இல்லத்தரசி டு தொழிலதிபர் - அசாத்திய பெண்ணின் ரூ.4,100 கோடி சாம்ராஜ்ஜிய கதை!
10,000 ரூபாயில் தொடங்கி 500 மில்லியன் டாலர் வணிக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தொழில்முனைவிலும் சமூகப் பணியிலும் தடைகளை உடைத்தெறிந்து சாதித்த சஷி சோனியின் உத்வேக கதை இது.
தொழில்முனைவோராகவும், சமூக ஆர்வலராகவும், சமூக சேவையாளராகவும் தன்னை உயர்த்திக் கொண்ட சஷி சோனி, தன்னுடைய உறுதியினாலும் புதுமை படைக்கும் ஊக்கத்தினாலும் உத்வேகமளிக்கும் பயணத்தைக் கண்டடைந்தார்.
1970-களின் முற்பகுதியில் இல்லத்தரசியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சோனியின் முதல் முயற்சி 1971-ல் டீப் டிரான்ஸ்போர்ட் (Deep Transport) ஆகும். அவர் ரூ 10,000 ஆரம்ப முதலீட்டில் 'டீப் டிரான்ஸ்போர்ட்'டை நிறுவினார்.
இந்த எளியதோர் ஆரம்பம் 1975 வரை அவருக்கு வெற்றிகரமாக நடந்தேறியது. பின்னர், அவர் மும்பையின் முலுண்ட் பகுதியில் ‘டீப் மந்திர் சினிமா’வை (Deep Mandir Cinema) நிறுவுவதன் மூலம் சினிமா உலகில் நுழைந்தார். இந்தத் தொழில் 1980-ம் ஆண்டு வரை செழிப்பாகவே நடந்தது.
விடாமுயற்சியால் விஸ்வரூபம்!
பத்தாண்டுகள் கடும் சவால்களை எதிர்கொண்ட சோனி தன் விடாமுயற்சியினால் மைசூருவில் ஆக்சிஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் துவக்கினார். இது அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணம். ஆக்சிஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் தொழிற்துறையில் அவர் ஒரு கவனம் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
2005-ஆம் ஆண்டில், தனது தொழில் முனைவோராகும் உந்துதலைத் தொடர்ந்து உயர் தொழில்நுட்ப வாகனம் மற்றும் மின்-சில்லறை விற்பனை தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற உலகளாவிய மென்பொருள் நிறுவனமான இஸ்மோ லிமிடெட் (
) நிறுவனத்தை நிறுவினார்.இஸ்மோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக, அவர் நிறுவனத்தை குறிப்பிடத்தக்க உயரத்திற்கு அழைத்துச் சென்றார். அதாவது, மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசியப் பங்குச் சந்தை இரண்டிலும் இஸ்மோ லிமிடெட் லிஸ்ட் செய்யப்பட்டது.
வெறும் 10,000 ரூபாயில் இருந்து தொடங்கிய அவரது நிகர மதிப்பு, shashisoni.com தரவுப்படி, 500 மில்லியன் டாலர்கள் (தோராயமாக ரூ.4100 கோடி) நிறுவனமாக வளர்ந்துள்ளது. இது அவரது குறிப்பிடத்தக்க வெற்றி மற்றும் வணிக புத்திசாலித்தனத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது.
தனது வணிக முயற்சிகளுக்கு அப்பால், சோனி சமூக நலனில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். டீப் ஜன்சேவா சமிதியின் மூலம் பல்வேறு சமூக ஊழியங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். வேலை வாய்ப்புகள், பெண்கள் கல்வி, ஓய்வூதியத் திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறார்.
வெற்றிக்கு வித்திடவை
வணிகச் சிந்தனைகளைக் கொண்ட ஓர் இல்லத்தரசியாக இருந்து பிறகு வெற்றிகரமான தொழில்முனைவோராகி சமூக சேவகியாக சோனியின் பயணம் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது.
சோனி பல சவால்களை எதிர்கொண்டு சமாளித்து, தன் உறுதியையும் அர்ப்பணிப்பையும் கொடுத்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் அவரது குடும்பத்துக்கு செல்வத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், அவரது ஊழியர்களை உயர்த்தியதோடு அல்லாமல், பங்குதாரர்களையும் திருப்திப்படுத்தியது.
வணிக நலன்களுக்கு அப்பாற்பட்ட அவரது சமூகத் தொண்டு வேலைநிறுத்தங்களின்போது தொழிலாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைகிறது.
பின்தங்கிய பின்னணியில் உள்ள தனிநபர்கள் புதிய திறன்களைக் கற்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவுகிறார் சோனி.
அகில இந்திய தொழில்துறை வாயு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவின் ஒரே பெண் உறுப்பினராக ஏழு ஆண்டுகள் பணியாற்றியது அவரது புகழ்பெற்ற வாழ்க்கையில் அடங்கும். அங்கு அவர் இந்தத் தொழில்துறை மாற்றத்தின் போது முக்கியப் பங்கு வகித்தார்.
சோனியின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு 1990ல் ’மகிளா கௌரவ் புரஸ்கார்’ விருது வழங்கப்பட்டது.
ரத்த தானம் மற்றும் கண் சிகிச்சை முகாம்கள் போன்ற பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் விதமாக அவர்களின் திறன்களை வளர்க்க உதவினார்.
சஷி சோனியின் பயணம் என்பது உறுதிப்பாடு, கடின உழைப்பு, சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் திறன் ஆகியவற்றின் சான்றாகும். அவர் தொழில் முனைவில் ஆர்வமுள்ளோருக்கும் சமூக ஆர்வலர்களாக ஆவதற்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்.
மூலம்: Nucleus_AI
அன்று வீட்டிலேயே உள்ளாடை தயாரிப்பு; இன்று ரூ.500 கோடி நிறுவனம் - சாதித்த இல்லத்தரசி!
Edited by Induja Raghunathan