பெங்களூருவில் 25,000 இருக்கை அலுவலகம் அமைக்க TCS திட்டம்!
டாடா குழும நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட இந்த இடத்தில் பெரிய அலுவலக மையத்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், அண்மையில் பெங்களூருவில் வாங்கிய நிலப்பகுதியில் நீண்ட கால அடிப்படையில் 25,000 இருக்கை வசதிகளை உருவாக்க இருப்பதாக அதன் தலைமை நிதி அதிகாரி சமீர் செக்சாரியா தெரிவித்துள்ளார்.
டாடா குழும நிறுவனம் ஒன்றிடம் இருந்து ரூ.1,625 கோடிக்கு இந்த நிலத்தை வாங்கியதாக கடந்த வாரம் தெரிவித்த நிலையில், பெங்களூருவின் பிரதான பகுதியான ஒயிட்பீல்டில் அலுவலக விரிவாக்கத்திற்கு இதை பயன்படுத்திக்கொள்ள இருப்பதாக செக்சாரியா கூறினார்.
பெங்களூருவில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் டிசிஎஸ் நிறுவனம் 70,000 ஊழியர்களை கொண்டுள்ளது.
குத்தகை மற்றும் கட்டுமானம் ஆகிய இரண்டு அணுகுமுறைகளையும் நிறுவனம் அலுவலக வசதிக்கு கையாள்வதாகவும், பெங்களூருவை பொருத்தவரை கட்டுமானம் கட்டப்படும் என்றார்.
நிறுவனம் நாடு தழுவிய அளவில் கட்டிடங்கள் அல்லது அலுவலக பரப்பை கட்டி வருகிறது. கோவையில் இத்தகைய ஒரு கட்டிடம் திறக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பி.எஸ்.என்.எல் ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்டவர், அடுத்த சில காலாண்டுகளில் இத்திட்டம் நிறைவடைவதை நோக்கிச்செல்லும் நிலையில், லாப விகிதத்தில் பிரதிபலிக்கும் என்று தெரிவித்தார்.
"பணி தொகுப்பு அளவில் பிஎஸ்.என்.எல் திட்டம் நிறைவடையும் கட்டத்தை நோக்கிச்சென்றாலும், ஒட்டுமொத்த அளவில் லாப விகிதத்தில் இதன் பலன் இருக்கும்," என்றார்.
எனினும், செயல்முறை லாபத்தில் இதன் தாக்கம் தொடர்பான விவரங்களை அளிக்கவில்லை. டிசம்பர் காலாண்டில், நிறுவனம் 24.5 சதவீத செயல்முறை லாபத்தை அறிவித்துள்ளது. செப்டம்பர் காலாண்டு வரை இந்த ஒப்பந்தத்தின் நிறைவு இருக்கும், என்றார்.
ரூ.15,000 கோடியில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி வலைப்பின்னல் வசதியை விரிவாக்கும் வசதிக்கான ஒப்பந்தம் டிசிஎஸ் நிறுவன வருவாய்க்கு கடந்த சில காலாண்டுகளாக உதவு வருகிறது. ஒப்பந்தம் நிறைவை அடுத்து வேறு விதங்களில் அந்த வருவாய் பதிலீடு செய்யப்படும், என்றும் செக்சாரியா கூறினார்.
செய்தி- பிடிஐ
Edited by Induja Raghunathan