Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரோபோ - உலகையே திரும்பி பார்க்க வைத்த ‘ஐ-டா’

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட ‘ஐ-டா’ என்ற பெண் ரோபோ உரையாற்றியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரோபோ - உலகையே திரும்பி பார்க்க வைத்த ‘ஐ-டா’

Friday October 14, 2022 , 2 min Read

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவுடன் உருவாக்கப்பட்ட ‘ஐ-டா’ என்ற பெண் ரோபோ உரையாற்றியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

AI போன்ற புதிய தொழில்நுட்பங்கள் இங்கிலாந்தின் படைப்புத் துறையை அச்சுறுத்த முடியுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஐடா நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. ஐடா யார் மற்றும் இந்த ரோபோவின் திறன் என்ன என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

யார் இந்த ஐ-டா?

ஐ-டா உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் AI மனித உருவ ரோபோ ஆகும். இந்த ரோபோவுக்கு பிரிட்டிஷ் கணிதவியலாளரும் கணினி நிபுணருமான ஐடா லவ்லேஸ் பெயரிடப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட பெண் உருவ ரோபோவான இது, தனது கண்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களைக் கொண்டு முன்னால் தெரியும் உருவங்களை தத்ரூபமாக வரையக்கூடியது. தற்போது இந்த ரோபோவிற்கு 3 வயதாகிறது.

robo

கார்ன்வாலில் உள்ள இன்ஜினியரிங் ஆர்ட்ஸால் கட்டப்பட்ட ஐடா, மனிதனைப் போன்ற தோல், கண்கள் மற்றும் முடியைக் கொண்டுள்ளது. நுண்ணறிவு தலைமையகத்தின் அறிக்கையின்படி,

ஐடா 3டி அச்சிடப்பட்ட பற்கள், ஈறுகள் மற்றும் முடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஐடாவால் மனிதர்களைப் போலவே கைகள், தலை மற்றும் உடலை சுதந்திரமாக அசைக்க முடியும், முன்னும் பின்னும் சாயவும், நகரவும் முடிவும்.

ஐ-டாவை உருவாக்கியது யார்?

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் நவீன கலை நிபுணரான எய்டன் மெல்லரால் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளார். கலைத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், ஐடா ரோபோ திட்டத்தின் இயக்குனரும் ஆவார். கார்ன்வாலில் உள்ள பொறியாளர் ஆர்ட்ஸால் ஐ-டா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐடாவின் திறன்கள் ஆக்ஸ்போர்டு மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகங்களில் PhD மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐ-டா என்னவெல்லாம் செய்யும்?

ஐ-டாவால் இரண்டு கைகளாலும் ஓவியம் வரைய முடியும், டிஜிட்டல் வடிவங்களை இயற்பியல் வரைபடங்கள் மற்றும் ஓவியங்களாக மாற்றும் திறமை கொண்டது.

robo

ஐடா பென்சில், பேனா மற்றும் பெயிண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி கலைப் படைப்புகளையும் உருவாக்கக்கூடியது. மறைந்த ராணி எலிசபெத்தின் உருவப்படத்தை ஐடா வரைந்துள்ளது. படத்திற்கு 'அல்காரிதம் குயின்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு, ஐடாவின் ஓவியங்கள் லண்டனில் உள்ள வடிவமைப்பு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

ஐ-டா தான் பார்க்கும் உருவாங்களை கணினியின் ஐடிஏ அல்காரிதத்தை பயன்படுத்தி பிசிக்கல் உருவங்களாகவும், ஓவியங்களாகவும் வரைகிறது.

இங்கிலாந்து சட்டமன்றத்தில் ஐ-டா உரை:

ஒரு ரோபோ உலகை எப்படிப் பார்க்கிறது மற்றும் அது படைப்பாற்றலின் எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி ஐ-டா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளது.

நீங்கள் எவ்வாறு கலையை உருவாக்குகிறீர்கள், மனித கலைஞர்கள் உருவாக்குவதிலிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது? UK கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டிஜிட்டல் கமிட்டி ஐடாவிடம் கேள்வி எழுப்பினர்.

Robo

அதற்கு ஐடா,

“நான் அல்கோரிதங்கள், கண்ணில் உள்ள கேமராக்கள், ரோபோட்டிக் கை ஆகியவற்றைப் பயன்படுத்தி வரைகிறேன். நான் கணினி நிரல்களையும் அல்கோரிதங்களையும் சார்ந்து இயக்குகிறேன். எனக்கு உயிரில்லையென்றாலும், என்னால் கலை படைப்புகளை உருவாக்க முடியும். கலைகளை உருவாக்குவதில் இந்த தொழில்நுட்பம் இன்னும் பல மடங்கு வளர்ச்சி அடையும்,” எனத் தெரிவித்துள்ளது.

இந்த உரையாடலின் போது ஐடாவின் தொழில்நுட்பத்தில் லேசான குறைபாடு ஏற்பட்டு, கண் அசைவில் சில மாற்றங்கள் ஏற்படாலும் குழு உறுப்பினர்களின் கேள்விக்கு தெளிவாக பதிலளித்தது.

தொகுப்பு - கனிமொழி