முன்னணி சி.இ.ஓ பாதுகாப்பிற்கு கோடிகளில் செலவிடும் நிறுவனங்கள் - எவ்வளவு தொகை தெரியுமா?
யுனைடெட் ஹெல்த்கேர் சி.இ.ஓ பிரையன் தாம்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், முன்னணி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான கவனத்தை அதிகமாக்கியுள்ளது.
யுனைடெட் ஹெல்த்கேர் சி.இ.ஓ பிரையன் தாம்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், முன்னணி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பான கவனத்தை அதிகமாக்கியுள்ளது.
சி.இ.ஓ.,க்கள் பாதுகாப்பிற்கு அதிக தொகை செலவிடுவதன் அவசித்தையும் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் முன்னணி 500 நிறுவனங்களில் பாதுகாப்பிற்கு செலவிடப்படும் தொகை, இரு மடங்காக அதிகரித்திருப்பதாக ஈக்விலர் தரவு ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. 2021ல் 47,643 டாலரில் இருந்து 2023 ல் 98,069 டாலராக அதிகரித்துள்ளது.
மேலும், இதே காலத்தில் முன்னணி நிர்வாகிகளின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக செலவிடப்படும் தொகை 23.5 சதவீதத்தில் இருந்து 27.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நிறுவனங்களின் சிஇஒ மற்றும் அவர்களின் பாதுகாப்பு செலவு எவ்வளவு?
- முன்னணி நிறுவனங்களில் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா, அதன் சி.இ.ஓ மார்க் ஜக்கர்பர்க் பாதுகாப்பிற்கு 24.4 மில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. அவரது இல்லத்திற்கான பாதுகாப்பு மற்றும் பயணங்களில் பாதுகாப்பிற்கான தொகை 9.4 மில்லியன் டாலர் ஆகும். அவரது மற்றும் குடும்பத்தின் கூடுதல் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு 14 மில்லியன் டாலர் செலவிடப்படுகிறது.
- சி.ஓ.ஓ ஜேவியர் ஆலிவன் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பாதுகாப்பிற்காக மெட்டா நிறுவனம் 9,03,139 டாலர் செலவிடுகிறது.
- கூகுள் நிறுவனம் அதன் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பாதுகாபிற்கு 6.8 மில்லியன் டாலர் செலவிடுகிறது.
- அமேசான் நிறுவனம் அதன் சி.இ.ஓ ஜெப் பெசோஸ், அமேசான் ஸ்டோர்ஸ் அதிகாரி ஜேஸி உள்ளிட்டோர் பாதுகாப்பிற்கு 2.7 மில்லியன் டாலர் செலவிடுகிறது. பெசோஸ் பாதுகாப்பிற்கு என 1.6 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.
- சிப் தயாரிப்பு நிறுவனம் என்விடியா அதன் சி.இ.ஓ ஹுவாங் பாதுகாப்பிற்கு 2.5 மில்லியன் டாலர் செலவிடுகிறது.
- டெஸ்லா நிறுவனம் அதன் சி.இ.ஓ எலான் மஸ்க் பாதுகாப்பிற்கு செலவிடும் தொகை 2.4 மில்லியன் டாலர்.
- ஆப்பிள் நிறுவனம் அதன் சி.இ.ஓ டிம் குக் பாதுகாப்பிற்கு கடந்த ஆண்டு 8,20,000 டாலர்.
- செலவிட்டது. மைக்ரோசாப்ட் அதன் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா பாதுகாப்பிற்கிற்கு 58,291 டாலர் செலவிட்டுள்ளது.
தகவல் உதவி - தி இந்து, தொகுப்பு: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan