'வருங்காலத்தில் வங்கிச் சேவைகளில் GenAI முக்கியமாகிவிடும்' - ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட் பேங்க் நிர்வாக இயக்குநர் வைத்தியனாதன்!
போது, “ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு பேங்கிங்கில் பெரிய பங்கு வகிக்கும். இப்போதுள்ள பேங்கிங் செயலிகள் மெனு அடிப்படையிலான ஆப்களே. எல்லாவற்றிற்கும் பொத்தானை அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். எதிர்காலத்தில் இதற்குத் தேவை இருக்காது.
ஜென் ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவுத் தளம் வருங்காலத்தில் வங்கிச் செயல்பாடுகள், பரிவர்த்தனைகளை உரையாடல் வடிவத்திற்கு மாற்றி விடும் என்று ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட் பேங்க் நிர்வாக இயக்குநர் வி.வைத்யநாதன் நம்பிக்கை தெரிவித்தார். இன்னும் சில காலத்தில் வங்கித் துறையில் பல முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நுட்ப மாற்றங்கள் நிகழும் என்றார்.
யுவர்ஸ்டோரி நிறுவனர் ஸ்ரத்தா சர்மாவிடம் அவர் கூறிய போது,
“ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு பேங்கிங்கில் பெரிய பங்கு வகிக்கும். இப்போதுள்ள பேங்கிங் செயலிகள் மெனு அடிப்படையிலான ஆப்களே. எல்லாவற்றிற்கும் பொத்தானை அழுத்திக் கொண்டிருக்க வேண்டும். எதிர்காலத்தில் இதற்குத் தேவை இருக்காது. இன்னும் கொஞ்ச காலத்தில் செயலியிடம் நீங்கள் ‘நான் ஏதாவது பணம் முதலீடு செய்யலாமா?, எனக்காக சிறந்த நிதித்திட்டத்தைத் தேர்வு செய்து கொடு, எனக்காக நீ முதலீடு செய்ய முடியுமா? என் சகோதரனுக்கு நான் 100 ரூபாய் அனுப்ப முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு அதற்கான தீர்வுகளைப் பெறுவீர்கள். சுருக்கமாகக் கூறினால் உங்கள் வங்கி நடவடிக்கைகள் உரையாடல் வடிவம் பெறும்,” என்றார்.
வெள்ளிக்கிழமை, வைத்தியநாதன் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்கின் மொபைல் செயலியின் புதிய பதிப்பையும் அறிமுகப்படுத்தினார், இது பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கவும், முதலீடு செய்யவும், காப்பீட்டை வாங்கவும், வெகுமதி புள்ளிகளை மீட்டெடுக்கவும் மற்றும் பல்வேறு சேவைகளை ஒரே செயலியில் இருந்து அணுகவும் உதவுகிறது.
கணக்குகளில் சில ஆயிரம் ரூபாய்களை மட்டுமே வைத்திருக்கக்கூடியவர்களுக்கும் பிரீமியம் வங்கிச் சேவையை வழங்குவதை ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் நோக்கமாகக் கொண்டுள்ளது, என்றார் வைத்தியநாதன்.
“அடுத்த இருபதாண்டுகளில் தொழில்நுட்ப, பொருளாதார முன்னேற்றங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பன்மடங்கு வளரச் செய்யும், இதனால் மக்களின் வாழ்க்கை முறை மேம்படும். மக்கள் தங்கள் நிதியை நிர்வகிப்பதில் வங்கிகளின் பங்கு முக்கியமாகி விடும். ஆகவே, எங்களது கூடுதல் சேவைகளை அனைவருக்கும் சென்றடையுமாறு செய்யவிருக்கிறோம்.“
இந்த நாட்டின் வரலாற்றில் இதுவரை நாம் அனுபவித்திராத ஒரு பைத்தியக்கார தருணம் வரப்போகிறது. அடுத்த 30 ஆண்டுகளில் பணக்காரர் ஆக வாய்ப்பு உள்ள அனைவரும், திறமை இருந்தால், முயற்சி செய்தால், பணக்காரர்களாகி விடமுடியும் என்ற தருணமே அது.
35 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பதை இன்று மக்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது. இது இப்போது இருப்பதை விட 10 மடங்கு அதிகம் ஆகும், அதாவது, இந்தியாவின் ஆற்றலில் 90% இன்னும் கட்டியுருவாக்கப்படவில்லை. அடுத்த 20 ஆண்டுகளில் இது நடக்கும்,” என்கிறார் வைத்தியநாதன்.