Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

தீபாவளி பட்டாசு வெடிக்கும்போது கண்களை சரியாக பாதுகாத்துக் கொள்வது எப்படி?

பட்டாசுகளோடு தீபாவளி திருநாளை கொண்டாடுவது ஒரு பாரம்பரியமாகவே நம்மிடம் இருந்து வருகின்ற நிலையில், அவைகளை கையாளும்போது கூடுதல் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகும்.

தீபாவளி பட்டாசு வெடிக்கும்போது கண்களை சரியாக பாதுகாத்துக் கொள்வது எப்படி?

Friday October 21, 2022 , 4 min Read

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பரிசுகளை பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பட்டாசுகள், வாணவேடிக்கைகள் என எல்லாமே நமக்கு நினைவுக்கு வரும். பட்டாசுகளை வெடிப்பதற்கு வயது ஒரு காரணியாக இருப்பதில்லை. எல்லாருமே பட்டாசு வெடிப்பதையும், வாணவேடிக்கைகளை கண்டு மமிழவும் விரும்புகின்றனர்.

பட்டாசுகளோடு தீபாவளித் திருநாளை கொண்டாடுவது ஒரு பாரம்பரியமாகவே நம்மிடம் இருந்து வருகின்ற நிலையில், அவைகளை கையாளும்போது கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

தீபாவளி கொண்டாட்ட காலத்தின்போது பட்டாசுகளாலும், வாணவேடிக்கைகளாலும் நிகழ்கின்ற பெரும்பான்மையான காயங்கள், கண்கள் மீது நேரடி பாதிப்பை கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் மிகக் கடுமையான காயங்களும் ஏற்படுகின்றன. 

ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகள் வெடிப்பதன் காரணமாக, பிரதானமாக கண்களில் காயங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுவதாக அறியப்படுகிறது. உண்மையில் கைகள் மற்றும் விரல்களுக்குப் பிறகு மிக அதிகமாக பாதிக்கப்படுகின்ற உடற்பகுதியாக இருப்பது கண்கள் தான். 

crackers

பொதுவான காயங்களுள் சில, மத்தாப்புகள் மற்றும் சங்குச்சக்கரத்தோடு வெடி ஆகியவற்றால் ஏற்படுகின்றன. இவைகளை வெடிக்கும்போது எதிர்பாராதவிதமாக கண்களில் காயங்கள் ஏற்படுகின்றன. அதை தவிர்ப்பது எப்படி? அப்படி கண்களில் காயம் ஏற்பட்டால் உடனடியாக நாம் என்ன செய்யவேண்டும் என்பன போன்ற பல விஷயங்கள் பற்றி பகிர்ந்துள்ளார் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர் எஸ்.சௌந்தரி.

பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?

பட்டாசுகள், வெடிகளை கையாள்கின்ற நபர்களோடு சேர்த்து பக்கத்தில் இருப்பவர்களுக்கும் கண் காயங்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்புகள் உள்ளது. 50 சதவிகிதத்திற்கும் அதிகமான இத்தகைய நபர்களுக்கு கண் காயங்கள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது.  சாலைகளில் பட்டாசுகளை வெடிக்கும்போது, அச்சாலைகளை கடந்து செல்கின்ற நபர்கள் இவைகளில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பிற நபர்களாக இருக்கின்றனர்.

காயங்களின் வகை

கண்களில் ஏற்படும் காயங்களின் தீவிர தன்மையானது லேசான எரிச்சலிலிருந்து விழித்திரையில் சிக்கல்களை விளைவிக்கின்ற கருவிழி சிராய்ப்புகள் வரையிலும் மற்றும் பார்வைத்திறன் இழப்பிற்கு வழி வகுக்கும் ஊடுருவல் காயம் வரை இருக்கக்கூடும்.

பட்டாசுகள் மற்றும் வெடிகளில் கலக்கப்படுகின்ற வெடிமருந்துகளில் உள்ள வேதிப்பொருட்களின் காரணமாக காயங்கள் ஏற்படுகின்றன. வெடிகளினால் ஏற்படுகின்ற தொடர் புகையானது, தொண்டையிலும் மற்றும் கண்களிலும் எரிச்சலை ஏற்படுத்தி, கண்களிலிருந்து நீர் வழியச் செய்யும். 

