ஆண்டுக்கு ரூ.1.4 கோடி சம்பளத்துடன் கூகுள் வேலையில் அமரும் ஐஐடி மாணவர்!
அலகாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் டெக்னாலஜியில் எம்.டெக் இறுதியாண்டு படிக்கும் பிரதம் பிரகாஷ் குப்தா, ஆண்டுக்கு ரூ. 1.4 கோடி ரூபாய் பேக்கேஜுடன் பணியமர்த்தப்பட்டுள்ளார்
அலகாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் டெக்னாலஜியில் எம்.டெக் இறுதியாண்டு படிக்கும் பிரதம் பிரகாஷ் குப்தா, ஆண்டுக்கு ரூ. 1.4 கோடி ரூபாய் பேக்கேஜுடன் கூகுள் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) நாட்டு மக்களின் நம்பிக்கை பெற்ற தலைசிறந்த கல்வி நிறுவனமாக உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ஜோமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான நாராயண மூர்த்தி, உலகிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களில் ஐஐடி கல்வி நிலையங்களில் படித்தவர்கள் தான் தலைமை பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர்.
கல்வி தரம் காரணமாக இந்தியாவில் உள்ள ஐஐடி-யில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே மிகவும் உயர்ந்த சம்பளத்திற்கு, பன்னாட்டு நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். தற்போது இந்த பட்டியலில் ஐஐடி அலகாபாத்தில் படித்த மாணவர் ஒருவரும் இணைந்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ.1.4 கோடியை கொட்டிக்கொடுக்கும் கூகுள்:
அலகாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் டெக்னாலஜியில் எம்.டெக் இறுதியாண்டு படிக்கும் பிரதம் பிரகாஷ் குப்தா, ஆண்டுக்கு ரூ. 1.4 கோடி ரூபாய் பேக்கேஜுடன் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவருக்கான மாதாந்திர சம்பளம் சுமார் ரூ. 11.6 லட்சம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லிங்கிடு இன் தளத்தில் எழுதியுள்ள குப்தா,
“கடந்த சில மாதங்களில், உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் சிலவற்றிலிருந்து அற்புதமான வாய்ப்புகள் வந்ததை எண்ணி நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். கூகுள் நிறுவனம் வழங்கிய பணி நியமனத்தை ஏற்றுக்கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், இந்த ஆண்டு எனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, நான் விரைவில் அவர்களின் லண்டன் அலுவலகத்தில் மென்பொருள் பொறியாளராகச் பணியில் சேர உள்ளேன். எனது தொழில் வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்திற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் உள்ள கூகுள் அலுவலகத்தில் மென்பொருள் பொறியாளராக குப்தா பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்த ஆண்டு படிப்பை முடித்த கையோடு குப்தா, பணியில் சேர தயாராகி வருகிறார்.
குப்தாவைத் தவிர, ஐஐடி அலகாபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எம்.டெக் மாணவர்கள் பலருக்கும் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆண்டுக்கு கோடிக்கணக்கான சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது.
அமேசான், ஃபேஸ்புக், ஆப்பிள் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற நிறுவனங்களும் ஐஐடி அலகாபாத்தில் இருந்து திறமையான இன்ஜினியரிங் மாணவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன. அறிக்கையின்படி, ஃபேஸ்புக், ஆப்பிள், கூகுள் மற்றும் அமேசான் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள், மொத்தம் 48 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
குப்தாவிற்கு அடுத்ததாக இரண்டாவது மிகப்பெரிய வேலை வாய்ப்பு அமேசான் நிறுவனத்தில் அனுராக் மகடேவுக்கு என்பவருக்கு கிடைத்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனத்தில் தனது புதிய வேலையை செய்ய அனுராக்கிற்கு ஒரு வருடத்தில் ரூ.1.25 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில், அகில் சிங் என்பவர் உள்ளார், இவருக்கு ரூப்ரிக் நிறுவனம் வருடத்திற்கு ரூ.1.2 கோடி சம்பளத்திற்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், லக்னோவில் உள்ள ஐஐஐடியில் பிடெக் (தகவல் தொழில்நுட்பம்) இறுதியாண்டு படிக்கும் மாணவர் அபிஜீத் திவேதி, அமேசானில் ரூ.1.2 கோடி ஆண்டுச் சம்பளத்திற்கு பணி நியமனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.