வீட்டில் இல்லாத போதும் தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றலாம்; மாத்தி யோசித்த மங்களூரு தம்பதி!
வீட்டில் யாருமே இல்லாவிட்டாலும் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு சரியாக தண்ணீர் பாய்ச்சக்கூடிய டெக்னாலஜியை மங்களூருவைச் சேர்ந்த தம்பதி கண்டுபிடித்துள்ளனர்.
வீட்டில் யாருமே இல்லாவிட்டாலும் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு சரியாக தண்ணீர் பாய்ச்சக்கூடிய டெக்னாலஜியை மங்களூருவைச் சேர்ந்த தம்பதி கண்டுபிடித்துள்ளனர்.
செல்லப்பிராணிகள் இருக்கும் வீடுகளில் ஒருநாள் இரவு வெளியில் தங்குவதற்குக் கூட அதிக தயக்கம் காட்டுவார்கள். ஏனெனில், நாம் இல்லையென்றால் வீட்டில் இருக்கும் நாய், பூனை அல்லது பறவைகளுக்கு யார் உணவு கொடுப்பார்கள், பராமரிப்பார்கள் என்ற கவலை தான் அதற்கு காரணம்.
இப்போதெல்லாம் வெளிநாட்டைப் போல இந்தியாவிலும் செல்லப்பிராணிகளை உங்கள் வீட்டிலோ அல்லது தனது வீட்டிற்கு எடுத்துச்சென்றே பராமரிக்க கேர் டேக்கர்கள் கிடைக்கிறார்கள். அதனால் செல்லப்பிராணி பற்றிய கவலைக்கு முடிவு கிடைத்துவிட்டது.
ஆனால், வீட்டில் பார்த்து, பார்த்து வளர்க்கப்படும் செடி, கொடிகளை பராமரிப்பதற்கு அடுத்தவரிடம் உதவி கேட்பது இயலாத காரியம். அப்படிப்பட்டவர்களின் கவலையை போக்குவதற்காகவே அசத்தலான கண்டுபிடிப்பை மங்களூருவைச் சேர்ந்த தம்பதி உருவாக்கியுள்ளனர்.
மங்களூரு தம்பதி:
மங்களூருவின் பெஜாய் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சந்திரஹாசா அவரது மனைவி ஷோபா இருவரும் தங்களது வீட்டு தோட்டத்தில் நிறைய செடிகளை வளர்த்து வருகின்றனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் தனது மகனுடன் தங்கியிருப்பதாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், நாம் வெளிநாட்டிற்குச் சென்ற பிறகு யார் நமது தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்துள்ளது. இதற்கு மற்றொரு இளம் தம்பதியினர் தீர்வை கண்டுபிடித்து, அவர்களுடைய கவலையைப் போக்கியுள்ளனர்.
ஐ.டி. வேலையை உதறித்தள்ளிய தம்பதி:
மங்களூருவைச் சேர்ந்த தீபிகா மற்றும் சந்தோஷ் ஷெட் தம்பதி, தனக்குப் பிடித்தமான பணியை செய்வதற்காக பார்த்து வந்த ஐ.டி.வேலையை உதறித்தள்ளிவிட்டு தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்படும் பிரச்சனைக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் ஸ்டார்ட்அப் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
நகரமயமாக்கல் காரணமாக வீடுகளின் பரப்பளவு குறைந்து வருகிறது. அப்படியிருந்தாலும் ஏராளமான மக்கள் தங்களது வீட்டின் முன்பு அல்லது பால்கனியில் செடிகளை வளர்க்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், சிக்கல் என்னவென்றால் கணவன், மனைவி என இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலை காரணமாக செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை. இதனால் வீடுகளில் செடி வளர்ப்பதை நகரவாசிகள் தவிர்ப்பதை திபிகாவும், சந்தோஷும் கண்டறிந்தனர்.
ஐ.டி. வேலையை விட்ட பிறகு கிட்டத்தட்ட ஓராண்டுகள் கடுமையாக முயற்சித்து “நீர்ப்பாசன ஆட்டோமேஷன் கருவி” எனப்படும் அது, IOT (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் உலகின் எந்த மூலையில் இருந்தும் இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் கட்டுப்படுத்தலாம் என ஷெட் தம்பதி அடித்துக்கூறுகின்றனர்.
அமெரிக்காவில் இருக்கும் போது, தனது தோட்டம் மற்றும் பால்கனியில் உள்ள செடிகளுக்கு சரியான நேரத்தில் தண்ணீர் கிடைப்பது மட்டுமல்லாமல், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது குறித்து மொபைல் போனில் அறிவிப்பும் வரும் என்பதை சந்திரஹாசா உறுதியாக நம்பலாம் என்கின்றனர்.
“ஐடி வேலை எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக மென்பொருள் உருவாக்குநராக மிட் மேனேஜ்மென்ட் மட்டத்தில் உலகம் முழுவதும் பணியாற்றினேன். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலையை விட்டுவிடுவதற்கு முன்பு, நான் இங்கே இருக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன்,” என்கிறார் சந்தோஷ்.