பட்டாசு வெடிக்கும்போது வெளிவருகின்ற புகையானது, தொண்டை அழற்சியோடு, அதில் பிற தொற்றுகளையும் விளைவிக்கக்கூடும். மத்தாப்புகள் மிக ஆபத்தானவையாகும். ஏனெனில், தங்கத்தை உருக்கும் அளவிற்கு திறனோடு (1,800° F) உயர் வெப்பநிலையில் அவைகள் எரிகின்றன. தண்ணீரின் கொதிநிலையை விட ஏறக்குறைய 1000டிகிரி இந்த வெப்பநிலையானது அதிகமாகும். கண்ணாடியையே உருக்கிவிடும் அளவிற்கு இருக்கும் இதனால், சருமத்தில் மூன்றாவது நிலை தீக்காயங்கள் ஏற்படக்கூடும்.  எனவே, இத்தகைய காயங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

நீண்டநேரம் நேரடி வெப்பச் சூழலுக்கு உட்படுத்தப்பட்டால், கண்களில் அணிந்துள்ள கான்டாக்ட் லென்சுகள் கண்களுக்கு எரிச்சலை விளைவிக்கக்கூடும். எனவே, பட்டாசு வெடிக்கின்றபோது கான்டாக்ட் லென்சுகளை அணிந்திருக்கும் நபர்கள் இருமடங்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

சுருக்கமாக கூறுவதென்றால், பட்டாசுகள் / வெடிகளால் கண்களுக்கு ஏற்படுகின்ற சேதமானது அந்த வெடியின் திசை வேகத்தை அல்லது கண்ணை தாக்குகின்ற அதன் தீவிரத்தை சார்ந்திருக்கும். கண்ணில் ஏற்படுகிற வேதியியல் மறுவிளைவுகள் மற்றும் வெப்ப நிலையிலான தீ காயங்களைச் சார்ந்தும் கண்ணில் சேதம் இருக்கும்.

கண்களில் ஏற்படக்கூடிய முக்கியக் காயங்கள்

  • திறந்தநிலை கருவிழி காயம் – கண் சுவரில் ஊடுருவுகிற முழு அடர்த்தி காயம்
  • மூடியநிலை கருவிழி காயம் – கண் சுவரில் கிழிதல்/கீறலை ஏற்படுத்துகிற முழு அடர்த்தி காயம் இல்லாமல் கருவிழிக்கு ஏற்படுகிற காயம்
  • கன்றி போகுதல் – கண்ணைச் சுற்றி சிராய்ப்பு
  • ஏடுகளான கீறல் - கண் சுவரில் பகுதியளவு அடர்த்தி நிலை காயம்
  • கீறல் – ஒரு கூர்மையான பொருளால் விளைவிக்கப்படுகின்ற கண் சுவரின் முழு அடர்த்திநிலை காயம்
  • ஊடுருவும் காயம் – உள்நுழைவு காயத்துடன் கூடிய ஒரு திறந்தநிலை கருவிழி காயம்
  • துளையுடன் கூடிய காயம் – உள்நுழைவு மற்றும் வெளியேறல் துளையுடன்கூடிய ஒரு திறந்தநிலை கருவிழி காயம்

மூடப்பட்ட நிலை காயங்களுடன் வரும் நோயாளிகளுக்கு வெளிநோயாளி அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும். திறந்தநிலை கண் காயம், கருவிழி மற்றும் வெண்படலத்தில் கிழிசல்கள், இரத்தக்கசிவு தேக்கத்துடன் காயமேற்படுத்திய திரைப்பிரித்தல், கண்ணுக்குள் அந்நியப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிப்பு (IOFB) மற்றும் கருவிழி கிழிசல் ஆகிய பாதிப்புகள் உள்ள நோயாளிகள் மேலதிக சிகிச்சை மேலாண்மை மற்றும் கண்காணிப்பிற்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்.

diwali crackers

செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

■      கண்களை தேய்க்கவோ அல்லது கண்களை சொறியவோ கூடாது. 

■      உங்கள் கண்களையும், முகத்தையும் முறையாக கழுவுங்கள்

■      கண்ணில் எரிச்சல் அல்லது அந்நியப் பொருள் இருக்குமானால், கண் இமைகளை நன்கு திறந்து வைத்து, தொடர்ச்சியாக நீரைக்கொண்டு கண்களை அலசவும். கண்ணில் துகள் எதுவும் சிக்கியிருக்குமானால் அல்லது பெரிதாக இருக்குமானால் அதை நீங்களே அகற்ற முயற்சிக்காதீர்கள்.

■      கண்களை மூடிய நிலையில் வைத்து உடனடியாக கண் மருத்துவரிடம் செல்லவும்.

■      கண்களுக்குள் ஏதாவது வேதிப்பொருள் நுழைந்திருக்குமானால், 30 நிமிடங்களுக்கு நீரைக்கொண்டு உடனடியாக கண்களையும் மற்றும் கண் இமைகளுக்கு கீழேயும் நன்கு அலசவும். ஒரு கண் மருத்துவரிடம் உடனடியாக சிகிச்சைக்கு செல்லவும்.

