இந்தியாவில் பண முதலீடே இல்லாமல் ஸ்டார்ட்-அப் தொடங்குவது எப்படி?
சில பல உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவில் பெரிய அளவில் பண முதலீடு இல்லாமல் வெற்றிகரமான ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்க முடியும்.
இந்தியாவில் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்களுடன் தொடங்குவதற்கு போதிய பொருள் அடிப்படை ஆதாரம், மன உறுதி மற்றும் தகவமைத்துக் கொள்ளும் திறன் தேவை. சில பல உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவில் வெற்றிகரமான ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில் ஒரு தொழில்முனைவோர் ஆவது என்பது, குறிப்பாக குறைந்த நிதி ஆதாரங்களுடன் ஒன்றைத் தொடங்குவது என்பது உற்சாகமானது என்பதுடன் சவாலானதும் கூட. நம்மிடம்தான் மூலதனம் இருக்கின்றதே என்ற நினைப்பில் நாம் வெற்றி பெறுவோம் என்று கருத முடியாது.
ஏனெனில், முதலீடு அல்லது மூலதனம் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் ஒற்றைக் காரணியாக இருக்க முடியாது. சரியான மனநிலையுடன், உத்தி ரீதியான அணுகுமுறைகள் மற்றும் ஆதார வளங்களுடன் நீங்கள் கணிசமான நிதி முதலீடு இல்லாமல் இந்தியாவில் தொழில்முனைவோர் உலகில் நீங்கள் அடியெடுத்து வைக்க முடியும்.
குறைந்த நிதி ஆதாரங்களுடன் உங்கள் ஸ்டார்ட்-அப் தொழில்முனைவுப் பயணத்தைத் தொடங்க, இந்தியாவில் ஸ்டார்ட்-அப் தொழிலுக்கான பொருளாதார சூலையும், அது இயங்கும் முறைகளையும் விரிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.
இந்தக் கட்டுரையில், எந்தவொரு குறிப்பிடத்தக்க பண ஆதரவும் இல்லாமல் உங்கள் தொழிலைத் தொடங்க உங்களுக்கு உதவும் பல்வேறு உத்திகள், வாய்ப்புகள் மற்றும் நடைமுறை உதவிக் குறிப்புகளை ஆராய்வோம்.
பண வருவாய் அல்லது லாபகரமான இடங்களைக் கண்டறிதல்
கணிசமான நிதி ஆதரவு இல்லாமல் ஒரு வெற்றிகரமான ஸ்டார்ட்-அப் தொழிலுக்கான தொடக்க அடித்தளத்தை அமைப்பதற்கு, அதிக வளர்ச்சித் திறன் மற்றும் நுழையும்போது ஒப்பீட்டளவில் குறைந்த தடைகளைக் கொண்ட லாபகரமான இடங்களை அடையாளம் காண்பது இன்றியமையாதது.
ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு முன்பாக பெரிய அளவில் கடுமையான சந்தை ஆராய்ச்சி தேவைப்படுகிறது. சந்தையில் ஒரு குறிப்பிட்ட புலத்தில் இருக்கும் போதாமைகள் அல்லது இடைவெளிகள், தற்போது வளர்ந்து வரும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் பூர்த்தி செய்யப்படாத தேவைகள் ஆகியவற்றைக் கண்டறிய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட இலக்கைக் கண்டுப்பிடித்து, உங்கள் ஸ்டார்ட்-அப் தொழிலை வேறுபடுத்திக் காட்டுவதன் மூலம் சந்தையில் ஒரு போட்டித்தன்மையை உருவாக்கலாம்.
தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துதல்
ஒரு டைட்டான பட்ஜெட்டில் தொடங்கப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இன்றைய தேதியில், குறிப்பாக இன்றைய மின்னணு உலகில் தொழில்நுட்பம் பெரிய அளவில் செயலூக்கியாகச் செயல்பட்டு வருகின்றது. பரந்த பார்வையாளர்களின் வாங்கும் திறனைப் பயன்படுத்தவும், பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்தவும் இணையம் மற்றும் டிஜிட்டல் தளங்களின் பரந்த திறனைத் தழுவுங்கள்.
