80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர்களுக்கு சிறப்பு வைப்பு நிதி திட்டம் - IDBI வங்கி அறிமுகம்!
ஐடிபிஐ வங்கி, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் நிதித்தேவைகளை கருத்தில் கொண்டு ’ஐடிபிஐ சிரஞ்சீவி- சூப்பர் சீனியர் சிட்டிசன் எப்டி’ என்ற புதிய வைப்பு நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஐடிபிஐ வங்கி, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் நிதித்தேவைகளை கருத்தில் கொண்டு புதிய வைப்பு நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ’ஐடிபிஐ சிரஞ்சீவி- சூப்பர் சீனியர் சிட்டிஜன் எப்டி’ (IDBI Chiranjeevi-Super Senior Citizen FD) எனும் பெயரில் இந்த சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
80 வயது மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இந்த வைப்பு நிதி திட்டம், வங்கியின் வழக்கமான வைப்பு நிதி திட்டங்களை விட, கூடுதலாக 65 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அளிப்பதாக வங்கி இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூத்த குடிமக்கள் வைப்பு நிதி திட்ட விகிதத்தைவிட 15 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக அளிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வைப்பு நிதி திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
- அதிக வட்டி விகிதம்: 8.05% p.a.- 555-நாட்கள் முதலீடு
மற்ற விகிதங்கள்:
- 7.90% p.a. நாட்கள் முதலீடு
- 8.00% p.a. நாட்கள் முதலீடு
- 7.85% p.a. நாட்கள் முதலீடு
இந்தத் திட்டத்தை ஐடிபிஐ வங்கி துணை நிர்வாக இயக்குனர் சுமீத் பக்கா அறிமுகம் செய்தார். மேலும்,
“சூப்பர் சீனியர்களின் நிதித்தேவைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய வைப்பு நிதி திட்டத்தை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறோம். இந்த திட்டம், சூப்பர் சீனியர் பிரிவினருக்கு பாதுகாப்பான முதலீடு வாய்ப்பு மற்றும் நிதி பாதுகாப்பையும், மன நிம்மதியையும் அளிக்கிறது,“ என்று இந்த திட்டம் பற்றி அவர் குறிப்பிட்டார்.
Edited by Induja Raghunathan