குழந்தைகளுக்கு செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை –

  • பாதிக்கப்பட்ட கண்ணை தேய்க்கக்கூடாது. இரத்தக் கசிவை இது அதிகரிக்கக்கூடும் அல்லது காயத்தை மோசமாக்கக்கூடும்.
  • பாதிக்கப்பட்ட கண்ணின் மீது அழுத்தக்கூடாது. ஒரு ஃபோம் கப்பை அல்லது ஜுஸ் அட்டைப்பெட்டியின் அடிப்பகுதியை கண்களில் வைத்திருப்பது அல்லது டேப் கொண்டு ஒட்டுவது என்பவை பின்பற்றக்கூடிய இரு ஆலோசனை குறிப்புகளாகும்.
  • வலி நிவாரணிகள் உட்பட, OTC மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.
  • ஆயின்மென்ட்டை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். பாதிப்படைந்த கண்ணை பரிசோதித்து, பாதிப்புநிலையை சரியாக அடையாளம் காண்பதை மருத்துவருக்கு இது சிரமமானதாக ஆக்கிவிடும்.
  • வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வை இருப்பினும்கூட, பட்டாசுகளோடு விளையாட குழந்தைகளை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
diwali crackers

எச்சரிக்கையோடு இருங்கள்

■      திறந்தநிலை அமைவிடத்தில் மட்டுமே பட்டாசுகள் / வெடிகளை வெடிக்கவும். அப்போது கண் கவசங்களை அணிந்திருக்கவும்; வெடித்தபிறகு சுத்தமான நீரைக்கொண்டு கைகளைக் கழுவவும்.

■      வெடிகள் / பட்டாசுகளை கையாளும்போது குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும். எந்தவொரு காயத்தையும் லேசானதாக கருதாதீர்கள். மருத்துவரை சந்தித்து உரிய சிகிச்சை உதவியைப் பெறுங்கள்.

■      எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் தயார்நிலையில் நீர் மற்றும் மணலை வாளிகளில் வைத்திருக்கவும்.

■      பட்டாசுகள், மத்தாப்புகள் மற்றும் வாணவேடிக்கைகளை குழந்தைகள் கைகளுக்கு எட்டாதவாறு தள்ளி ஒரு பாதுகாப்பான இடத்தில் மூடிய பெட்டிக்குள் வைத்திருக்கவும்.

■      பட்டாசுகளை வெடிக்கும்போது முகம், தலைமுடி மற்றும் ஆடைகளில் படாதவாறு தள்ளி நின்று வெடிக்கவும்.

■      பட்டாசுகளை வெடிக்கும்போது செயற்கை ஆடைகளை அணியாதீர்கள்.

■      பட்டாசுகளை கொளுத்தும்போது கையளவு தூரத்தை பராமரிக்கவும். அருகில் நின்று கவனித்தீர்களென்றால் குறைந்தது 5 மீட்டர் தூரம் தள்ளி நிற்கவும்.

■      பட்டாசுகளை வெடிக்கச் செல்வதற்கு முன்பு உங்களது கான்டாக்ட் லென்சுகளை கண்களிலிருந்து அகற்றிவிடவும். உங்களது கண்களை ஒரு சிறப்பான வழியில் பாதுகாக்கக்கூடிய கண் கண்ணாடிகளை அதற்குப் பதிலாக பயன்படுத்தவும்.

■      வெடித்த / பயன்படுத்தி வெடிக்காத பட்டாசுகளை தூக்கியெறிவதற்கு முன்பு தண்ணீர் உள்ள வாளிக்குள் அவைகளை முக்கியெடுக்கவும்.

■      எரிந்து கொண்டிருக்கின்ற பட்டாசுகள் மீது கவனக்குறைவாக கால்களை வைத்து விடுவதிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த காலகட்டத்தில் நல்ல காலணிகளை தவறாது அணிந்திருக்கவும்.


துரதிருஷ்டவசமாக கண் காயம் ஏற்படும் நேர்வில் மக்களுக்கு உதவுவதற்காக அவசரநிலை சேவைகளை நாங்கள் தயார்நிலையில் வைத்திருக்கிறோம்.

அத்தகைய நேர்வில் தயவுசெய்து தொடர்புகொள்க: 044 – 4300 8800

தீபாவளி திருநாளை அதிக பாதுகாப்பானதாக, அதிக பசுமையானதாக மற்றும் அதிக ஆரோக்கியமுள்ளதாக கொண்டாடுவோம்.