கொரோனாவில் எடுத்த திடீர் முடிவு:
கொரோனா பெருந்தோற்று காலத்தின் போது சந்தோஷ் அயர்லாந்தில் தனியாக வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஓராண்டிற்கு தனது மனைவி தீபிகா மற்றும் மகள் அத்விதியை பிரிந்திருந்தார். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான சந்தோஷ், வேலையை விட்டு விடுவது என முடிவெடுத்தார். அதற்கு முன்னதாகவே தீபிகா குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக தனது ஐ.டி.வேலையை உதறித்தள்ளியிருந்தார்.
“நானும் தாவரங்கள் மீது காதல் கொண்டிருந்தேன். அதனால் கணவரின் ஐடியாவைக் கேட்டு முடியாது என சொல்லமுடியவில்லை. மனிதர்களின் தலையீடு இல்லாமல் தாவரங்களை உயிருடன் வைத்திருப்பது எங்களுக்கு மாயாஜால அனுபவமாக அமைந்தது. நாங்கள் செய்வதை ரசிக்கிறோம், மேலும், அத்விதிக்கு இந்த உலகத்தை சிறந்த இடமாக விட்டுச் செல்வோம் என்று நம்புகிறோம்,” என்கிறார் உடுப்பியைச் சேர்ந்த தீபிகா.
நீர்பாசன கருவி எவ்வாறு செயல்படுகிறது?
நீர்ப்பாசனத்தை எளிதாக்குவது மற்றும் அதே நேரத்தில் தண்ணீர் வீணாவதைக் குறைப்பது என இரண்டு விஷயங்களை நோக்கமாகக் கொண்டு ஆட்டோமெட்டிக் நீர்பாசன கருவியைக் கண்டுபிடிக்க களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, சாதனத்தை மழை மற்றும் வெளியில் இருந்து பாதுகாப்பதும், அதற்குள் தண்ணீர் மற்றும் காற்று உட்புகாமல் பார்த்துக்கொள்வதும் மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. இருப்பினும் அனைத்து சவால்களையும் கடந்து தற்போது தங்களது கனவை நனவாக்கியுள்ளனர்.
இந்தச் சாதனம் ஆற்றலைச் சேமிப்பதற்காக நன்றாகச் சரி செய்யப்பட்டுள்ளது. இது ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் அல்கலைன் பேட்டரிகளில் இயங்குகிறது. பேட்டரி தீர்ந்துவிட்டால் அல்லது மேல்நிலைத் தொட்டி காலியாக இருக்கும்போது பயனருக்குத் தெரிவிக்கும் ஒரு ஆப் பயனருக்கு அவரது ஃபோனுக்காக வழங்கப்படுகிறது. பின்தளத்தில், எங்கள் வலைத்தளம் நீர்ப்பாசன வரலாற்றை சேமிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த சாதனைத்தை தொலைவிலிருந்து ஆன் அல்லது ஆஃப் செய்யலாம். வானிலையின் அடிப்படையில் இதைச் செய்யக்கூடிய அல்காரிதத்தையும் உருவாக்கியுள்ளனர்.
இந்த சாதனம் பெரிய தோட்டங்கள் அல்லது சிறிய பால்கனிகளின் நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். தீர்வு அனைத்து தேவைகளுக்கும் பொருந்தும் வகையில் தனிப்பயனாக்கலாம். தாவரங்களைக் கொண்ட ஒவ்வொரு வீட்டிற்கும் அதன் சொந்த குணாதிசயங்கள் உள்ளன. இந்த ஸ்டார்ட்-அப் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தண்ணீர் விநியோகத்தை தனிப்பயனாக்குகிறது.
உதாரணமாக, பெரும்பாலான வீடுகளில் பால்கனியில் நீர் ஆதாரம் இல்லை. அத்தகைய வீடுகளுக்கு, தண்ணீர் தொட்டி அடிப்படையிலான அமைப்பை வடிவமைத்துள்ளனர்.
தண்ணீர் தொட்டியை (விரும்பினால்) ஒரு பிரமாண்ட ஒட்டு பலகை அடைப்பில் வைக்கலாம். பெரும்பாலான வீடுகளில் RO சுத்திகரிப்பு அலகுகள் மற்றும் AC கம்ப்ரசர்கள் உள்ளன, அவை எப்போதும் தொட்டியை டாப் அப் வைத்திருக்கும். இந்த ஜோடி தற்போது LORA (லாங் ரேஞ்ச்) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் விவசாய வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சக்கூடிய மிகப் பெரிய மாதிரிகளை ஆராய்ச்சி செய்து வருகிறது.
இதுவரை, மங்களூருவில் ஐந்து இடங்களில் நீர்ப்பாசன ஆட்டோமேஷன் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.