சமூக ஊடகங்கள் வாயிலாக உங்கள் தயாரிப்புகள் பற்றிய தகவல் உள்ளடக்கங்களைச் சந்தைப்படுத்தி ஆன்லைன் தேடல் இயந்திர தனிப்பயனாக்க (SEO) நுட்பங்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் வலுவான ஆன்லைன் இருப்பை நிறுவுதல், குறிப்பிடத்தக்க நிதி முதலீடுகள் இல்லாமல் உங்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு ஒரு காட்சித்தன்மையை உருவாக்க முடியும்.
வலுவான நெட்வொர்க்கை உருவாக்குதல்
உங்களிடம் இருக்கும் குறைந்தபட்ச நிதியாதாரங்களைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு ஸ்டார்ட்-அப் தொழிலின் வெற்றியிலும் நெட்வொர்க்கிங் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒத்த எண்ணம் கொண்ட நபர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சாத்தியமான வழிகாட்டிகளுடன் தொடர்புகொள்வதன் மூலம், நீங்கள் அறிவு, அனுபவம் மற்றும் வாய்ப்புகளைப் பெறலாம்.
உங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்கும் மதிப்புமிக்க தீர்க்கமான வர்த்தக நுணுக்கங்களைப் பெறுவதற்கும் தொழில்துறை நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்கவும், ஸ்டார்ட்-அப் தொழில் சமூகங்களில் சேரவும், ஆன்லைன் மன்றங்கள் மற்றும் விவாதங்களில் ஈடுபடவும்.
ஒத்துழைப்பு, உத்திசார் கூட்டாண்மையை ஏற்றுக்கொள்ளுதல்
வரையறுக்கப்பட்ட நிதி ஆதாரங்களுடன் செயல்படும் ஸ்டார்ட்-அப் தொழில்களுக்கு ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகள் சக்திவாய்ந்த கருவிகளாக செயல்படும். ஒத்த இலக்குகள் மற்றும் தொலைநோக்குப் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளும் வணிகங்கள் அல்லது தனிநபர்களுடன் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பைத் தேடுங்கள்.
உங்களுக்கான வள ஆதாரங்களை ஒருங்கிணைத்து செலவினங்களைப் பகிர்வதன் மூலம் ஒருவருக்கொருவர் பலத்தை மேம்படுத்துவதன் மூலம், செலவினங்களைக் குறைக்கும் அதேவேளையில் வளர்ச்சியைத் தூண்டும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை நீங்கள் உருவாக்க முடியும்.
அரசுத் திட்டங்களைப் பயன்படுத்துதல்
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு உறுதுணைபுரியும் வகையில் இந்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. உங்களது ஸ்டார்ட்-அப் திட்டமிடலுக்கு ஏற்ப, உங்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள அரசின் துணையையும் நீங்கள் நாடலாம்.
கூடுதலாக சில உத்திகள்
> அரசுத் திட்டங்களைத் தாண்டி ஆய்வு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், தனியார் முதலீட்டாளர்கள் மூலமும் உங்களுக்கான நிதி ஆதாரங்களைப் பெற முயற்சி செய்யலாம்.
> உங்கள் நிறுவனத்துக்கு முழு நேர ஊழியர்களுக்கு பதிலாக ஃப்ரீலான்ஸர்கள், பகுதி நேர ஊழியர்களை நியமித்து செலவை மிச்சப்படுத்தலாம்.
> கிரவுட் ஃபண்டிங் முறையில் உங்கள் நிறுவனத்துக்கான நிதியைத் திரட்ட முயற்சிக்கலாம்.
> பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டும் உங்களுக்குத் தேவையான உறுதுணைகளைப் பெறலாம்.
> வேறு நிறுவனங்களின் இடங்களை உங்கள் நிறுவனனத்துக்காக பகிர்ந்துகொள்ள முயற்சி செய்யலாம். இதனால் பெரிய அளவு செலவு மிச்சம்.
> உங்களுக்கான வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக இருப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அவர்கள் மூலம் பரவும் வாய்வழி விளம்பரங்கள் பெரும் துணைபுரியும்.
> எந்த ஒரு தொழிலிலும் அப்டேட்டாக இயங்குவது மிகவும் முக்கியம். உங்கள் தொழில் சார்ந்து தினமும் புதியனவற்றைக் கற்பதில் கவனம் செலுத்துங்கள்.
ஆக்கம்: சானியா கான் | தமிழில்: ஜெய்
இளம் வயதில் SIP-ல் முதலீடு செய்வதால் கிடைக்கும் 5 முக்கிய ஆதாயங்கள் என்ன?
Edited by Induja Raghunathan