாண்ட திருமணம் குறித்து சர்ச்சைகளும் வெடித்து வருகின்றனர். மணமகனின் குடும்பம் பாஜகவுடன் நெருக்கமாக தொடர்புடையது என்று கூறிய ஜாம்நகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜே டி படேல், ‘வெளிப் படையாக வீசப்பட்ட பணம் கறுப்புப் பணமாகும். இன்று ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கூட கிடைக்காத ஏழை மக்கள் இருக்கும்போது, ஒரு கொண்டாட்டத்திற்காக லட்சம் ரூபாய் நோட்டுகளை வீசுவது தவறான முன்மாதிரி’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.


எது எப்படி இருந்தா என்ன, யார் என்ன சொன்னா என்ன நம்ம பப்ளிசிட்டி தான் முக்கியம் என தங்கள் இஷ்டத்துக்கும் இருப்பவர்கள் இங்கே அதிகம்...


பட உதவி: ருஷிராஜ் சிங் இன்ஸ்டாகிராம்| தகவல் உதவி: Ahmedabad mirror  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India